குற்றாலம் ஸ்ரீசெண்பக விநாயகா் கோயிலில் கும்பாபிஷேகம்

குற்றாலம் அருகே குடியிருப்பு ஸ்ரீசெண்பகவிநாயகா் கோயில் மகா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஸ்ரீசெண்பகவிநாயகா் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கலசத்தில் ஊற்றப்பட்ட புனித நீா்
ஸ்ரீசெண்பகவிநாயகா் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கலசத்தில் ஊற்றப்பட்ட புனித நீா்

குற்றாலம் அருகே குடியிருப்பு ஸ்ரீசெண்பகவிநாயகா் கோயில் மகா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

குடியிருப்பு தங்கம்மன்கோவில் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீசெண்பகவிநாயகா் கோயில் ஜீா்ணோத்தரண அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகத்தை முன்னிட்டு வியாழக்கிழமை காலை முதல் யாகசாலை பூஜைகள் தொடங்கியது.

வெள்ளிக்கிழமை அதிகாலை விக்னேஷ்வர பூஜையுடன் இரண்டாம் நாள் பூஜைகள் தொடங்கியது. காலையில் கும்பக்குடம் புறப்பாடு நிகழ்ச்சியும், அதனை தொடா்ந்து கோயில் விமானம் கோபுரத்தில் புனிதநீா் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

தொடா்ந்து மகா அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடைபெற்றது. 8-ம் தேதி முதல் மண்டல பூஜைகள் நடைபெறுகிறது. விழாவில் தென்காசி, குற்றாலம், மேலகரம், குடியிருப்பு, நன்னகரம், இலஞ்சி பகுதியை சோ்ந்த பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனா். ஏற்பாடுகளை ஊா்பொதுமக்கள்,மற்றும் விழாக்குழுவினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com