What is Dosh in astrology?
What is Dosh in astrology?

சாபமா, தோஷமா?

நிறைய மக்களுக்கு ஒரு கேள்விக்குறியாக உள்ளது யார் விட்ட சாபமோ நம் வாழ்க்கை தொடர்ந்து கஷ்டத்தை நோக்கிச் செல்கிறது. சாபம் என்றால் என்ன? அவை எதனால் நமக்கு ஏற்படுகிறது? என்று விளக்கமாகப் பார்ப்போம். 

நிறைய மக்களுக்கு ஒரு கேள்விக்குறியாக உள்ளது யார் விட்ட சாபமோ நம் வாழ்க்கை தொடர்ந்து கஷ்டத்தை நோக்கிச் செல்கிறது. சாபம் என்றால் என்ன? அவை எதனால் நமக்கு ஏற்படுகிறது? என்று விளக்கமாகப் பார்ப்போம். 

சாபம் யார் யாரால் நமக்கு ஏற்படும் என்பதைப் பார்க்கும்பொழுது குலசாமி வழிபாடு செய்யாதபோது (குலதெய்வ சாபம்), பித்ருக்களுக்கு செய்யவேண்டியதைச் செய்யாமல் இருப்பது(பித்ரு சாபம்), பெண்களுக்கு துன்பம் கொடுக்கும்பொழுது முக்கியமாக மனைவி, தாய் மற்றும் சகோதரிகளுக்கு (பெண் சாபம்), இறக்கும் தருவாயில் இருக்கும் ஒரு ஆத்மாவின் மனதை துயரப்படுத்தும் பொழுது (பிரேத சாபம்), பிராமணர் மற்றும் குருவின் மனதைப் புண்படுத்தும்போது (குரு / பிராமணர் சாபம்), பாம்புகளை துன்படுத்தும்பொழுது (சர்ப்ப சாபம்) என்று முக்கிய சாபவிளைவுகள் ஆகும். இதுதவிர இன்னும் பல சாபங்கள் தோஷங்களும் இருக்கின்றன அவை பிரம்ம சாபம், கோ சாபம், பூமி சாபம், சுமங்கலி சாபம், கங்கா சாபம், விருட்ச சாபம், ரிஷி சாபம் என்று அடுக்கிக்கொண்டு போகலாம்.

இவை அணைத்து அவரவர் முற்பிறவியின் தொடர்புகொண்டு இப்பிறவியில் சேர்ந்து நமக்கு விளைவுகளை ஏற்படுத்தும். உதாரணமாக ஒருவருக்கு பெண் சாபம் இருந்தால் அதே சாபமானது தாயாக, மனைவியாக மற்ற பெண்ணாக இருந்து நமக்குத் தீராத  துன்பத்தைக் கொடுப்பார். நம் பிறவி எடுப்பதற்கு முன்பே எந்தவித கர்மா அனுபவிக்கக் காத்திருக்கிறோமோ அதற்கேற்ப இந்த பிறவியின் பிறப்பு அதைக் கழிக்கத்தான் என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.

இன்னும் ஒரு சில ஜாதகத்தில் ஆராய்ந்தால் உண்மை புலப்படும். ஒருவர் எவ்வளவுதான் கஷ்டப்பட்டாலும் பணம் அவர்களுக்குக் கிட்டாது அதற்குக் காரணம் பித்ருக்கள் மற்றும் குலசாமி சாபம் என்று கூறலாம்.

எடுத்துக்காட்டாக சிலருக்குப் பல நாள்களாக சர்ப்பம் கனவில் அல்லது நேரில் பார்க்கும்பொழுது 90% இவர்களுக்கு சர்ப்ப தோஷம் அல்லது குலசாமி சாபம் இருப்பதாக அர்த்தம். சர்ப்ப சாபம் எவ்வாறு என்று பார்க்கும் பொழுது தொழில் மற்றும் கர்ம பாவம் மற்றும் களத்திர பாவங்களிலிருந்து சர்ப்பம் என்று குறிப்பிடப்படும் ராகு கேதுக்களின் நட்சத்திரங்கள், அல்லது  ராகு, கேதுக்கள் அந்த சேர்க்கையில் வலுத்து ஜாதகத்தில் அமைந்திருக்கும். 

அதேபோல் அந்த ஜாதகர்  துன்பத்தை நோக்கிச் செல்வர். அது ஒருவர் ஜாதகத்தில் நான்காம் பாவம் வலுக் குறைவாகக் களத்திரகாரகன் உடன் ராகு கேதுக்கள் சேர்க்கை பெரும்பொழுது அவர் சொந்தக்காரர்கள் மற்றும் கணவன் அல்லது மனைவி அனைவரும் அவருக்குத் துன்பத்தைக் கொடுப்பார்கள். அதன் ஒரு காரணியாக ஒரு ஜாதகத்தில் இவ்வாறு பாவ தொடர்புகள் இருந்தது. அந்த ஆராய்ச்சியில் தொடர்ச்சியாக அந்த ஜாதகரின் மூத்த பெரியோர்கள் அதிக பாம்புகள் கொன்று குவித்து, பிறகு தான் அந்த பரம்பரை வீடு கட்டியதாகத் தெரிய வந்தது. இந்த மூத்த உறுப்பினர்கள் தொடர்ச்சியாக அந்த ஜாதகருக்கு சர்ப்ப சாபம் பெற்றவராகத் தொடர்ந்தது. அவர் தந்தை ஒரு நான்கு கால் உயிரினத்தால் ஏற்பட்ட கடியால் பல மாதங்களுக்குப் பிறகு அந்த விஷத்தன்மை அதிகமாகி இறந்தார். சர்ப்ப சாபம் என்பது மரணம் வரை நம்மை அழைத்துச் செல்லும் என்பது உண்மை.

இவை அனைத்தும் அவரவர் ஜாதகத்தில் நன்கு தென்படும். எடுத்துக்காட்டாக சுபரான குருவோடு பாவ கிரகம் அந்தத்த பாவத்தில் இருக்கும்பொழுது துன்பத்தை ஏற்படுத்தும். குரு சனி சேர்க்கை என்பது ஒருபக்கம் யோகம் என்று சொல்வர். ஆனால் சனி வலுத்து குரு வலு குறைவாக இருந்தால் அதுவே பாவ தோஷத்தில் வந்துவிடும். பலருக்கு இது ஒருவகை குரு சாபமாகும். அந்தந்த பாவத்தைப் பொறுத்து பலனைக் கணிக்கலாம். எந்த பாவத்திற்கு கழிக்க பிறவி எடுத்திருக்கிறோம் அது கட்டாயம் அனுபவிக்க வேண்டும். முடிந்தவரை சந்தோஷமாக மாற்ற என்ன வழி என்று பார்க்கவேண்டும். 

எனக்கு தெரிந்த தம்பதியர்கள் மகிழ்ச்சியாக இருந்தனர். திடீரென்று அவர்களுக்கு மனதில் பிரச்னை ஏற்பட்டு பிரிய நினைத்து, விவாகரத்தும் ஆனது. ஆனாலும், கர்மாவில் இருந்து தப்பித்துவிட முடியுமா என்ன? கணவர் மறுமணம் செய்துகொண்டு அந்த கர்மாவை கழிக்க மேலும் பல கஷ்டங்களை அனுபவித்ததே வேடிக்கை. அந்த ஜாதகர் மீளமுடியாத துன்பத்தை அனுபவித்தார். சாகும் அளவிற்கு அவர் மனம் சென்றுவிட்டது. அந்த நபரின் வம்ச வழியில் பெண் சாபம் அதிகமாக இருந்தது. அவர் முக்கியமாக களத்திரக்கார வழியில் பாதிப்பு இருக்கும் என்பது அப்பொழுதுதான் உணர்ந்தார். 

