Enable Javscript for better performance
Get promoted to these zodiacs! Weekly benefits- Dinamani

சுடச்சுட

  

  பதவி உயர்வு கிடைக்கப்போகுது இந்த ராசிக்காரர்களுக்கு! இந்த வாரப் பலன்கள்

  Published on : 17th February 2020 01:16 PM  |   அ+அ அ-   |    |  

  prediction

  12 ராசிக்காரர்களுக்குமான இந்த வார (பிப்ரவரி 14 - பிப்ரவரி 20) பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்து பலனடைவோம். 


  மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

  மன சஞ்சலங்கள் நீங்கி, தெளிவுகளைக் காண்பீர்கள். வழக்குகளில் வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் நிலவி வந்த சிக்கல்கள் விலகி, ஒற்றுமை அதிகரிக்கும். தாய்வழி உறவினர்களால் செலவுகளும் அலைச்சலும் உண்டாகும்.

  உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்புக்குத் தகுந்த ஊதியம் கிடைக்கும். சக ஊழியர்களிடம் எதிர்பார்த்த உதவிகளைப் பெறுவீர்கள். வியாபாரிகள் எச்சரிக்கையுடன் இருந்தால் நஷ்டத்திலிருந்து தப்பிக்கலாம். புதியவர்களிடம் அதிக நெருக்கம் கூடாது. விவசாயிகள் சலிப்பில்லாமல் உழைத்தால் பலன்கள் பெறலாம். புதிய குத்தகை முயற்சிகளில் இறங்க வேண்டாம். 

  அரசியல்வாதிகளின் செயல்திறன் அதிகரிக்கும். தொண்டர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். எதிரிகளை இனம் கண்டு ஒதுக்குவீர்கள். கலைத்துறையினர் புதிய தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி, திறமையை வெளிப்படுத்துவர்.

  பெண்மணிகளுக்கு கணவருடனான ஒற்றுமை சுமாராக இருக்கும். கணவரது உடல்நிலையும் சீராக இராது. மாணவமணிகள் படிப்பில் நன்கு கவனம் கொள்ள தியானம் செய்யவும். உடற்பயிற்சிகளையும் மேற்கொள்ளவும்.

  பரிகாரம்: திங்களன்று அருகம்புல் கொண்டு விநாயகரை வழிபடவும். 

  அனுகூலமான தினங்கள்: 14, 15. 

  சந்திராஷ்டமம்: 16, 17.

  {pagination-pagination}

  ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)

  தொழிலில் உற்சாகத்துடன் ஈடுபடுவீர்கள். இனிமையாகப் பேசி காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். உடல் சோர்வைப் பெரிதுபடுத்தாமல் பாடுபட்டு உழைப்பீர்கள். தோல் சம்பந்தமான வியாதிகள் கட்டுப்படும்.

  உத்தியோகஸ்தர்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற சக அலுவலர்களிடம் அன்பு பாராட்டுங்கள்.  கடந்த காலங்களில் தொடர்ந்த பிரச்னைகளிலிருந்து விடுபடுவீர்கள்.

  வியாபாரிகளுக்கு கடன் குறையும். புதிய முதலீடுகளில் நீங்கள் ஈடுபடலாம். விவசாயிகளுக்கு கையிருப்புப் பொருள்கள் மீது அக்கறை அதிகரிக்கும். நிலத்தின் மீது போதிய கவனம் செலுத்தவும். 

  அரசியல்வாதிகள் உட்கட்சிப் பூசலினால் கவலை அடைவீர்கள். தொண்டர்களை அரவணைத்துச் செல்லுங்கள். கலைத்துறையினருக்கு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். நல்ல வருமானம் கிடைக்கும். 


  பெண்மணிகளுக்கு ஒற்றுமை மேலோங்கும். ஆன்மிக பயணம் மேற்கொள்வீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். மாணவமணிகள் கனவுகள் பலிக்கும். கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும். 

