Enable Javscript for better performance
எதிலும் நியாயமும், நேர்மையும் எதிர்பார்ப்பவர்கள் இவர்கள்: ஆகஸ் மாத பலன்கள்- Dinamani

சுடச்சுட

  

  எதிலும் நியாயமும், நேர்மையும் எதிர்பார்ப்பவர்கள் இவர்கள்: ஆகஸ்ட் மாத பலன்கள்

  Published on : 04th August 2020 06:03 PM  |   அ+அ அ-   |    |  

  ஆகஸ்ட் மாத பலன்கள்

  ஆகஸ்ட் மாத பலன்கள்

  12 ராசி அன்பர்களுக்கும் ஆகஸ்ட் மாத பலன்களை தினமணி ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்து பயன் பெறுங்கள்.

  மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)

  கிரகநிலை:
  தைரிய ஸ்தானத்தில் ராஹூ, சுக்ரன்  - சுகஸ்தானத்தில் சூர்யன், புதன் - பாக்கிய ஸ்தானத்தில் கேது, குரு (வ), சனி (வ), சந்திரன்  - விரைய ஸ்தானத்தில் செவ்வாய் என கிரகங்கள் வலம் வருகின்றன.  

  கிரகமாற்றங்கள்:
  13-08-2020 அன்று காலை 5.11 மணிக்கு செவ்வாய் பகவான் ராசிக்கு மாறுகிறார்.
  13-08-2020 அன்று காலை 7.11 மணிக்கு புதன் பகவான் பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
  17-08-2020 அன்று காலை 5.01 மணிக்கு சூர்ய பகவான் பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
  30-08-2020 அன்று காலை 3.59 மணிக்கு புதன் பகவான் ரண ருண ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
  31-08-2020 அன்று இரவு 9.34 மணிக்கு சுக்கிர பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

  பலன்:
  எந்த ஒரு காரியத்தையும் திறமையாக செய்து முடிக்கும் ஆற்றல் உடைய மேஷராசியினரே நீங்கள் எல்லோராலும் நேசிக்கப்படுவீர்கள். இந்த மாதம் எதிலும்  எச்சரிக்கையாக இருப்பது நன்மை தரும். அதனால் எந்த ஒரு வேலைபற்றியும் அதிகம் யோசிப்பதை தவிர்ப்பது நல்லது. திடீர் பணதேவை உண்டாகலாம். வெளியூரில் இருந்து வரும் கடிதங்கள் மூலம் மகிழ்ச்சி ஏற்படும். 

  குடும்பத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் இருக்கும். கணவன் மனைவிக்கிடையே நல்லுறவு ஏற்படும். குடும்ப உறுப்பினர் உடல்நிலையில் கவனம் தேவை.  கடன் விவகாரங்களில் யோசித்து செயல்படுவது நல்லது.  
  தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு தொழில் வியாபாரம் தொடர்பான விவகாரங்களில் வீண் இடையூறுகள் ஏற்பட்டு நீங்கும். பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகள் மூலம் அனுகூலம் ஏற்பட்டாலும்,சக ஊழியர்களிடம் கவனமாக பழகுவது நல்லது.  

  கலைத்துறையினருக்கு முயற்சிகளின் பேரில்  புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். ஆனால் பொருளாதார ரீதியாக சிறப்பாக இருக்கும். எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்கும். 
  அரசியல்வாதிகள்,  பொதுநல சேவை புரிவோருக்கு பண விஷயம் திருப்திகரமாக இருக்கும். ஆனால் எதிர்பார்த்த பதவி கிடைப்பதில் வாக்குவாதம் ஏற்படலாம். ஆனால்  மாத பிற்பாதி மிகவும் சிறப்பாக இருக்கிறது. 

  பெண்கள் குடும்ப ஒற்றுமைக்காக விட்டுக்  கொடுத்து போக வேண்டியிருக்கும்.  உடல்நலத்தைப் பொறுத்தவரையில் பித்தம் மயக்கம் தொடர்பான பிரச்சனைகள் வரலாம். 
  மாணவர்கள் படிப்பில் தீவிர அக்கறை எடுக்க வேண்டும். 

  அஸ்வினி: 
  இந்த மாதம் தந்தையால் தொல்லைகள் தானாக விலகும். கண்கள் உபத்திரவம் ஏற்படாமல் இருக்க கவனம் தேவை. உஷ்ணத்தை உடம்பில் தங்க விடக் கூடாது. பொதுவில் நீங்கள் உங்கள் கடமைகளைச் சரிவராத செய்தால் நன்மைகள் அதிகமாக கிடைக்கும்.

  பரணி: 
  இந்த மாதம் அறிவாற்றலும் செயல்திறமையும் கூடும். வியாபாரத்தில் அபிவிருத்தி காணலாம். உழைப்பு வீண் போகாது. பொதுநலப்பணியாளர்களுக்கு நற்பெயர் கிட்டும். 

  கார்த்திகை-1: 
  இந்த மாதம் வெளியூர், வெளிநாட்டு தொடர்புகள் ஆக்கம் லாபம் தரும். இரும்பு, எண்ணெய் வகையறாக்கள், தோல் பொருட்கள், ஏற்றுமதி இறக்குமதி இனங்கள் அதிக லாபம் தரும்.
  பரிகாரம்: சனிக்கிழமைதோறும் அருகிலிருக்கும் பெருமாள் கோவிலில் உள்ள கருடமூர்த்தியை வணங்கவும்.

  அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி
  சந்திராஷ்டம தினங்கள்: 26, 27
  அதிர்ஷ்ட தினங்கள்: 19, 20, 21

  {pagination-pagination}

  ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதங்கள் ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்)

  கிரகநிலை:
  குடும்ப ஸ்தானத்தில்  ராஹூ, சுக்ரன்  - தைரிய ஸ்தானத்தில் சூர்யன், புதன் - அஷ்டம ஸ்தானத்தில் கேது, குரு (வ), சனி (வ), சந்திரன்  - லாப ஸ்தானத்தில் செவ்வாய்   என கிரகங்கள் வலம் வருகின்றன.

  கிரகமாற்றங்கள்:
  13-08-2020 அன்று காலை 5.11 மணிக்கு செவ்வாய் பகவான் விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
  13-08-2020 அன்று காலை 7.11 மணிக்கு புதன் பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
  17-08-2020 அன்று காலை 5.01 மணிக்கு சூர்ய பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
  30-08-2020 அன்று காலை 3.59 மணிக்கு புதன் பகவான் பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
  31-08-2020 அன்று இரவு 9.34 மணிக்கு சுக்கிர பகவான் தைரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

  பலன்:
  நேர்மையாகவும், உண்மையாகவும் நடந்த கொள்ளும் ரிஷபராசியினரே நீங்கள் கடுமையாக உழைக்க தயங்காத வராக இருப்பீர்கள். இந்த மாதம் வாழ்வில் எதிர்பாராத திருப்பம் உண்டாகும். புதிய நண்பர்கள் சேர்க்கை உண்டாகும்.  எதிலும் சாதகமான  பலன் கிடைக்கும்.  திறமையாக எதையும் சமாளிப்பீர்கள். திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடக்கும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும். 

