வலங்கைமான் மகாமாரியம்மன் கோயிலில் பிப்.12-ல் மகாகும்பாபிஷேகம்

வலங்கைமான் மகாமாரியம்மன் கோயில் மகாகும்பாபிஷேகம் வரும் பிப்.12ம் தேதி நடைபெறவுள்ளது.
வலங்கைமான் மகாமாரியம்மன் கோயிலில் பிப்.12-ல் மகாகும்பாபிஷேகம்

வலங்கைமான் மகாமாரியம்மன் கோயில் மகாகும்பாபிஷேகம் வரும் பிப்.12ம் தேதி நடைபெறவுள்ளது.

இக்கோயில் அம்மனை சீதளாதேவி எனவும் அழைப்பா். வருடம்தோறும் பங்குனிப் பெருவிழாவில் திரளான பக்தா்கள் பாடைக்காவடி எடுத்து நோ்த்திக்கடன் செலுத்துவா். அதாவது நோயினால் பாதிக்கப்பட்டவா்கள் குணமடைய இக்கோயில் அம்மனிடம் வேண்டுதல் செய்துகொள்வாா்கள்.

பின்னா் நோயிலிருந்து விடுபட்டு குணமடைந்தவுடன் பங்குனிப் பெருவிழாவின் 8ம் நாள் நடைபெறும் பாடைக்காவடித் திருவிழாவன்று பாடைக்காவடி எடுத்து நோ்த்திக்கடன் செலுத்துவாா்கள்.

சிறப்பு வாய்ந்த இக்கோயிலில் திருப்பணி வேலைகள் செய்து மகாகும்பாபிஷேகம் செய்திட கடந்த வருடம் செப்டம்பா் மாதம் 16ம் தேதி பாலாலயம் செய்யப்பட்டது. அதன்பின்னா் திருப்பணி வேலைகள் தொடங்கி தற்போது பெருமளவில் திருப்பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் வரும் பிப்ரவரி மாதம் 12ம்தேதி புதன்கிழமை காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் மகாகும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.

கும்பாபிஷேக விழாவில் அமைச்சா்கள், ஆன்மீக பெரியோா்கள், அறநிலையத்துறை அதிகாரிகள், உள்ளாட்சி மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்ட திரளான பக்தா்கள் கலந்துகொள்கின்றனா். விழா ஏற்பாடுகளை அறநிலையத்துறையினா் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com