  பரிகாரம்: ஸ்ரீராமரை வணங்கி வர நலன்கள் கூடும். 

  அனுகூலமான தினங்கள்: 14, 16. 

  சந்திராஷ்டமம்: 18, 19, 20.

  {pagination-pagination}
  மிதுனம் (மிருகசீரிஷம்3-ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

  பொருளாதார சூழ்நிலை சிறப்பாக இருக்கும். கடன் தொல்லைகள் நீங்கும். சொத்துகளால் ஆதாயம் உண்டாகும். நினைத்த காரியங்கள் ஈடேறும். இறைவழிபாட்டிலும் யோகா போன்றவற்றிலும் கவனம் செலுத்தி மனச்சஞ்சலத்தை தவிர்க்கவும்.

  உத்தியோகஸ்தர்களுக்கு எதிலும் தடைகள் ஏற்படும். சக ஊழியர்களும் ஆதரவாக நடந்து கொள்வார்கள். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்கள் சற்று லாபகரமாக இருக்கும். புதிய தொழில் தொடங்க இது ஏற்ற காலமாகும். விவசாயிகளுக்கு பூமியால் லாபம் ஏற்படும். கால்நடைகளால் லாபமும் உண்டு.

  அரசியல்வாதிகளுக்கு அனைத்து விஷயங்களிலும் முன்னேற்றகரமான சூழல் அமையாது. மனதில் ஏற்படும் சஞ்சலமும் மேலிடத்தின் அதிருப்தியும் குழப்பத்தில் ஆழ்த்தும். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் பெறுவதில் சிறிய தடைகள் ஏற்படும். 

  பெண்மணிகள் குடும்பத்துக்காக விட்டுக்கொடுத்து நடந்து கொள்ளவும். செலவுகளைக் குறைத்துக் கொள்ளவும். மாணவமணிகளுக்கு படிப்பில் ஏற்படும் இடையூறுகளைச் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும்.

  பரிகாரம்:  பிள்ளையாரையும் முருகரையும் அர்ச்சித்து வழிபடவும். 

  அனுகூலமான தினங்கள்: 15, 16. 

  சந்திராஷ்டமம்: இல்லை.

  {pagination-pagination}
  கடகம் (புனர்பூசம்4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

  பொருளாதாரம் சீர்படும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகளும் ஏற்படும். சமயோஜித புத்தியால் தக்க தருணங்களில் சரியான முடிவுகளை எடுப்பீர்கள். சமூகத்தில் உயர்ந்தவர்களின் உதவியால் பிரச்னைகளுக்கு முடிவு ஏற்படும்.  

  உத்தியோகஸ்தர்கள் சிறப்பாக பணியாற்றுவார்கள். எதிர்பார்த்த பதவி உயர்வு, இடமாற்றம் கிடைக்கும். அலுவலகத்தில் எவரையும் நம்பி வார்த்தைகளைக் கொட்டாதீர்கள்.

  வியாபாரிகள் வியாபாரத்தில் சிறு இடையூறு தோன்றினாலும் சமாளித்து விடுவீர்கள். பணிகள் அனைத்தும் சாதகமாகவே நிறைவேறும். விவசாயிகள் வயல்வரப்பு பிரச்னைகளில் முடிவைக் காண்பீர்கள். 

  அரசியல்வாதிகளுக்கு சமூகத்தில் செல்வாக்கு உயரும். நண்பர்கள்போல் பழகும் எதிரிகளிடம் உஷாராக இருக்கவும். கலைத்துறையினரைத்தேடி புதிய வாய்ப்புகள் வரும். ரசிகர்களின் ஆதரவு பெருகும். 

  பெண்மணிகள் உற்றார் உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி  நிலவும். சிக்கன நடவடிக்கை தேவை. மாணவமணிகள்தேவையில்லாத வீண்பிரச்னைகளில் சிக்கிக்கொள்ள நேரிடலாம். படிப்பில் கூடுதல் அக்கறை செலுத்தவும்.

