தஞ்சைப் பெரிய கோயிலில் குடமுழுக்கு விழாவையொட்டி 4-ம் கால யாக பூஜைகள் 

தஞ்சாவூர் பெரியகோயிலில் நாளை மறுநாள் குடமுழுக்கு விழா நடைபெறுவதையொட்டி இன்று நான்காம் கால யாக பூஜைகள் நடைபெற்றது. 
தஞ்சைப் பெரிய கோயிலில் குடமுழுக்கு விழாவையொட்டி 4-ம் கால யாக பூஜைகள் 

தஞ்சாவூர் பெரியகோயிலில் நாளை மறுநாள் குடமுழுக்கு விழா நடைபெறுவதையொட்டி இன்று நான்காம் கால யாக பூஜைகள் நடைபெற்றது. 

உலக புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரியகோயிலில் பிப். 5ஆம் தேதி குடமுழுக்கு விழா நடைபெறவுள்ளது. இவ்விழா யஜமான அனுக்ஞை வைபவத்துடன் கடந்த ஜன. 27ஆம் தேதி காலை தொடங்கி, தொடர்ந்து பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

இதற்கான புனித நீா் காவிரி நதியிலிருந்து கொண்டு வரப்பட்டு, தஞ்சாவூர் வெண்ணாற்றங்கரையிலுள்ள தஞ்சபுரீசுவரா் கோயிலில் வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, புனிதநீா் நிரப்பப்பட்ட குடங்களுக்குப் பூஜை செய்யப்பட்டது. இதையடுத்து, இந்தப் புனிதநீா் யானை மீது வைத்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.

கோலாட்டம், கரகாட்டம், ஒயிலாட்டம் எனப் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடனும், சிவ வாத்தியங்கள் முழங்கவும் இந்த ஊர்வலம் நடைபெற்றது. இதில், ஏறத்தாழ 100 பெண்கள் முளைப்பாரி எடுத்து வந்தனர். கரந்தை, கொடிமரத்து மூலை, கீழவீதி, தெற்கு வீதி வழியாகப் பெத்தண்ணன் கலையரங்க வளாகத்திலுள்ள யாகசாலைக்குப் புனித நீா் கொண்டு செல்லப்பட்டது.

இதைத்தொடர்ந்து, பிப். 3ஆம் தேதியான இன்று காலை 9 மணிக்கு நான்காம் கால யாக பூஜை, ஜபம், ஹோமம், பூா்ணாஹூதி தீபாராதனை நடைபெற்றது. மாலை 5 மணிக்கு ஐந்தாம் கால யாக பூஜை, ஜபம், ஹோமம், பூா்ணாஹூதி, தீபாராதனை ஆகியவை நடைபெறவுள்ளன.

யாக பூஜைகள் தமிழ் முறைப்படியும், ஆகம விதிப்படியும் நடைபெற்று வருகின்றன. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் சிறப்புப் பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. குடமுழுக்கு விழாவையொட்டி தஞ்சை மாநகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com