  கணவன், மனைவி உறவு மகிழ்ச்சிகரமாக இருக்கும். குடும்பத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். தெய்வ நம்பிக்கை கூடும். உறவினர்கள், நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுவீர்கள்.  

  தொழில் வியாபாரத்தில் மேன்மை உண்டாகும். வியாபார போட்டிகளில் சாதகமான பலன் கிடைக்கும். ஆனால் வாடிக்கையாளர்களை  அனுசரித்து செல்வது நல்லது. 
  உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். நிலுவையில் உள்ள தொகை வந்து சேரும். சிலருக்கு வேலை மாற்றம் உண்டாகும். 

  கலைத்துறையினருக்கு புதிய  ஒப்பந்தங்கள் சற்று தாமதமாக வந்தாலும் முயற்சிகள் எடுக்க வேண்டியிருக்கும். பொருளாதாரம் எதிர்பார்த்தபடி இருக்காது. உடன் இருப்போரால் பிரச்சனைகள் வரலாம். 
  அரசியல்வாதிகள் சீரான பலனை எதிர்பார்க்கலாம். பெண்களுக்கு பணி  செய்து வீண் அலைச்சலும், சொர்வும்  ஏற்படும் . கடன் படாமல்  சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் உருவாகும். மேலதிகாரிகள் முலம் உதவிகள் கிடைக்க பெறுவீர்கள்.  

  மாணவமணிகள் சிரத்தை எடுத்து படிப்பர். உங்கள் முயற்சிக்கு தகுந்த பலன்கள் வந்தே தீரும்.

  கார்த்திகை-2, 3, 4:  
  இந்த மாதம் கணவன் மனைவி இடையே உறவுநிலை சிறக்க விட்டுக் கொடுத்தல் அவசியமாகிறது. கூட்டுத்தொழிலில் அதிகம் அக்கறை தேவை. கலைத்துறையினர், மாதர்கள் ஆகியோருக்கெல்லாம் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். வாழ்க்கைத்துணைவரின் நலனில் அக்கறை செலுத்த வேண்டி வரும்.

  ரோகினி: 
  இந்த மாதம் பொருளாதாரம் சமப்ந்தப்பட்ட துறைகளைச் சேர்ந்தவர்கள், உத்தியோகஸ்தர்கள் ஆகியோர் பொறுப்புடன் செயல்படுவது நல்லது. திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கு ஜாதகம் வலுவான நிலையில் இருக்க வேண்டும். திடீர்ச் செலவுகள் ஏற்படும். சிக்கன நடவடிக்கை அவசியம் தேவை.

  மிருகசீரிஷம்-1, 2: 
  இந்த மாதம் உழைப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து அயராது பாடுபவர்கள் அதிகப் பயன் பெறுவார்கள். பயணத்தால் அனுகூலம் உண்டு. பாதுகாப்பு அவசியம். உடன்பிறந்தவர்களால் அதிக நன்மைகள் ஏற்படும். தென்மேற்கு, மேற்கு திசைகள் நலம் தரும்.

  பரிகாரம்: வெள்ளிக்கிழமைதோறும் சிவன் கோவிலை வலம் வாருங்கள்.
  அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, திங்கள்
  சந்திராஷ்டம தினங்கள்: 1, 2, 28, 29
  அதிர்ஷ்ட தினங்கள்: 22, 23

  {pagination-pagination}

  மிதுனம் (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதம்)

  கிரகநிலை:
  ராசியில்  ராஹூ, சுக்ரன்  - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில்  சூர்யன், புதன் - களத்திர ஸ்தானத்தில் கேது, குரு (வ), சனி (வ), சந்திரன்  - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய் என கிரகங்கள் வலம் வருகின்றன.

  கிரகமாற்றங்கள்:
  13-08-2020 அன்று காலை 5.11 மணிக்கு செவ்வாய் பகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
  13-08-2020 அன்று காலை 7.11 மணிக்கு புதன் பகவான் தைரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
  17-08-2020 அன்று காலை 5.01 மணிக்கு சூர்ய பகவான் தைரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
  30-08-2020 அன்று காலை 3.59 மணிக்கு புதன் பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
  31-08-2020 அன்று இரவு 9.34 மணிக்கு சுக்கிர பகவான் தன ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

  பலன்:
  பேச்சாற்றல் மூலம் எப்படிப்பட்ட சிக்கலான காரியங்களையும் சுமூகமாக முடிக்கும் திறமை உடைய மிதுன ராசியினரே இந்த மாதம் பொருள் வரவையும் சேமிக்க வேண்டும் என்ற எண்ணத்தையும் தரும். நண்பர்கள் மூலம் தக்க தருணத்தில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வெளியூர் பயணங்களால் வீண் அலைச்சலும் செலவும் ஏற்படலாம்.

  குடும்பத்தில் சுப காரியம் நடக்கலாம். சிலருக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி கூடும். பிள்ளைகளால் நன்மை ஏற்படும். அவர்களது திறமைகண்டு மனமகிழ்ச்சி கொள்வீர்கள்.

  தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டி குறையும். வியாபாரம் தொடர்பான பயணங்களால் அலைச்சல் உண்டாகலாம். எதிர்பார்த்த பலன் தாமதப்படும்.

  உத்தியோகத்தில்  மன நிம்மதியும் அதிக நன்மையும் உண்டாகும். மேல் அதிகாரிகளின் ஆதரவை உத்தியோகஸ்தர்கள் பெறுவார்கள்.

  கலைத்துறையினருக்கு புதிய  ஒப்பந்தங்களால் பொருளாதார லாபம் கிடைக்கும். எதிர்பார்த்திருந்த வெற்றி வாய்ப்பு கிடைக்கும். பாராட்டுகளும் வந்து சேரும்.

  அரசியல்வாதிகள், சமூக நல சேவகர்கள் சிறப்படைய மிகுந்த முயற்சி தேவை. 

  பெண்களுக்கு வீண் அலைச்சலும், செலவும் ஏற்பட்டாலும் சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் உருவாகும். எதிர்பார்த்த  உதவிகள் கிடைக்க பெறுவீர்கள். 
  மாணவகண்மணிகளுக்கு அனுகூலமான போக்கே காணப்படுகிறது. நல்ல மதிப்பெண்கள்  கிடைக்கும். வழக்கு விவகாரங்கள் சாதகமாக அமையும். கைவிட்டுப் போன சொத்துக்கள் மீண்டும் வந்து சேரும்.

  மிருகசீரிஷம்-3, 4:  
  இந்த மாதம் செயலில் வேகம் பிறக்கும். அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள் நிறைவேறும். அரசியல்வாதிகள், அரசுப்பணியாளர்கள், நிர்வாகத் துறைகளைச் சேர்ந்தவர்கள், மருத்துவர்கள் ரசாயனத் துறைகளில் உள்ளவர்கள், விஞ்ஞானிகள் ஆகியோர் தங்கள் துறைகளில் வளர்ச்சி காண்பார்கள்.

  திருவாதிரை: 
  இந்த மாதம் நிலம் வீடு மனை வாகனம் போன்ற சொத்துக்கள் சேர்க்கையோ அல்லது அவற்றால் ஆதாயமோ கிடைக்கப் பெறுவார்கள். மாணவமணிகள் தங்கள் திறமைக்குரிய வளர்ச்சியைக் காண்பார்கள். கலைத்துறையினர் எண்ணம் ஈடேறும். சமுதாய நலப்பணியாளர்களுக்குப் பாராட்டுகள் குவியும்.

