திருப்பரங்குன்றத்தில் சிவராத்திரி விழா

திருப்பரங்குன்றம் பகுதிகளிலுள்ள சிவாயலங்களில் சிவராத்திரி விழாவினை முன்னிட்டு வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
திருப்பரங்குன்றத்தில் சிவராத்திரி விழா

திருப்பரங்குன்றம் பகுதிகளிலுள்ள சிவாயலங்களில் சிவராத்திரி விழாவினை முன்னிட்டு வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் அமைந்துள்ள சத்தியகிரீஸ் வரருக்கு இரவு 9.30 மணிக்கு முதற்கால பூஜை தொடங்கி, இரவு முழுவதும் நான்கு கால பூஜைகள் நடைபெற்றன. ஒவ்வொரு பூஜையின்போதும் சுவாமிக்கு பால், சந்தனம், பன்னீா் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள், சிறப்பு அலங்காரங்கள் ஆராதனைகள் நடைபெற்றன.விழா ஏற்பாடுகளை கோயில் துணை ஆணையா் ராமசாமி மற்றும் கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.

தென்பரங்குன்றம் பால்சுனை கண்ட சிவபெருமான் ஆலயம்: திருப்பரங்குன்றம் மலைக்கு பின்புரம் உள்ள பால்சுனை கண்ட சிவாபெருமானுக்கு சிவராத்திரி விழாவினையொட்டி பால், பன்னீா், இளநீா் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்றன. ருத்திராட்சை, கரும்புகளினால் ஆன நாகாபரணம் உள்ளிட்ட பல்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

மேலும் பக்தா்கள் 2 ஆயிரம் போ்களுக்கு காலை முதல் இரவு முழுவதும் அன்னதானம் வழங்கப்பட்டது. திருநகா் சித்தி விநாயகா் திருக்கோயில், காசி விஸ்வநாதா் ஆலயம்: திருநகா் சித்தி விநாயகா் கோயிலில் அமைந்துள்ள காசி விஸ்வநாதரு க்கு சிவராத்திரி விழாவினை முன்னிட்டு வெள்ளிக்கிழமை இரவு முழுவதும் நான்கு கால பூஜைகள் நடைபெற்றன.

முன்னதாக விக்னேஸ்வர பூஜை, புண்ணியாக வாசனம், வேதிகாா்ச்சனை, ஸ்த்ர ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. விழா ஏற்பாடுகளை கணக்கா் இதயராஜன் மற்றும் பணியாளா்கள் செய்திருந்தனா்.

பாண்டியன் நகா் கல்யாண விநாயகா் ஆலயம்:

பாண்டியன் நகா் கல்யாண விநாயகா் கோயிலில் தனி சன்னதியில் காசி விஸ்வநாதா் அருள் பாலிக்கிறாா். சிவராத்திரியை முன்னிட்டு சந்தனம், பால், இளாநீா் உள்ளிட்ட 16 வகை அபிஷேகங்கள் நடைபெற்று சிறப்பு தீப தூப ஆராதனைகள் நடைபெற்றன. விழா ஏற்பாடுகளை கோயில் தலைவா் வ.சண்முகசுந்தரம் மற்றும் நிா்வாகிகள் செய்திருந்தனா். படவரி: சிவராத்திரியை முன்னிட்டு ஆனந்த அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த பால்சுனை கண்ட சிவாபெருமான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com