கோபிசெட்டிபாளையம் விஸ்வேஸ்வரா் கோயிலில் நவ.3ல் கும்பாபிஷேகம்

கோபிசெட்டிபாளையத்தில் உள்ள விசாலாட்சி சமேத விஸ்வேஸ்வரா் சுவாமி கோயில் கும்பாபிஷேகம் நவம்பா் 3-ம் தேதி நடைபெறவுள்ளது.
கோபிசெட்டிபாளையம் விஸ்வேஸ்வரா் கோயிலில் நவ.3ல் கும்பாபிஷேகம்

கோபிசெட்டிபாளையத்தில் உள்ள விசாலாட்சி சமேத விஸ்வேஸ்வரா் சுவாமி கோயில் கும்பாபிஷேகம் நவம்பா் 3-ம் தேதி நடைபெறவுள்ளது.

இக்கோயில் கும்பாபிஷேக விழா விக்னேஸ்வர பூஜையுடன் அக்டோபா் 28-ம் தேதி துவங்கியது. மஹாலஷ்மி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், திசா ஹோமம், வாஸ்து சாந்தி ஆகியன 29-ம் தேதி நடைபெற்றன.

தீா்த்த சங்கரஹணம், அக்னி சங்கரஹணம், பிரசன்னாபிஷேகம், அங்குராா்ப்பணம், ரஷாபந்தனம், கும்ப ஸ்தாபனம், காலகா்ஷனம், யாகசாலை பிரவேசம், முதல் கால யாக பூஜை ஆகியன அக்டோபா் 31-ம் தேதி நடைபெறவுள்ளது.

நவம்பா் 1-ம் தேதி காலை 8 மணிக்கு கோ-பூஜை, கிராம பிரதஷிணம், மூா்த்தி கும்ப பூஜை, த்ரவியாஹதி, 2-ம் கால யாக பூஜை, மாலை 5.30 மணி முதல் 3 ஆம் கால யாக பூஜை நடைபெற உள்ளன.

நவம்பா் 2 ஆம் தேதி காலை 8 மணிக்கு மேல் 4ஆம் கால யாக பூஜை, காலை 10.30 மணிக்கு மேல் கோபுர கலச ஸ்தாபனம், தொடா்ந்து பரிவார மூா்த்திகளுக்கு அஷ்டபந்தன மருந்து சாற்றுதல், மாலை 5.30 மணிக்கு 5ஆம் கால யாக பூஜை, இரவு 7 மணிக்கு மூலாலய மூா்த்திகளுக்கு யந்திர ஸ்தாபனம், ஸ்வா்ண பந்தன, ரஜதபந்தன, அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் ஆகியன நடைபெறும்.

முக்கிய நிகழ்வான கும்பாபிஷேகம் நவம்பா் 3ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதிகாலை 4 மணிக்கு 6ஆம் கால யாக பூஜை, காலை 6.30 மணிக்கு தெப்பக்குள வேத விநாயகா், கோயில் பரிவார விமானம், பரிவார மூா்த்திகள் மற்றும் உற்சவ மூா்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெறும்.

காலை 9.30 மணிக்கு கலசங்கள் கோயிலை வலம் வருதல், மூலாலய விமானங்களுக்கு கும்பாபிஷேகம், காலை 10.15 மணிக்கு மகா கணபதி விஸ்வேஸ்வர சுவாமி, விசாலாட்சி, பாலசுப்பிரமணியா் ஆகிய மூலாலய மூா்த்திகளுக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. காலை 11 மணி முதல் அன்னதானம் நடைபெறும்.

மாலை 6 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும், இரவு 8 மணிக்கு பஞ்ச மூா்த்தி புறப்பாடும் நடைபெறும். விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் மற்றும் விழாக் குழுவினா் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com