  புனர்பூசம் - 1, 2, 3: 
  இந்த மாதம் வெளியூர், வெளிநாட்டு தொடர்புகள் ஆக்கம் தரும். பணநடமாட்டம் சீராக இருந்து வரும். இடமாற்றம், நிலைமாற்றம் ஆகியவை சிலருக்கு ஏற்படும். தம்பதிகளுக்குள் ஒவ்வொருவரால் அனுகூலம் ஏற்படும். எதிரிகள் அடங்கிப் போவார்கள்.

  பரிகாரம்: புதன்தோறும் பெருமாளுக்கு நல்லெண்ணெய் மற்றும் நெய் கலந்து விளக்கு ஏற்றவும்.
  அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய்
  சந்திராஷ்டம தினங்கள்: 3, 4, 30, 31
  அதிர்ஷ்ட தினங்கள்: 24, 25

  {pagination-pagination}

  கடகம் (புனர் பூசம் 4ம் பாதம்,பூசம், ஆயில்யம்)

  கிரகநிலை:
  ராசியில் சூர்யன், புதன் - ரண, ருண ஸ்தானத்தில்  கேது, குரு (வ), சனி (வ), சந்திரன்  -  பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய் - அயன, சயன, போக ஸ்தானத்தில்  ராஹூ, சுக்ரன்  என கிரகங்கள் வலம் வருகின்றன.

  கிரகமாற்றங்கள்:
  13-08-2020 அன்று காலை 5.11 மணிக்கு செவ்வாய் பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
  13-08-2020 அன்று காலை 7.11 மணிக்கு புதன் பகவான் தன ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
  17-08-2020 அன்று காலை 5.01 மணிக்கு சூர்ய பகவான் தன ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
  30-08-2020 அன்று காலை 3.59 மணிக்கு புதன் பகவான் தைரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
  31-08-2020 அன்று இரவு 9.34 மணிக்கு சுக்கிர பகவான் ராசிக்கு மாறுகிறார்.

  பலன்:
  தயாளகுணம் படைத்த கடக ராசியினரே நீங்கள் இனிமையாக பேசி மற்றவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். இந்த மாதம் முடங்கி கிடந்த காரியங்கள் அனைத்தும் வேகம் பிடிக்கும். வீண் அலைச்சல் உண்டாகும். எதிர்பாராத செலவு ஏற்படும். புதிய காரியங்களில் ஈடுபடும் போது யோசித்து செய்வது நல்லது.  மன அமைதி பாதிக்கும் படியான சூழ்நிலை ஏற்பட்டு நீங்கும். நண்பர்களிடம் கவனமாக பேசி பழகுவது நல்லது.

  குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்கள் டென்ஷன் ஏற்படுத்துவதாக இருக்கும். அனுசரித்து செல்வது நல்லது. கணவன் மனைவிக்கிடையே  மனம் விட்டு பேசி செயல்படுவது நன்மை தரும். பிள்ளைகள்  எதிர்பார்த்தபடி நடந்து கொள்வார்கள். 

  தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். அதே நேரத்தில் சரக்குகளை அனுப்பும் போது கவனம் தேவை.  
  உத்தியோகத்தில் இருப்பவர்கள் உயர் அதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது.  அலுவலக வேலைகளால் அலைச்சல் உண்டாகும். சக ஊழியர் களிடம் அலுவலகம் தொடர்பான ரகசியங் களை கூறுவதை தவிர்ப்பது நல்லது. 

  கலைத்துறையினருக்கு  புதிய வாய்ப்புகள் வந்து சேரும். ஏற்கனவே இருந்து வந்த பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். நெடுநாளாக வராமல் இருந்த பணம் வரும். 

  அரசியல்வாதிகள் பொதுநல சேவகர்கள், நினைத்ததை நிறைவேற்றிக் கொள்ள வாய்ப்புகள் உண்டு. உங்கள் சொல்லுக்கு பிறர் கட்டுப்படும் நிலையும்  உருவாகும். 

  பெண்களுக்கு குடும்பத்தில் இருந்து வந்த கஷ்டங்கள் தீரும், நிம்மதி பிறக்கும். மருத்துவ செலவு குறையும். 

  மாணவர்கள் கல்வியில் சிறப்பான முன்னேற்றத்தை அடையலாம். கடந்த சில மாதங்களாக இருந்து வந்த மந்தநிலை அடியோடு மாறும்.  சிலருக்கு வெளிநாடு சென்று படிப்பதற்குண்டான காரியங்களை இப்போது தொடங்கலாம்.   

  புனர்பூசம் - 4: 
  இந்த மாதம் கூட்டுத் தொழிலில் ஈடுபாடு உள்ளவர்கள் அதிகம் லாபம் பெறுவார்கள். பிள்ளைகளால் சந்தோஷங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். அதிர்ஷ்ட வாய்ப்புகள் கைகூடி வரும். தாய் உடல் நலனில் கவனம் செலுத்தி வருவது அவசியமாகும். 

  பூசம்: 
  இந்த மாதம் பொருளாதார சிக்கல்கள் விலகும். விவசாயிகளுக்கு புதியதோர் உற்சாகம் பிறக்கும். வியாபாரம் செழிப்படையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு குறைகள் ஏற்பட்டு மறையும். எதிலும் உஷாராக இருப்பது நல்லது. பெரியோர்களின் ஆசிர்வாதங்களைப் பெற்று எந்த காரியத்தையும் ஆரம்பியுங்கள்.

  ஆயில்யம்: 
  இந்த மாதம் முடிந்தவரை தருமப் பணியில் ஈடுபடுவது நல்லது. குடும்பத்தில் சகஜ நிலைமை இருந்து வரும். பெற்றோர் நலம் சிறப்படையும்.

  பரிகாரம்: திங்கள்தோறும் சிவனையும் அம்பாளையும் வணங்குங்கள்.
  அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி 
  சந்திராஷ்டம தினங்கள்: 5, 6, 7
  அதிர்ஷ்ட தினங்கள்: 26, 27

  {pagination-pagination}

  சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)

  கிரகநிலை:
  பஞ்சம ஸ்தானத்தில்  கேது, குரு (வ), சனி (வ), சந்திரன்  -  அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய் - லாப ஸ்தானத்தில்  ராஹூ, சுக்ரன்  - விரைய ஸ்தானத்தில் சூர்யன், புதன்   என கிரகங்கள் வலம் வருகின்றன.

  கிரகமாற்றங்கள்:
  13-08-2020 அன்று காலை 5.11 மணிக்கு செவ்வாய் பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
  13-08-2020 அன்று காலை 7.11 மணிக்கு புதன் பகவான் ராசிக்கு மாறுகிறார்.
  17-08-2020 அன்று காலை 5.01 மணிக்கு சூர்ய பகவான் ராசிக்கு மாறுகிறார்.
  30-08-2020 அன்று காலை 3.59 மணிக்கு புதன் பகவான் தன ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
  31-08-2020 அன்று இரவு 9.34 மணிக்கு சுக்கிர பகவான் விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

  பலன்:
  கருமமே கண்ணாக இருக்கும் சிம்மராசியினரே நீங்கள் எல்லோராலேயும்  நேசிக்க கூடியவராகவும் இருப்பீர்கள். இந்த மாதம் முன்பு தடைபட்ட காரியங்கள் எவ்வித இடையூறுமின்றி நடந்து முடியும். அதனால் நன்மையும் ஏற்படும். நண்பர்கள்  பலவிதங்களிலும் ஆதரவாக இருப்பவர்கள் ஆக்கபூர்வமான யோசனைகள் தோன்றும்.

  கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி நீடிக்கும். பிள்ளைகள் நீங்கள் சொல்வதை கேட்டு நடப்பார்கள். அவர்களுக்கு தேவையானவற்றை வாங்கி கொடுத்து மகிழ்வீர்கள்.  

  தொழில் வியாபாரத்தில் இருந்து வந்த இடையூறுகள் குறையும். கடித போக்குவரத்து மூலம்  அனுகூலம் உண்டாகும். தொழில் விருத்தி அடைவதுடன் ஆதாயமும் 

  உத்தியோகத்தில் இருப்பவர்கள் திருப்தியாக உணர்வார்கள். பணவரத்தும்  இருக்கும் சக ஊழியர்களின் உதவியும் கிடைக்கும். 

  கலைத்துறையினருக்கு மிகப்  பொன்னான காலமிது. சிறிது முயற்சி எடுத்தாலும் வாய்ப்புகள் வந்து குவியும். புதிய ஒப்பந்தங்களை துணிந்து ஏற்றுக் கொள்ளலாம்.

  அரசியல்வாதிகளுக்கு நற்பெயர் எடுப்பத்ற்கு  வாய்ப்புகள் உருவாக்கிக்கொள்ள் சூழ்நிலைகள் உருவாகும். எதிர்பார்த்த பதவிகளுக்காக மிகவும்  வந்து சேரும். 

  பெண்களுக்கு தடைபட்ட காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். மனதெளிவு உண்டாகும். பணவரத்து இருக்கும். 

  மாணவமணிகள் சிறிது சிரத்தை எடுத்தாலே பெருவெற்றி  பெறலாம். அனைத்திலும் நினைத்த மதிப்பெண்கள் கிடைக்கும். உடல் நலம் சிறப்படையும். பித்தம்  மயக்கம் போன்ற உபாதைகள் நீங்கும். சர்க்கரை நோயுள்ளவர்களுக்கு உணவுக் கட்டுப்பாடு தேவை. நெருப்பு தொடர்பான வேலைகளில்  இருப்பவர்களுக்கு மிகுந்த கவனம் தேவை.

  மகம்: 
  இந்த மாதம் கடினமாக உழைத்தால் வெற்றி நிச்சயம். கலைத்துறையில் உள்ளவர்களுக்கு உற்சாக நிலை உண்டு. தசாபுக்தி சாதகமாக இருப்போருக்கு நற்பலன்கள் விரைந்து நடக்கும்.

  பூரம்: 
  இந்த மாதம் குழந்தைகள் விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது. முன்விரோதம் காரணமாக ஒரு சிக்கல் வரலாம். அதனை சமாளிக்கும் ஆற்றல் உங்களுக்கு உண்டு என்பதை உணருங்கள்.

  உத்திரம் - 1: 
  இந்த மாதம் புதிய முயற்சிகளை ஈடுபடும் போது ஆலோசனைகளை மேற்கொள்வது நல்லது. சொந்தபந்தங்கள் நண்பர்களின் ஆதரவு உண்டு.
  பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமைதோறும் அருகிலிருக்கும் சிவன் கோவிலில் உள்ள காலபைரவரை வணங்குங்கள்.

  அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன், வெள்ளி
  சந்திராஷ்டம தினங்கள்: 8, 9
  அதிர்ஷ்ட தினங்கள்: 1, 2, 28, 29

  {pagination-pagination}

  கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்)

  கிரகநிலை:
  சுக  ஸ்தானத்தில்  கேது, குரு (வ), சனி (வ), சந்திரன்  - களத்திர ஸ்தானத்தில் செவ்வாய் - தொழில்  ஸ்தானத்தில்  ராஹூ, சுக்ரன்  - லாப ஸ்தானத்தில்  சூர்யன், புதன் என கிரகங்கள் வலம் வருகின்றன.

  கிரகமாற்றங்கள்:
  13-08-2020 அன்று காலை 5.11 மணிக்கு செவ்வாய் பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
  13-08-2020 அன்று காலை 7.11 மணிக்கு புதன் பகவான் விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
  17-08-2020 அன்று காலை 5.01 மணிக்கு சூர்ய பகவான் விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
  30-08-2020 அன்று காலை 3.59 மணிக்கு புதன் பகவான் ராசிக்கு மாறுகிறார்.
  31-08-2020 அன்று இரவு 9.34 மணிக்கு சுக்கிர பகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

  பலன்:
  நட்புக்கு முதலிடம் கொடுத்து காரியங்களை  செய்யக் கூடியவராக இருக்கும் கன்னிராசியினரே நீங்கள் வசதிகள் இருந்தாலும் சாதாரணமான தோற்றம் உடையவராக இருப்பீர்கள். இந்த மாதம்  விருப்பமானவர்களை சந்தித்து உரையாடி மகிழ்ச்சி அடை வீர்கள். மனதுணிவு உண்டாகும்.  எந்த ஒரு காரியத்தையும் துணிவுடன் செய்து அதிக நன்மை அடைவீர்கள். போட்டி பந்தயங்களில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது. 

  கணவன், மனைவி நெருக்கம் அதிகரிக்கும். ஆனால் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது.  உறவினர்களுடன்  பேசும்போது நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. பிள்ளைகள் நலனில் அக்கறை செலுத்துவீர்கள்.  
  தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. வாடிக்கையாளர்களிடம் கவனமாக பேசுவது  வியாபார விருத்திக்கு உதவும். 

  உத்தியோகத்தில் இருப்பவர்கள் கோபப்படாமல் மேல் அதிகாரிகள் சொன்ன வேலையை  செய்து முடிப்பது நல்லது. சக ஊழியர்கள் பேச்சை கேட்டு நடப்பதை தவிர்ப்பது நன்மை தருவதாக இருக்கும். 
  கலைஞர்களுக்கு  தங்குதடையின்றி புதிய வாய்ப்புகளைப் பெறலாம். புகழ் பாராட்டு வந்து சேரும். 

  அரசியல்வாதிகளுக்கு நற்பெயர் எடுப்பத்ற்குண்டான சூழ்நிலைகள்  உருவாகும். எதிர்பார்த்த பதவிகள் வந்து சேரும். 

  பெண்களுக்கு மனதில் இருந்த பயம் நீங்கி துணிவு உண்டாகும். வீண் வாக்குவாதஙக்ளை தவிர்ப்பது நல்லது. 

  மாணவர்கள் நல்ல நிலைக்கு உயர்த்தப்படுவீர். மேல்படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும். உடல்நலத்தைப் பொறுத்தவரை சிறப்படையும். மனதில் இருந்து வந்த இனம்புரியாத வேதனை மறையும். பிள்ளைகளின் உடல்நலத்தில் சீரான  முன்னேற்றம் இருக்கும்.