  பரிகாரம்: செவ்வாயன்று துர்க்கையை வழிபட்டு வரவும். 

  அனுகூலமான தினங்கள்: 14, 17. 

  சந்திராஷ்டமம்: இல்லை.

  {pagination-pagination}
  சிம்மம் (மகம், பூரம்,உத்திரம்  முதல் பாதம் முடிய)

  பணிகள் திட்டமிட்டபடி முடியும். புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். உற்றார் உறவினர்களிடம் எதிர்பார்த்த  ஆதரவைப் பெறுவீர்கள். உடன்பிறந்தோருக்கு உதவிகள் செய்வீர்கள். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும்.

  உத்தியோகஸ்தர்களுக்கு வேலையிலிருந்த பிரச்னைகள் குறையும். மேலதிகாரிகள் மனக்கசப்பு நீங்கி, நட்புடன் நடந்து கொள்வார்கள். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்கள் நன்றாக இருக்கும்.  புதிய செலவுகள் செய்து கடைகளைச் சீரமைப்பீர்கள்.

  விவசாயிகளுக்கு நல்ல வருமானம் கிடைக்கும். மாற்றுப்பயிர் செய்வதன்மூலம் மேலும் லாபத்தை அள்ளலாம். 

  அரசியல்வாதிகள் அனைத்துக் காரியங்களிலும் வெற்றிவாகைச் சூடுவார்கள். நண்பர்களால் வாழ்க்கையில் திருப்பங்கள் ஏற்படும். கலைத்துறையினருக்கு திறமைகள் அதிகரிக்கும். புதிய ஒப்பந்தங்களில் வெற்றி பெற முயற்சிகள் செய்வீர்கள். 

  பெண்மணிகள் குடும்பத்தில் அமைதியைக் காண்பீர்கள். கணவரின் பாராட்டுகளால் மகிழ்வீர்கள். மாணவமணிகள் நன்றாகப் படித்து நல்ல மதிப்பெண்கள் பெற கடின முயற்சி தேவை.

  பரிகாரம்: திருவேங்கடநாதனை வணங்கி வருதல் நன்மை தரும். 

  அனுகூலமான தினங்கள்: 15, 18. 

  சந்திராஷ்டமம்:  இல்லை.

  {pagination-pagination}
  கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

  வேலைப்பளு அதிகரிக்கும். அவற்றை சரிவரச் சமாளித்து தக்க தருணத்தில் முடித்து விடுவீர்கள். புதிய துறைகளில் ஈடுபடுவீர்கள். மனக்குழப்பங்களிலிருந்து விடுபடுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். 

  உத்தியோகஸ்தர்களுக்கு வருமானம் சுமாராக வரும். வேலைகள் அனைத்தும் இழுபறியாக முடியும். அனைவருடனும் சகஜமாகப் பழகவும்.

  வியாபாரிகளுக்கு வியாபார ரீதியாக இருந்து வந்த அலைச்சலும் பதற்றமும் குறையும். வாடிக்கையாளர்கள் வருகை இருக்கும். விவசாயிகளுக்கு நண்பர்கள் உதவி செய்வார்கள். உற்பத்தி நிலத்தில் அக்கறை காட்டினால் லாபம் பார்க்கலாம். 

  அரசியல்வாதிகளின் அந்தஸ்து உயரும். புதிய பொறுப்புகளை ஏற்றுக்கொள்வீர்கள். கலைத்துறையினருக்கு ஆடம்பரச் செலவுகளை செய்து மகிழ்வீர்கள். ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பெண்மணிகள் கணவரிடம் ஒற்றுமையோடு இருப்பீர்கள். குடும்பத்தினரை அனுசரித்து நடந்துகொள்ளவும். 

  மாணவமணிகள் கல்வி உயர்வுக்காக செய்யும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். சிலருக்கு கல்வி சம்பந்தமான இடமாற்றமும் கிடைக்கும்.