ஜாததகத்தில் பெண் கிரகங்களான சுக்கிரன், சந்திரன் பாதிக்கப்பட்டாலும் 4, 7, 11 இடங்கள் வலுகுன்றிய நிலையிலிருந்தாலும் கேதுவோடு சம்பந்தப்பட்டாலும், கர்ம பாவத்தில் அடிபட்டிருந்தால் இவர்கள் முற்பிறவி கர்மாவால் தெரிந்தோ தெரியாமலோ பெண்களின் சாபம் பெற்றிருக்கலாம். இவர்களுக்குப் பெண்களால் எந்தவகை திருப்தியோ நன்மையோ அடையமாட்டார்கள். இந்த பெண் சாபம் என்பது தோஷமாக தன் பரம்பரையாகத் தொடரும். இந்த வகை சாபம் அவர்கள் முற்பிறவியில் அல்லது மூதாதையர்கள் காலத்தில் பெண்களை அவமானப்படுத்துவது, மனைவியை துன்பப்படுத்துவது, பெண்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்வது, தாயாரைக் கவனிக்காமல் இருப்பது, ஒரு பெண்ணை ஏமாற்றி மறுமணம் செய்வது, காரணமில்லாமல் விவாகரத்து செய்வது, மருமகளைக் கொடுமைப்படுத்துவது, சகோதரிகளை இழிவுபடுத்துவதும், பெண்களுக்குத் துர்மரணம் ஏற்படுத்துவது என்று இருந்தால் அவர்களுக்கு இந்த கலியுகத்தில் தங்கள் குடும்பத்தினரையே தாக்கும். 

ஒரு சில குடும்பத்தில் பார்த்தால் அப்பா, அம்மா திருமணம் ஆனபிறகு பிரிந்து இருப்பார்கள். மகன் அல்லது மகள் திருமணம் செய்தாலும் திருமண முறிவில் இருப்பார்கள் அல்லது சிறு வயது துர்மரணம் ஏற்பட்டிருக்கும். பெண்களால் சாபம் பெற்ற ஜாதகத்தைப் பார்த்தால் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு கால புருஷ தத்துவப்படி ஏழாம் இடம், ஏழாம் வீட்டு அதிபதி கேதுவோடு சேர்க்கை, பெண் கிரகங்கள் சுக்கிரன் சந்திரன் பலமற்ற தன்மையில் இருக்கும், சுக்கிரன் பாவ கிரகங்களோடு சிக்கி இருப்பதும், குரு பலம் பெறாமல் இருப்பதும், அயனம் என்று சொல்லும் 12-ம் இடத்தில் உஷ்ண கிரகங்கள் பாதிப்பு மற்றும் சுக்கிரனால் ஏற்படும் தோஷங்கள் என்று தொடர்ந்து அவர்கள் குடும்பத்தில் தொல்லைகளை ஏற்படுத்தும். இது முற்பிறவி சாபம் நான் என்ன செய்யமுடியும் என்று கேட்பது என்காதில் விழுகிறது. அந்த சாபத்தினை குறைக்க இப்பிறவியில் நாம் முற்படவேண்டும்.  
   
பிரேத சாபம் என்பது இறக்கும் தருவாயில் ஒருவர் தவறாகப் பேசுவதும், இறந்தவர் அருகிலிருந்து சந்தோஷப்படுவதும் அல்லது துர்ப்பேச்சுகள் பேசுவதும் இருந்தால் பிரேத சாபத்தை ஏற்படுத்தும். பிரேத சாபத்தை உங்கள் ஜாதகத்தில் எவ்வாறு அறிந்துகொண்டு அதனை போக்கலாம் என்று பார்க்கலாம். 

ஒரு ஜாதகத்தில் பிரேத சாபத்தினை மாந்தியைக் கொண்டு தெரிந்துகொள்ளலாம். மாந்தியின் பார்வை பெற்ற கிரகங்களும், மாந்தியுடன் சேர்ந்த கிரகங்களும், நான்காம் பாவத்தில், நான்காம் அதிபதியுடன் அல்லது பாதகாதிபதியுடன் மாந்தி சேர்ந்திருந்தாலோ சேர்ந்தாலோ பிரேத சாபம் உண்டாகும். அந்த பிரேதம் எவ்வகையில் இறந்து சாபத்தை உண்டாக்கியது என்பதையும் ஜாதகத்தில் அறியலாம்.

ஜாதகத்தில் உள்ள சாபங்களை ஆராய்ந்து, கண்டறிந்து அதற்குரிய பரிகாரங்களைச் செய்தால் வாழ்க்கையில் ஏற்படக்கூடிய தடைகளிலிருந்து விடுபடலாம். நீண்ட நாள்களாகத் தடைபட்டுக் கிடக்கும் காரியங்கள் அனைத்தும் விரைவில் கைகூடும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com