  உத்திரம் - 2, 3, 4: 
  இந்த மாதம் தொட்டதெல்லாம் பொன்னாகும். செயல்களை செம்மையுற திருத்தமாக செய்வீர்கள். அற்புதமான நல்ல பலன்கள் கிட்டும். வசதிகள் ஓங்கும். புதிய சொத்துகள் சேரும். வெற்றிகளை சுவைக்கலாம்.

  ஹஸ்தம்: 
  இந்த மாதம் மனை வாய்க்கும் பொன்னான காலம் இது. லாபங்கள் பெருகும். தடைபட்ட சுபகாரிய நிகழ்ச்சிகள் இனிதே நடைபெறும். புதிய கடன்கள் இனி ஏற்படாது. இருக்கும் கடன் சுமையும் குறையும். 

  சித்திரை - 1, 2: 
  இந்த மாதம் வெளிநாடு செல்லும் திட்டம் வெற்றி பெறும். உத்யோகஸ்தர்களுக்கு பதவி, சம்பளம் உயரும். நீங்கள் விரும்பிய இடமாறுதலும் கிடைக்கப் பெறுவீர்கள்.

  பரிகாரம்: முடிந்தவரை வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோவிலுக்குச் சென்று வரவும்.
  அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, புதன், வெள்ளி
  சந்திராஷ்டம தினங்கள்: 10, 11
  அதிர்ஷ்ட தினங்கள்: 3, 4, 30, 31

  {pagination-pagination}

  துலாம் (சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம்  பாதம்)

  கிரகநிலை:
  தைரிய ஸ்தானத்தில் கேது, குரு (வ), சனி (வ), சந்திரன்  - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய் - பாக்கிய ஸ்தானத்தில் ராஹூ, சுக்ரன்  - தொழில் ஸ்தானத்தில் சூர்யன், புதன் என கிரகங்கள் வலம் வருகின்றன.  

  கிரகமாற்றங்கள்:
  13-08-2020 அன்று காலை 5.11 மணிக்கு செவ்வாய் பகவான் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
  13-08-2020 அன்று காலை 7.11 மணிக்கு புதன் பகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
  17-08-2020 அன்று காலை 5.01 மணிக்கு சூர்ய பகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
  30-08-2020 அன்று காலை 3.59 மணிக்கு புதன் பகவான் விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
  31-08-2020 அன்று இரவு 9.34 மணிக்கு சுக்கிர பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

  பலன்:
  எடுத்த காரியத்தை செய்து முடிக்கும் வரை ஊண், உறக்கம் இன்றி கடுமையாக உழைக்கும் துலாராசியினரே நீங்கள் அனைவரையும் அனுசரித்து செல்வதில் திறமை உடையவர்கள். இந்த மாதம் எடுத்த காரியம் கைகூடும். விரோதிகளும் நண்பர்களாவார்கள். மறைமுக எதிர்ப்புகள் விலகும். பணவரத்து திருப்தி தரும், கடன் விவகாரங்களில் எச்சரிக்கை தேவை. குடும்பத்தில் வாழ்க்கை துணை மூலம் ஆதாயம் கிடைக்க பெறுவீர்கள். உறவினர்கள், நண்பர்கள் மூலம் தக்க தருணத்தில் உதவிகள் கிடைக்கும். பிள்ளைகள் வழியில் எதிர்பார்த்த நன்மைகள் உண்டாகும். அவர்களின் ஆதரவும் கிடைக்கும். 

  தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டி குறையும். விரிவாக்கம் செய்வது தொடர்பான ஆலோசனைகளில் ஈடுபடுவீர்கள். பயணங்கள் மூலம் லாபம் கிடைக்க பெறலாம்.  

  உத்தியோகத்தில் இருப்பவர்கள் செய்தொழிலில் முன்னேற்றம் காண்பார்கள். மேலதிகாரிகளால் உத்தியோகஸ்தர்களுக்கு நன்மை உண்டாகும்.  

  கலைத்துறையினருக்கு சீரான நிலையில் இருக்கும். அதிக சிரத்தை எடுத்தால்தான் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.  ஆனால் பணப்புழக்கம் கடந்த காலத்தை விட அதிகம் இருக்கும். 

  அரசியல்வாதிகளுக்கு  மாதமுற்பகுதி நன்றாக இருந்தாலும் பிற்பகுதி பாடுபட வேண்டியிருக்கும்.  

  பெண்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் விலகும். எதிரிகளும் நண்பராவார்கள். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. 

  மாணவமணிகள் தீவிர முயற்சி எடுத்துபடிப்பது அவசியமாகும்.  உடல்நலனைப் பொறுத்தவரை வயிறு உபாதைகள் வந்து வந்து மறையும்.

  சித்திரை - 3, 4: 
  இந்த மாதம் உடல்நிலை சீராகும். சகோதரச் சண்டைகள் தீரும். அரசுத் தேர்வுகளில் குறிப்பிடத்தக்க வெற்றியை ஈட்டுவர். அலுவலகப் பெண்களுக்கு அதிகாரம், பதவியில் உள்ளவர்களின் ஆரோக்யமான உதவிகள் கிடைக்கும். 

  ஸ்வாதி: 
  இந்த மாதம் பல வசதிகளை அடையலாம். எதிர்பாராத பண உதவிகளும் கிடைக்கும். கடும் ஜுரம், விவாதங்கள், கலகம், அடுத்த வீட்டாருடன் சதா சண்டை இவை நேரும். கவனமாக இருக்கவும்.

  விசாகம் - 1, 2, 3: 
  இந்த மாதம் பேச்சில் நிதானத்தைக் கடைபிடிக்கவும். யாருடைய தூண்டுதலுக்கும் செவி சாய்க்காதீர்கள். வியாபாரிகளுக்கு நல்ல விதமாக பண வசதிகள் அனைத்தும் வேண்டியபடி கிடைக்கும்.

  பரிகாரம்: வெள்ளிக்கிழமை தோறும் அருகிலிருக்கும் சிவன் கோவிலில் உள்ள நவக்ரஹ சன்னிதியை ஒன்பது முறை வலம் சென்று வழிபடவும்.
  அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி
  சந்திராஷ்டம தினங்கள்: 12, 13, 14
  அதிர்ஷ்ட தினங்கள்: 5, 6, 7

  {pagination-pagination}
  விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை)

  கிரகநிலை:
  தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் கேது, குரு (வ), சனி (வ) , சந்திரன்  -  பஞ்சம ஸ்தானத்தில் செவ்வாய் - அஷ்டம  ஸ்தானத்தில் ராஹு, சுக்ரன்  - பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன், புதன் என கிரகங்கள் வலம் வருகின்றன.

  கிரகமாற்றங்கள்:
  13-08-2020 அன்று காலை 5.11 மணிக்கு செவ்வாய் பகவான் ரண ருண ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
  13-08-2020 அன்று காலை 7.11 மணிக்கு புதன் பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
  17-08-2020 அன்று காலை 5.01 மணிக்கு சூர்ய பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
  30-08-2020 அன்று காலை 3.59 மணிக்கு புதன் பகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
  31-08-2020 அன்று இரவு 9.34 மணிக்கு சுக்கிர பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

  பலன்:
  அனைவருடனும் நல்ல முறையில் பழகக் கூடிய விருச்சிகராசியினரே உங்களுக்கு வரும் முன்கோபத்தை தவிர்ப்பது முன்னேற்றத்துக்கு உதவும். இந்த மாதம் எதிர்பாராத செலவு உண்டாகும். எதிர்பார்த்த வெற்றி கிடைப்பதில் தாமதம் உண்டாகும். திடீர் பணவரத்தும் இருக்கும். புதிய நண்பர்கள்  சேர்க்கையும் ஏற்படும். மற்றவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். எதிர்ப்புகள் நீங்கும். 

  குடும்ப உறுப்பினர்களிடம் இருந்த மனத்தாங்கல் நீங்கி மகிழ்ச்சியும், சகஜ நிலையும் காணப்படும். கணவன், மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகளிடம் பேசும் போது நிதானமாக பேசுவது நல்லது.

  தொழில் வியாபாரம் சிறிது மந்தமான நிலையில் காணப்பட்டாலும் வருமானம் குறையாத நிலை இருக்கும். போட்டிகள் பற்றிய கவலையை விட்டுவிட்டு  தொழில் வியாபாரத்தில் கவனம் செலுத்துவது நல்லது.  
  உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வெளியூர் மாற்றங்கள் உண்டாகலாம். சக ஊழியர்களிடம் பேசும்போது கோபப்படாமல் இருப்பது நன்மை தரும். 

  கலைத்துறையில் உள்ளவர்களுக்கு சீரான வாய்ப்புகள் வந்தாலும் அவ்வப்போது குழப்பமான மனநிலையும் இருக்கும். முன்யோசனையுடன் திட்டமிடல் அவசியம். 

  அரசியல்வாதிகள், சமூக சேவையில் உள்ளவர்களுக்கு மாத முற்பகுதி மிகுந்த உற்சாகமாக இருக்கும். பிற்பாதி கவனமுடன் இருக்க வேண்டி வரும்.

  பெண்களுக்கு மற்றவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். பண வரத்து தாமதப்படும். கோபத்தை தவிர்ப்பது நல்லது.   

  மாணவ கண்மணிகளுக்கு கல்வியில் புதிய உற்சாகமும் நம்பிக்கையும் கிடைக்கும். நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும்.

  விசாகம் - 4: 
  இந்த மாதம் தடைப்பட்டு பாதியில் நின்ற தொழில் கட்டுமானம் தற்போது முடிவடையும். அரசியல்வாதிகளுக்கு எதிரிகளை வசமாக்கும் நூதன கவர்ச்சி தெரியும். அனைவரும் உங்கள் வழிக்கு வருவார்கள். எதையும் தைரியத்துடன் செயல்படுத்துவீர்கள்.

  அனுஷம்: 
  இந்த மாதம் குழந்தைகளால் நன்மை பெறுவீர்கள். வாழ்க்கைத்துணை வழி உறவினர்களின் உதவிகள் கிடைக்கும். பொன், பொருள் சேரும். மனதில் அமைதி குறையும். எல்லா விதத்திலும் பரபரப்பு தொற்றிக் கொள்ளும்.

  கேட்டை: 
  இந்த மாதம் பங்கு மார்க்கெட் நல்ல லாபத்தை தரும். அரசியல்வாதிகளுக்கு பெண்கள் உதவியால் உயர் பதவி கிடைக்கும். பிள்ளைகளால் அனுகூலமும் லாபமும் உண்டு.

  பரிகாரம்: செவ்வாய்கிழமை தோறும் அருகிலிருக்கும் முருகன் கோவிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றவும்.
  அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி
  சந்திராஷ்டம தினங்கள்: 15, 16
  அதிர்ஷ்ட தினங்கள்: 8, 9

  {pagination-pagination}
  தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)

  கிரகநிலை:
  ராசியில்  கேது, குரு (வ), சனி (வ), சந்திரன்  -  சுக ஸ்தானத்தில் செவ்வாய் - களத்திர ஸ்தானத்தில்  ராஹு, சுக்ரன்  - அஷ்டம ஸ்தானத்தில் சூர்யன், புதன் என கிரகங்கள் வலம் வருகின்றன.

  கிரகமாற்றங்கள்:
  13-08-2020 அன்று காலை 5.11 மணிக்கு செவ்வாய் பகவான் பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
  13-08-2020 அன்று காலை 7.11 மணிக்கு புதன் பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
  17-08-2020 அன்று காலை 5.01 மணிக்கு சூர்ய பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
  30-08-2020 அன்று காலை 3.59 மணிக்கு புதன் பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
  31-08-2020 அன்று இரவு 9.34 மணிக்கு சுக்கிர பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

  பலன்:
  நிதானமாகவும், செம்மையாகவும் காரியத்தை செய்து வெற்றிபெறும் தனுசு ராசியினரே உங்களை எல்லோரும் நேசிப்பார்கள். இந்த மாதம் எதிர்ப்புகள் நீங்கி எதிலும் உற்சாகம் உண்டாகும். மனமகிழ்ச்சிக்காக பணம் செலவு செய்ய தயங்க மாட்டீர்கள். நண்பர்கள் சேர்க்கையும் அவர்களால் உதவியும் கிடைக்கும். 

  குடும்பத்தில் வாழ்க்கை துணை மூலம் மகிழ்ச்சி உண்டாகும். உஷ்ண சம்பந்தமான நோய்வரக்கூடும். எச்சரிக்கையாக இருப்பதன் மூலம் அதை தடுக்கலாம். பிள்ளைகள் மனம் மகிழும் படி நடந்து கொள்வார்கள். வீண் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. 

  தொழில் வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்க பெறுவீர்கள். வியாபாரம் தொடர்பான வெளியூர் பயணங்கள் சாதகமான பலன்தரும். 

  உத்தியோகத்தில்  இருப்பவர்களுக்கு வேண்டிய உதவிகள் மேல் அதிகாரிகள் மூலம் கிடைக்கும். பொறுப்புகள் கூடும். சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வும் கிடைக்கக்கூடும். 

  கலைத்துறையில் இருப்பவர்களுக்கு மிகுந்த உகந்த காலகட்டமிது. கைக்கு எட்டிய அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தி முன்னேற்றப் பாதையில் செல்வீர்கள். 

  அரசியல்வாதிகள், சமூக சேவகர்களுக்கு மாத முற்பாதியில் பலன்கள் நன்மை தீமை என கலந்து கிடைத்தாலும் பிற்பாதி சிறப்பாக இருக்கும். 

  பெண்களுக்கு தாராளமாக பணம் செலவு செய்து தேவையானவற்றை வாங்குவீர்கள். மனதில் உற்சாகம் பிறக்கும். தேவையான உதவிகளும் கிடைக்கும். 

  மாணவக் கண்மணிகளுக்கு படிப்பில் நிதானமும் கவனமும் தேவை. 

  மூலம்:  
  இந்த மாதம் எவரைப் பற்றியும் எதிர்மறை கருத்துக்களை வெளியிடாதீர்கள். குடும்பத்தில் பிரிவு ஏற்படலாம். தற்செயலான விபத்துக்களை சந்திக்க நேரும். உணவு விஷயத்தில் கடும் எச்சரிக்கை தேவை. 

  பூராடம்: 
  இந்த மாதம் இரவு, அதிகாலை நேரங்களில் பிரயாணங்களை தவிர்க்க வேண்டும். சாலைவழி உணவிடங்களில் நேரம் தாண்டி இரவு உணவு உட்கொள்ள வேண்டாம்.