  பரிகாரம்: திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப்பெருமாளை வழிபடவும். 

  அனுகூலமான தினங்கள்: 14, 18. 

  சந்திராஷ்டமம்:  இல்லை.

  {pagination-pagination}

  துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

  பொருள்வரவு சீராகவே இருக்கும். உடல்நலத்தில் கவனம் தேவை. உற்றார் உறவினர்களை அனுசரித்துச் செல்லவும். அனாவசியப் பயணங்களைத் தவிர்க்கவும். உடன்பிறந்தோர் மேன்மை அடைவார்கள். அவர்களால் உதவிகள் கிடைக்கும்.

  உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலக வேலைகளில் பிடிப்பில்லாத சூழல்கள் தென்படும். எல்லா பணிகளையும் நன்றாக முடிப்பீர்கள். வியாபாரிகளுக்கு பணவரவு சீராக இருக்கும். யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்துப் போடாதீர்கள். விவசாயிகளுக்கு மகசூல் திருப்திகரமாக இருக்கும். எதிர்பாராத பணவரவைக் கொண்டு கடன்களை அடைப்பீர்கள். 

  அரசியல்வாதிகள்மீது களங்கம் ஏற்படுத்த சிலர் முயற்சிப்பார்கள். புத்திக்கூர்மையால் சமாளித்துவிடுவீர்கள். எதையும் பேசுவதற்கு முன்னால் இருமுறை யோசித்துப்பின் பேசவும்.

  கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் உருவாகும். சக கலைஞர்கள் உதவ முன்வருவர். பெண்மணிகளுக்கு சோதனைகள் கூடும். பணவரவும் அளவோடு இருக்கும். மாணவமணிகள் விளையாட்டுகளில் வெற்றி பெறுவார்கள்.

  பரிகாரம்: தேய்பிறை அஷ்டமியில் பைரவரை வணங்கிவரவும். 

  அனுகூலமான தினங்கள்: 15, 19. 

  சந்திராஷ்டமம்:  இல்லை.

  {pagination-pagination}
  விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல்  அனுஷம், கேட்டை முடிய)

  சமுதாயத்தில் மதிப்பு, மரியாதை உயரும். வேலைகளைத் தள்ளிப்போடாமல் உடனுக்குடன் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் சுப விரயங்கள் ஏற்படும். ஆன்மிக விஷயங்களில் நாட்டம் அதிகரிக்கும். வீண் பேச்சுளைத் தவிர்க்கவும். 

  உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகப் பிரச்னைகள் படிப்படியாகக் குறையும். பதவி உயர்வு பெறுவதற்கான முயற்சிகள் வெற்றி பெறும்.

  வியாபாரிகள் எதிர்பார்த்த லாபத்தை அள்ளுவீர்கள். பிரயாணங்களின் போது சற்று கவனத்துடன் இருக்கவும். விவசாயிகளுக்கு மகசூல் பெருகும். கையிருப்புப் பொருள்கள் மீது அக்கறை செலுத்துவீர்கள்.  

  அரசியல்வாதிகள் தீட்டும் திட்டங்கள் அனைத்தும் வெற்றி பெறும். எதிரிகளுக்குத் தகுந்த பதிலடி கொடுப்பீர்கள்.

  கலைத்துறையினர் கடுமையாக உழைத்து நற்பலனை அடைவீர்கள். 
  கைநழுவிப்போன ஒப்பந்தங்கள் கைவந்து சேரும். 

  பெண்மணிகள் குடும்பத்தில் நிம்மதியைக் காண்பீர்கள். கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும். மாணவமணிகள் கடுமையாக உழைத்துப் படித்தால் தேர்வில் நல்ல மதிப்பெண்களைப் பெறலாம். 

  பரிகாரம்: செவ்வாயன்று செந்திலாண்டவரை வணங்கி வரவும். 

  அனுகூலமான தினங்கள்: 17, 18. 

  சந்திராஷ்டமம்:  இல்லை.

  {pagination-pagination}

  தனுசு (மூலம், பூராடம், உத்திராடம்  முதல் பாதம் முடிய)

  பொருளாதார நிலையில் முன்னேற்றம் காணப்படும். தந்தையின் உடல்நலத்தில் சிறு பாதிப்புகள் வரலாம். செலவுகள் அதிகரிக்கும். சிக்கனத்தைக் கடைப்பிடியுங்கள். நண்பர்கள், உடன்பிறந்தோரிடம் நல்லுறவை ஏற்படுத்திக்கொள்ளவும்.

  உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் இருந்த தொல்லைகள் தொய்வுகள் அதிகரிக்கும். அதிகாரிகளின் கெடுபிடியும் இருக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்காது.

  வியாபாரிகளுக்கு தொழிலில் புதிய மாற்றம் தென்படும். வருமானம் பெறுவதற்குப் பல வழிகளைக் கையாள்வீர்கள். விவசாயிகள் அதிக மகசூலைக் காண்பீர்கள். கால்நடைகளால் செலவுகளும் ஏற்படும். 

  அரசியல்வாதிகளுக்கு பெயரும் புகழும் ஏற்படும். கட்சித் தலைமை புதிய பதவிகளைக் கொடுத்து கௌரவப்படுத்தும்.

  கலைத்துறையினருக்கு விருதுகள் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்களைச் செய்து கொள்வதில் சிறிது தாமதம் ஏற்படும்.

  பெண்மணிகள் குடும்பத்தில் அமைதியைக் காண்பீர்கள். குழந்தைகள் விஷயத்தில் விட்டுக்கொடுத்து நடந்துகொள்ளவும். மாணவமணிகள் விரும்பிய பாடப்பிரிவுகளில் சேர்வீர்கள்.

  பரிகாரம்:  வியாழனன்று ஆஞ்சநேயரை வழிபட்டு வரவும். 

  அனுகூலமான தினங்கள்: 14, 18. 

  சந்திராஷ்டமம்:  இல்லை.

  {pagination-pagination}
  மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல்  திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

  கைநழுவிப்போன வாய்ப்புகள் மீண்டும் வந்தடையும். முரண்பாடாக இருந்த நண்பர்கள் இணக்கமாவார்கள். கடுமையாக உழைத்து போட்டிகளை எதிர்கொண்டு வெற்றியடைவீர்கள். முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சிறு பயணங்களால் விரயம் உண்டாகலாம்.

  உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்புக்குத் தகுந்த ஊதியம் கிடைக்கும். திட்டமிட்ட வேலைகள் அனைத்தும் திருப்திகரமாக முடியும்.

  வியாபாரிகள் கொடுக்கல் வாங்கல்கள் சீராக இருக்கும். வாடிக்கையாளர்களை கனிவான பேச்சினால் நடத்தையால் கவர்வீர்கள். விவசாயிகள் விவசாயப் பணிகள் அனைத்தும் சுமுகமாக முடியும். உற்பத்திப்பொருள்களில் கவனம் செலுத்தவும். 

  அரசியல்வாதிகள் முயற்சிக்கேற்ற பொறுப்புகளைப் பெறுவீர்கள். திடமான சிந்தையுடன் செயலாற்றி வெற்றி பெறுவீர்கள். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்களில் நல்ல வருமானம் கிடைக்கும்.

  பெண்மணிகளுக்கு கணவர் மற்றும் குடும்பத்தாரிடம் நன்மதிப்பு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மாணவமணிகளுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். விடாமுயற்சிகள் வெற்றியைத் தரும்.

  பரிகாரம்: ஸ்ரீ லட்சுமி நரசிம்மரை வழிபாடு செய்யவும்.

  அனுகூலமான தினங்கள்: 16, 18. 

  சந்திராஷ்டமம்:  இல்லை.

