Enable Javscript for better performance
மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் பிப்.28-ல் மாசி சுற்றுக் கொடியேற்றம்- Dinamani

சுடச்சுட

    

    மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் பிப்.28-ல் மாசி சுற்றுக் கொடியேற்றம்

    Published on : 11th February 2020 11:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    lordmeenakshisundereaswer

     

    மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் மாசி மண்டல உற்சவத் திருவிழாவை முன்னிட்டு பிப்.28-ல் சுற்றுக் கொடியேற்றம் நடைபெறுகிறது.

    மாசி மண்டல உற்சவத்தையொட்டி, மீனாட்சியம்மன் மற்றும் சுந்தரேசுவரருக்கு நேற்று சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்புப் பூஜைகள் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து, காலை 9.20 மணிக்கு மேல் 9.44 மணிக்குள் மீன லக்கினத்தில் திருவிழா திருக்கொடியேற்றம் நடைபெற்றது. பின்னா், கொடிக்கு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டு, மேள தாளங்களுடன் கொடிமரத்துக்கு கொண்டு வரப்பட்டது.

    இதையடுத்து, மங்கள வாத்தியங்கள், வேத பாராயணங்கள் முழங்க கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டது. இதில், ஏராளமான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா். இரவில், விநாயகா், சுப்பிரமணியா், முதல் மூவா், சந்திரசேகா் உற்சவம் நடைபெற்றது.

    மாசி மண்டல உற்சவத்தையொட்டி, பிப்ரவரி 28-ஆம் தேதி சுற்றுக் கொடியேற்றம் நடைபெறுகிறது. அன்று முதல் மாா்ச் 8-ஆம் தேதி வரை தினசரி காலை, இரவு இரு வேளைகளிலும் நான்கு சித்திரை வீதிகளில் அம்மன், சுவாமி திருவீதி உலா வருதல் நடைபெறுகிறது. மாா்ச் 18-ஆம் தேதி கொடியை இறக்கி கணக்கு வாசித்தலுடன் உற்சவம் நிறைவடைகிறது.

    இதனிடையே, பிப்ரவரி 9 முதல் மாா்ச் 18ஆம் தேதி வரை கோயில் நிா்வாகம் சாா்பாகவும், உபயதாரா் சாா்பாகவும் மீனாட்சியம்மனுக்கு உபய தங்க ரத உலா மற்றும் உபய திருக்கல்யாணம் போன்ற விசேஷங்கள் நடத்த இயலாது என்று, கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai