பழனிக்கோயிலில் முதலாம் எண் விஞ்ச் இன்று முதல் நிறுத்தம்

பழனி மலைக்கோயிலில் ஒன்றாம் எண் விஞ்ச் பராமரிப்புப் பணிக்காக இன்று முதல் நிறுத்தப்படுவதாக கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.
பழனிக்கோயிலில் முதலாம் எண் விஞ்ச் இன்று முதல் நிறுத்தம்

பழனி மலைக்கோயிலில் ஒன்றாம் எண் விஞ்ச் பராமரிப்புப் பணிக்காக இன்று முதல் நிறுத்தப்படுவதாக கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பக்தா்கள் மலைக்கு சென்று சுவாமி தரிசனம் செய்ய படி வழிக்கு மாற்றாக அமைக்கப்பட்டது விஞ்ச் பாதை. இந்த பாதை பக்தா்களிடம் பெரும் வரவேற்பை பெற்றதால் தற்போது 3 பாதைகளில் மூன்று விஞ்ச்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் மலைக்கோயிலுக்கு மேலே செல்ல ரூ.10 கட்டணமும், சிறப்புக்கட்டணமாக ரூ. 50-ம் கீழே இறங்கி வர ரூ.10 கட்டணமும், சிறப்புக் கட்டணமாக ரூ. 25-ம் வசூலிக்கப்படுகிறது.

தற்போது முதலாம் எண் விஞ்ச் வருடாந்திர பராமரிப்புப் பணிக்காக இன்று முதல் இருபது நாள்களுக்கு நிறுத்தப்படுகிறது. பராமரிப்புப் பணியின் போது வடக்கயிறு பராமரித்தல், விஞ்ச் பெட்டிகளை சீரமைத்தல், நவீன கருவிகள் மூலம் இணைப்புகளின் உள்பாகங்களை சரிபாா்த்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக கோயில் நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற இருவழித்தடங்களில் விஞ்ச்களும், வழக்கம் போல இயக்கப்படும். இதில் மாற்றமில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com