  {pagination-pagination}

  கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

  எதிர்ப்புகள் குறையும் நேரமிது. நல்லவர்கள் உதவுவார்கள். உழைப்புக்கேற்ற பலன் கிடைக்கும். தாய்வழியில் நல்லுறவு உண்டாகும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு கூடும். உற்றார் உறவினர்களிடம் எதிர்பார்த்த நன்மைகளைப் பெறமுடியாமல் போகும்.

  உத்தியோகஸ்தர்கள் வேலைகளில் பதற்றப்படாமல் நிதானமாக ஈடுபடுவது நல்லது. பேச்சிலும் எச்சரிக்கை தேவை. வியாபாரிகள் வாடிக்கையாளர்களின் ஆதரவுடன் புதிய வியாபாரம் தொடங்குவார்கள். கூட்டாளிகளிடம் எச்சரிக்கையுடன் இருக்கவும். விவசாயிகளுக்கு கொள்முதலில் லாபம் அதிகரிக்கும். நீர்ப்பாசன வசதிகளால் மகசூல் பெருகும். 

  அரசியல்வாதிகளுக்கு கட்சியில் முக்கியப் பொறுப்புகள் கிடைக்கும். தொண்டர்களின் ஆதரவுடன் பதவியைத் தக்க வைத்துக் கொள்வீர்கள். கலைத்துறையினரைத்தேடி புதிய வாய்ப்புகள் வரும். ரசிகர்களின் ஆதரவு உண்டு.

  பெண்மணிகள் குடும்பத்தினரிடம் நன்மதிப்பு பெறுவார்கள். மாணவமணிகளுக்கு கல்வியில் ஆர்வம் குறையும். படிப்பில் முழுக்கவனம் செலுத்தினால் நல்ல மதிப்பெண்கள் பெறமுடியும். 

  பரிகாரம்: சனியன்று சனிபகவானையும் பைரவரையும் வழிபடவும். 

  அனுகூலமான தினங்கள்: 16, 17. 

  சந்திராஷ்டமம்:  இல்லை.

  {pagination-pagination}
  மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

  எதிர்கால முன்னேற்றத்திற்கு வழிகள் தென்படும். நல்லோர்களின் நட்பும் ஆதரவும் கிடைக்கும். முகத்தில் பொலிவு உண்டாகும். உடன் பணிபுரிபவர்களின் உதவி கிடைக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். முயற்சிகள் வெற்றியைத் தரும்.

  உத்தியோகஸ்தர்கள் வேலைப்பளு அதிகரிப்பதால் கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும். சக ஊழியர்களின் உதவியால் அனைத்து வேலைகளையும் சரியாக முடிப்பீர்கள்.

  வியாபாரிகள் சாதுர்யமாகச் செயல்பட்டு எதிர்பார்த்த லாபத்தை அள்ளுவீர்கள். விவசாயிகளுக்கு மகசூல் அதிகரிக்கும். அரசு மானியங்கள் கிடைக்கும். சிலர் புதிய உபகரணங்கள், கால்நடைகளை வாங்குவர். 

  அரசியல்வாதிகளுக்கு உயர்ந்தவர்களின் நட்பு கிடைக்கும். சமூகத்தில் மதிப்பு மரியாதை உயரும். தேர்தல் வேலைகளில் விரைந்து செயல்படுவீர்கள். கலைத்துறையினர் செயல்களில் சுறுசுறுப்பு அதிகரிக்கும். 

  குடும்பத்தில் சந்தோஷத்தைக்  காண்பீர்கள். வீண் பேச்சுகளைத் தவிர்க்கவும். சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். மாணவமணிகள் கல்வியில் வளர்ச்சி அடைவீர்கள். பெற்றோர், ஆசிரியரின் சொற்படி நடக்கவும்.

  பரிகாரம்: ஞாயிறன்று சிவபெருமானை வணங்கி வரவும். 

  அனுகூலமான தினங்கள்: 19, 20. 

  சந்திராஷ்டமம்:  14, 15.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai