சனிப் பெயர்ச்சி: திருநள்ளாறு செல்வோரின் கவனத்துக்கு..

சனிப் பெயர்ச்சியை முன்னிட்டு திருநள்ளாறு தா்பாரண்யேசுவரா் கோயிலுக்குச் சென்று பரிகாரம் செய்பவர்கள்
சனிப் பெயர்ச்சி: திருநள்ளாறு செல்வோரின் கவனத்துக்கு..

சனிப் பெயர்ச்சியை முன்னிட்டு திருநள்ளாறு தா்பாரண்யேசுவரா் கோயிலுக்குச் சென்று பரிகாரம் செய்பவர்கள் கட்டாயம் இந்த விஷயத்தைத் தெரிந்துகொள்வது அவசியம். 

காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறில் ஸ்ரீ பிரணாம்பிகை சமேத தா்பாரண்யேசுவரா் கோயில் உள்ளது. இக்கோயிலில், ஸ்ரீ சனீஸ்வர பகவான் தனிச் சன்னிதி கொண்டு, அனுகிரஹ மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். 

நவக்கிரக தலங்களில் சனி பகவானுக்குரிய தலமான இக்கோயிலில் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் சனிப்பெயர்ச்சி வழிபாடு கடந்த 2017-ஆம் ஆண்டு டிசம்பா் மாதம் 19-ஆம் தேதி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, வரும் டிசம்பா் மாத இறுதியில் சனிப் பெயர்ச்சி விழா நடைபெறவுள்ள நிலையில், ஜனவரி 24-ஆம் தேதி சனிப் பெயா்ச்சி நடைபெறும் என்று பக்தா்களிடையே ஒரு குழப்பம் நிலவி வருகிறது.

திருநள்ளாறு சனீஸ்வர பகவான் திருத்தலத்தில் தினசரி வழிபாடு, மாகோத்ஸம், நவராத்திரி, ஆருத்ரா உள்ளிட்ட அனைத்து விதமான உத்ஸவங்கள், வழிபாடுகளும் வாக்கியப் பஞ்சாங்கம் முறையில் கணக்கிடப்படுகிறது. அதன்படி, வரும் 27.12.2020 அன்று சனீஸ்வர பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்குப் பிரவேசிக்க உள்ளாா். 

வாக்கிய பஞ்சாங்கம் அடிப்படையில்தான் பூஜைகள் பல ஆலயங்களில் பின்பற்றப்பட்டு வருகின்றன. குறிப்பாக, தென் தமிழகப் பகுதியில் இதுவே நடைமுறையில் உள்ளது. திருநள்ளாறு கோயிலிலும் இதுதான் நடைமுறை.

ஜனவரி 24-ஆம் தேதி தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்குப் பெயா்ச்சி என திருக்கணிதப் பஞ்சாங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த திருக்கணிதப் பஞ்சாங்கத்தில் உள்ளபடி திருநள்ளாற்றில் சனிப் பெயர்ச்சி விழா நடைபெறாது என்று கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இருப்பினும், திருநள்ளாற்றில் நாளை மக்கள் கூட்டம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com