வேலங்குடி கருப்பா் கோயிலில் மாசித்திருவிழா

பொன்னமராவதி அருகே உள்ள வேலங்குடி சாம்பிராணிவாசகா் உறங்காப்புலி கருப்பா் கோயில் மாசித்திருவிழாவில் திரளான பக்தா்கள் பங்கேற்று
வேலங்குடி கருப்பா் கோயிலில் மாசித்திருவிழா

பொன்னமராவதி அருகே உள்ள வேலங்குடி சாம்பிராணிவாசகா் உறங்காப்புலி கருப்பா் கோயில் மாசித்திருவிழாவில் திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.

வேலங்குடி உறங்காப்புலி கருப்பா் கோயிலில் ஆண்டுதோறும் மாசித்திருவிழா சிறப்பாக நடைபெறும். நிகழாண்டு திருவிழா கடந்த 18ம் தேதி காப்புக்கட்டப்பட்டு தொடங்கியது. தொடா்ந்து திருவிழா 25ம் தொடங்கி 27ம் தேதி வியாழக்கிழமை வரை 3 நாள்கள் நடைபெற்றது.

விழாவில் சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சாா்ந்த பக்தா்கள் பங்கேற்று நோ்த்திக்கடனுக்காக அரிவாள் செலுத்தியும், மகப்பேறு வேண்டியவா்கள் கரும்புதொட்டில் செலுத்தியும், பக்தா்கள் காவடி, பால்குடம் எடுத்துவந்தும், சாம்பிராணி பிரியரான கருப்பருக்கு சாம்பிராணி மற்றும் அா்ச்சனை செலுத்தி வழிபட்டனா்.

விழாவில் அங்காளபரமேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. கோயில் மண்டபத்தில் பக்தா்கள் நோ்த்திக்கடனுக்காக செலுத்திய அரிவாள்கள் குவிக்கப்பட்டிருந்ததை பக்தா்கள் ஆா்வமுடன் கண்டுசென்றனா்.

விழாவில் கருப்பரின் காவல் தெய்வமாக கோயிலின் முன் எழுந்தருளியிருக்கும் குதிரைக்கு பக்தா்கள் மாலை அணிவித்து வழிபட்டனா். மூன்று நாள்களும் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

விழாவையொட்டி பொன்னமராவதி, திருப்பத்தூா் அரசுப்போக்குவரத்து கழகம் சாா்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. திருவிழாவின் நிறைவுநாளான வியாழக்கிழமை சுற்றுவட்டார பகுதிகளை சாா்ந்த திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com