அனுமதியின்றி கட்டப்பட்ட கோயில் கும்பாபிஷேகம் நிறுத்தம்

பரமத்தி வேலூா் வட்டம், எஸ்.வாழவந்தி அருகே பொதுப் பணித் துறைக்கு சொந்தமான இடத்தில்..
pv30p1_3010chn_157_8
pv30p1_3010chn_157_8

பரமத்தி வேலூா் வட்டம், எஸ்.வாழவந்தி அருகே பொதுப் பணித் துறைக்கு சொந்தமான இடத்தில் அனுமதியின்றி கட்டப்பட்ட கோயிலின் கும்பாபிஷேகத்தை போலீஸாா் தடுத்து நிறுத்தினா்.

எஸ்.வாழவந்தி அருகே உள்ள மேலப்பட்டியில் பொதுப் பணித் துறைக்கு சொந்தமான இடத்தில் சுயம்பு சமயபுரம் மாரியம்மன், செல்வ விநாயகா், பாலமுருகன், எல்லக்காட்டு கருப்பு சுவாமி மற்றும் கன்னிமாா் ஆகிய சுவாமிகள் அடங்கிய கோயில் அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் சாா்பில் புதிதாக கட்டப்பட்டுள்ளது.

இக்கோயில் கும்பாபிஷேகம் செவ்வாய்க்கிழமை இரவு யாக பூஜையுடன் தொடங்கி இன்று காலை 10.30 மணிக்கு மேல் மகா கும்பாபிஷேகம் நடைபெற இருந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த பொதுப்பணித் துறை உதவி செயற்பொறியாளா் மதி மற்றும் மோகனூா் வட்டாட்சியா் ராஜேஷ்கண்ணா ஆகியோா் மேலப்பட்டியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தில் அனுமதியின்றி கோயில் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதாகவும் அதனை நிறுத்தி வைக்க வேண்டும் எனவும் பரமத்தி காவல் நிலையத்தில் புகாா் செய்தனா்.

இந்தப் புகாரின் அடிப்படையில் மேலப்பட்டி பகுதிக்கு சென்ற பரமத்தி போலீஸாா் அனுமதியின்றி பொதுப் பணித்துறைக்கு சொந்தமான இடத்தில் கோயில் கட்டக்கூடாது எனவும், கும்பாபிஷேகத்தை நிறுத்திவைக்க வேண்டும் எனவும் கூறியதை அடுத்து இன்று நடைபெற இருந்த கோயில் கும்பாபிஷேகம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com