  உத்திராடம் - 1: 
  இந்த மாதம் எதிர்பார்த்த பணவரவுகள் குறித்த காலத்தில் கிடைக்கப் பெறாது. பெற்றோர் சம்மதிக்காத திருமணங்களை இந்த காலத்தில் தள்ளிப் போடுவது நல்லது.

  பரிகாரம்: வியாழக்கிழமை தோறும் உங்களுக்குப் பிடித்தமான  குரு கோவிலுக்குச் சென்று வணங்கி வாருங்கள். 
  அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்
  சந்திராஷ்டம தினங்கள்: 17, 18
  அதிர்ஷ்ட தினங்கள்: 10, 11

  {pagination-pagination}

  மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதம், திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்)

  கிரகநிலை:
  தைரிய ஸ்தானத்தில் செவ்வாய் - ரண, ருண  ஸ்தானத்தில்  ராஹூ, சுக்ரன்  - களத்திர ஸ்தானத்தில் சூர்யன், புதன் - அயன, சயன,  போக ஸ்தானத்தில் கேது, குரு (வ), சனி (வ), சந்திரன்   என கிரகங்கள் வலம் வருகின்றன.

  கிரகமாற்றங்கள்:
  13-08-2020 அன்று காலை 5.11 மணிக்கு செவ்வாய் பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
  13-08-2020 அன்று காலை 7.11 மணிக்கு புதன் பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
  17-08-2020 அன்று காலை 5.01 மணிக்கு சூர்ய பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
  30-08-2020 அன்று காலை 3.59 மணிக்கு புதன் பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
  31-08-2020 அன்று இரவு 9.34 மணிக்கு சுக்கிர பகவான் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

  பலன்:
  எல்லோராலும் பாராட்டப்படும் வகையில் நடந்து கொள்ளும் மகர ராசியினரே இந்த மாதம் வரவை போலவே செலவும் இருக்கும். வெளியூர்  பயணங்களால் அலைச்சலும், எதிர்பாராத பொருள் இழப்பும் இருக்கும். எனவே கவனமாக இருப்பது நல்லது.  திடீர் கவலை ஏற்பட்டு நீங்கும். எதிர்ப்புகளை சமாளிக்கும் போது கவனம் தேவை. குடும்பத்தில் நல்ல காரியங்கள் நடக் கும். நிம்மதி ஏற்படும். 
  குடும்ப உறுப்பினர்கள் பற்றிய கவலைகள் நீங்கும்.  குழந்தைகள் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.  வாழ்க்கை துணையின் ஆதரவும் கிடைக்கும். உறவினர்கள் வருகையும் அவர்களால் உதவியும் கிடைக்க பெறுவீர்கள். 

  தொழில் வியாபாரம் தொடர்பான செலவுகள் கூடும்.  கூட்டு தொழில் செய்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். வியாபாரம் தொடர்பான முயற்சி வீண் முயற்சியாக இருந்தாலும் பின்னாளில் அதற்கான பலன் கிடைக்கும். 

  உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் வேலை சுமை இருக்கும். எப்படியும் செய்து முடித்து நல்ல பெயர் வாங்கி விடுவீர்கள். 

  கலைஞர்கள் நல்ல புகழும் பெருமையும் கிடைக்கப் பெறுவர். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். 

  அரசியல்வாதிகள், சமூக சேவை செய்வோர் நல்ல செல்வாக்கோடு காணப்படுவர். உங்கள் கௌரவம் உயரும். விரும்பிய பதவி கிடைக்கும். 

  பெண்களுக்கு வீண் அலைச்சலும் எதிர்பாராத செலவும் உண்டாகும். கவனம் தேவை. முயற்சிகள் தாமதப்படும். 

  மாணவ மணிகள் சிறப்பான பலனைக் காணலாம். நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும். மேல் படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும். வழக்கு விவகாரங்கள் உங்களுக்கு சாதகமாக  இருக்கும். கைவிட்டுப் போன பொருட்கள் மீண்டும் கிடைக்கும். 

  உத்திராடம் - 2, 3, 4: 
  இந்த மாதம் அரசியல்வாதிகள் தங்கள் நிலையை கருத்தில் கொள்வதோடு வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்தவும். வழக்குகள் வெற்றியை தரும். புதிய வீடு கட்டும் முயற்சி நிறைவேறும். 

  திருவோணம்: 
  இந்த மாதம் வாகனம் வாங்குவீர்கள். வாடிக்கையாளர்களின் வருகை அதிகரிப்பதால் வியாபாரிகளின் லாபம் பெருகும். முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும். தொட்டதெல்லாம் பொன்னாகும் காலம்.

  அவிட்டம் - 1, 2: 
  இந்த மாதம் பல பிரச்னைகள் ஒரே நேரத்தில் சிரமம் தந்தாலும் ஏற்றுக் கொண்டு முயற்சியினால் வெற்றிகளை ஈட்டுவீர்கள். ரியல் எஸ்டேட் துறையினர் முன்னேற்றம் காண்பர்.

  பரிகாரம்: சனிக்கிழமை தோறும் அருகிலிருக்கும் பெருமாள் ஆலயத்திற்கு சென்று வாருங்கள். நீராஞ்சன தேங்காய் தீபம் ஏற்றவும்.

  அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்
  சந்திராஷ்டம தினங்கள்: 19, 20, 21
  அதிர்ஷ்ட தினங்கள்: 12, 13, 14

  {pagination-pagination}

  கும்பம் (அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3  பாதம்)

  கிரகநிலை:
  தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய் - பஞ்சம ஸ்தானத்தில்  ராஹூ, சுக்ரன்  - ரண ருண ரோக ஸ்தானத்தில் சூர்யன், புதன் - லாப ஸ்தானத்தில் கேது, குரு (வ), சனி (வ) , சந்திரன்  என கிரகங்கள் வலம் வருகின்றன.

  கிரகமாற்றங்கள்:
  13-08-2020 அன்று காலை 5.11 மணிக்கு செவ்வாய் பகவான் தைரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
  13-08-2020 அன்று காலை 7.11 மணிக்கு புதன் பகவான் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
  17-08-2020 அன்று காலை 5.01 மணிக்கு சூர்ய பகவான் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
  30-08-2020 அன்று காலை 3.59 மணிக்கு புதன் பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
  31-08-2020 அன்று இரவு 9.34 மணிக்கு சுக்கிர பகவான் ரண ருண ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

  பலன்:
  மனத்துணிவும், எதையும் செய்து முடிக்கும் ஆற்றலும் அதிகம் பெற்ற கும்பராசியினரே இந்த மாதம் வீண்கவலை ஏற்பட்டு நீங்கும். நினைத்த காரியத்தை செய்து முடிப்பதில் வேகம் காட்டுவீர்கள். பணவரத்து திருப்திகரமாக இருக்கும். அதே நேரத்தில் எதிர்பாராத செலவும் ஏற்படும். உடமைகளை கவனமாக பாதுகாத்துக் கொள்வது நல்லது. 

