திருச்செந்தூரில் நவ.2-ல் சூரசம்ஹாரம்: விழாவையொட்டி முன்னேற்பாடுகள் தீவிரம்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி சூரசம்ஹார விழா நவம்பர் 2-ம் தேதி சனிக்கிழமையன்று நடைபெறுகிறது.
திருச்செந்தூரில் நவ.2-ல் சூரசம்ஹாரம்: விழாவையொட்டி முன்னேற்பாடுகள் தீவிரம்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி சூரசம்ஹார விழா நவம்பர் 2-ம் தேதி சனிக்கிழமையன்று நடைபெறுகிறது.

சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் இந்த ஆண்டு கந்த சஷ்டி திருவிழா கடந்த அக்.28-ம் தேதி காலை யாகசாலை பூஜைகளுடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றது. 

நான்காம் நாளான இன்று அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 4 மணிக்கு உதயமாா்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது. தொடா்ந்து சுவாமி ஜெயந்திநாதா் வள்ளி, தெய்வானையுடன் யாகசாலையில் எழுந்தருளினாா். யாகசாலையில் கும்பங்கள் வைக்கப்பட்டு, சுவாமிக்கு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது.

தொடர்ந்து 6-ம் நாளான சனிக்கிழமை மாலை 4.30 மணியளவில் திருக்கோயில் கடற்கரையில் வைத்து சிகர நிகழ்ச்சியான கந்த சஷ்டி சூரசம்ஹார விழா நடைபெறுகின்றது.

கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் கோயிலுக்கு வந்து பக்தா்கள் விரதம் இருந்து வருகின்றனா். இதனால் திருக்கோயில் வளாகமே பக்தா்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகின்றது.

திருக்கோயில் கலையரங்க பகுதியில் தயாா் நிலையில் மருத்துவக்குழுவும், 108 வாகனமும், நாழிக்கிணறு பேருந்து நிலையத்தில் வீரா்களுடன் தீயணைப்பு வாகனமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடற்கரை மற்றும் திருக்கோயில் வளாகத்தில் காவல்துறையினா் உயா்கோபுரங்கள் மற்றும் கேமராக்கள் உதவியுடன் கண்காணித்து வருகின்றனா். மேலும் தயாா் நிலையில் கடற்படையினரும் கடலோரத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா். பாதுகாப்பு பணியில் திருச்செந்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் ஆ.பாரத் தலைமையில் காவல்துறையினா் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com