மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் தெப்பத் திருவிழா: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் தெப்பத் திருவிழா இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். 
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் தெப்பத் திருவிழா: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் தெப்பத் திருவிழா இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். 

பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் தெப்பத் திருவிழா ஜனவரி 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் சுவாமி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் சித்திரை வீதிகளில் திருவீதி உலா நடைபெற்றது.

தெப்ப உற்சவத்தின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான கதிர் அறுப்பு திருவிழா மதுரை சிந்தாமணி பகுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து முக்கிய நிகழ்வான தெப்பத் திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது. இதற்காக கோயிலில் இருந்து சுவாமி அம்மன் காலை புறப்பாடாகி தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோயிலில் எழுந்தருளினர். அங்கு தீபாரதனை பூஜைகளுக்குப் பிறகு மாரியம்மன் தெப்பக்குளத்தில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளினர். தெப்பக்குளத்தைச் சுற்றிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தெப்பத்தில் எழுந்தருளிய சுவாமி அம்மனை தரிசனம் செய்தனர். 

வைகை ஆற்றிலிருந்து பனையூர் கால்வாய் வழியாக தெப்பக்குளத்திற்கு தண்ணீர் வருவது வழக்கம். ஆனால் காலப்போக்கில் வைகை ஆற்றின் படுகை தரைமட்டத்திலிருந்து மிகவும் தாழ்வாக போனதாலும் கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டதாலும் தெப்பக்குளத்திற்கு இயற்கையான நீர்வரத்து தடைப்பட்டது.

இந்நிலையில் வைகை ஆற்றில் தற்போது அமைக்கப்பட்டுள்ள தடை காரணமாக பனையூர் கால்வாயில் வழியாக தெப்பக்குளத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து 40 ஆண்டுகளுக்குப் பிறகு இயற்கையான நீர்வரத்து தெப்பக்குளத்துக்குக் கிடைத்தது. இதன்மூலம் நீர் நிறைந்த தெப்பக்குளத்தில் தெப்பத் திருவிழா நடைபெற்றது மதுரை மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com