  குடும்பத்தில் வீண் பிரச்சனைகள் தலைதூக்கும். அவற்றை லாவகமாக கையாண்டு சமாளிப்பீர்கள். கணவன், மனைவிக்கிடையே பழைய விஷயங்களை பேசாமல் இருப்பதன் மூலம் ஒற்றுமை இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. குழந்தைகள் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். 

  தொழில் வியாபாரத்தில் ஏற்படும் பணதேவையை சரிகட்ட நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். தொழிலில்  முன்னேற்றம் காண தேவையான பணிகளில் ஈடுபடுவீர்கள். 

  உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலகம் தொடர்பான வேலைகளில் அலைச்சல் இருக்கும். ஆனால் செய்த வேலைக்கு நல்ல பலனை எதிர்பார்க்கலாம். 

  கலைத்துறையினருக்கு தீவிர முயற்சிகளின் பேரில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். உங்கள் திறமைக்கு ஏற்ற புகழ் பாராட்டு கிடைக்காமல் போகலாம். 

  அரசியல்வாதிகள், சமூக சேவகர்கள் பிரதிபலனை எதிர்பார்க்காமல் உழைக்க வேண்டியிருக்கும். 

  பெண்களுக்கு பணவரத்து திருப்திகரமாக இருக்கும். பயணங்களின் போது பொருட்களின் மீது கவனம் தேவை.  எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தாமதம் ஏற்படலாம். 

  மாணவர்கள் அதிக சிரத்தை எடுத்து படிப்பது நல்லது.

  அவிட்டம் - 3, 4: 
  இந்த மாதம் எதிலும் உணர்ச்சிவசப்பட வேண்டாம். கிடைக்கப் பெற்ற பணத்தை தவறான வழிகளில் முதலீடு செய்ய நேரும். ஆகவே மிகுந்த எச்சரிக்கை தேவை.

  சதயம்: 
  இந்த மாதம் வாழ்நாள் முழுவதும் ஏற்படவிருக்கும் கஷ்டங்களை அறியாமல் தவறான முடிவுகளில் இறங்க வேண்டாம். புதைபொருள் ஆராய்ச்சியில் உள்ளவர்கள் அரிய முயற்சிகளில் வெற்றி பெறுவர். 

  பூரட்டாதி - 1, 2, 3: 
  இந்த மாதம் குடும்பங்களில் குழந்தை பாக்யம் சந்தோஷப்படுத்தும். அரசுத் துறையில் பணி இடை நீக்கம் பெற்றவர்கள் மீட்சி பெறுவர். மனைவி வழியில் அனுகூலம் உண்டு. 

  பரிகாரம்: சனிக்கிழமைதோறும் சனிஹோரையில் அருகிலிருக்கும் சிவன் கோவிலுக்கு சென்று வாருங்கள். 
  அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன்
  சந்திராஷ்டம தினங்கள்: 22, 23
  அதிர்ஷ்ட தினங்கள்: 15, 16

  {pagination-pagination}

  மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

  கிரகநிலை:
  ராசியில் செவ்வாய் - சுக ஸ்தானத்தில்  ராஹூ, சுக்ரன்  - பஞ்சம ஸ்தானத்தில் சூர்யன், புதன் - தொழில்  ஸ்தானத்தில் கேது, குரு (வ), சனி (வ), சந்திரன்  என கிரகங்கள் வலம் வருகின்றன.

  கிரகமாற்றங்கள்:
  13-08-2020 அன்று காலை 5.11 மணிக்கு செவ்வாய் பகவான் தன ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
  13-08-2020 அன்று காலை 7.11 மணிக்கு புதன் பகவான் ரண ருண ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
  17-08-2020 அன்று காலை 5.01 மணிக்கு சூர்ய பகவான் ரண ருண ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
  30-08-2020 அன்று காலை 3.59 மணிக்கு புதன் பகவான் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
  31-08-2020 அன்று இரவு 9.34 மணிக்கு சுக்கிர பகவான் பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

  பலன்:
  தூய உள்ளம் படைத்த மீன ராசியினரே நீங்கள் எதிலும் நியாயமும், நேர்மையும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பீர்கள். இந்த மாதம் சொன்ன சொல்லை காப்பாற்ற பாடுபட வேண்டி இருக்கும். திடீர் கோபம் உண்டாகும். கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. அடுத்தவர்களால் இருந்த தொல்லைகள் குறையும். 

  குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கலாம். உறவினர்களிடம் நிதானமாக பேசுவது நல்லது. கணவன், மனைவிக்கிடையே இருந்த இடைவெளி குறையும். பெரியோர் ஆதரவும் கிடைக்கும். பிள்ளைகளிடம் இனிமையாக பேசுவது நல்லது. 

  தொழில் வியாபாரம் தொடர்பான விஷயங்களில் கூடுதல் அலைச்சல் இருந்தாலும் முடிவில் சாதகமான பலன் கிடைக்கும்.  வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. 

  உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலக வேலை தொடர்பான கவலை ஏற்பட்டு நீங்கும். அதிக நேரம் உழைக்க வேண்டி இருக்கும். மேல் அதிகாரிகள்  ஆதரவு கிடைக்கும். ஆனால் கவனமாக இருப்பது நல்லது.   

  கலைஞர்கள், புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவர். புகழ் பாராட்டு கிடைக்கும். பொதுநல சேவகர்கள் நல்ல முன்னேற்றம் காண்பர். 

  அரசியல்வாதிகளுக்கு மாத முன்பகுதி நன்றாக இருக்கும். எதிர்பார்த்த பதவியை அடையலாம். 

  பெண்களுக்கு கோபத்தை குறைத்து நிதானமாக பேசுவதன் மூலம் நன்மை ஏற்படும். கூடுதலாக எதிலும் உழைக்க வேண்டி இருக்கும்.  மாணவர்கள் தொடர்ந்து சிறப்பான நிலையில் இருப்பர். நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும். பலருக்கு வெற்றி நிச்சயம். 

  பூரட்டாதி - 4: 
  இந்த மாதம் பொதுவாக தொல்லைகளும் பிரிவினையும் நீங்கி ஒற்றுமையும் உயர்வும் ஏற்படும். தைரியம் கூடும். படிப்பில் கவனம் தேவை. மிகவும் எச்சரிக்கையுடன் படித்தால் சாதனைகள் புரிய வாய்ப்புண்டு். பிள்ளைகளின் வளர்ப்பில் கவனம் தேவை.

  உத்திரட்டாதி: 
  இந்த மாதம் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மாத்திரை செலவினங்கள் குறையும். கணவன் மனைவி கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மறையும். கவனம் தேவை. 

  ரேவதி: 
  இந்த மாதம் வீண் வாக்குவாதம் வேண்டாம். நண்பர்கள் மூலம் அனுகூலம் ஏற்படும். தேவையற்ற வீண் விவாதங்களில் ஏடுபட வேண்டாம். அண்டை அயலாருடன் இருந்து வந்த பிணக்கு மறையும்.

  பரிகாரம்: அருகிலிருக்கும் ஏதேனும் கோவிலுக்கு சென்று நல்லெண்ணெய் தீபம் ஏற்றவும்.
  அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன், வெள்ளி
  சந்திராஷ்டம தினங்கள்: 24, 25
  அதிர்ஷ்ட தினங்கள்: 17, 18

  TAGS
  prediction

  உங்கள் கருத்துகள்

  Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

  The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

  flipboard facebook twitter whatsapp