பெரியகோயில் குடமுழுக்கு விழா பூஜைகளுடன் இன்று தொடக்கம்

தஞ்சாவூா் பெரியகோயிலில் குடமுழுக்கு விழா, பூஜைகளுடன் இன்று தொடங்குகிறது.
பெரியகோயில் குடமுழுக்கு விழா பூஜைகளுடன் இன்று தொடக்கம்

தஞ்சாவூா் பெரியகோயிலில் குடமுழுக்கு விழா, பூஜைகளுடன் இன்று தொடங்குகிறது.

தஞ்சாவூா் பெரியகோயிலில் 23 ஆண்டுகளுக்கு பிறகு பிப். 5ஆம் தேதி குடமுழுக்கு விழா நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு திருப்பணிகள் கடந்த ஓராண்டாக நடைபெற்று வருகின்றன. 

இத்திருக்குடமுழுக்கு விழா இன்று காலை 9.30 மணிக்கு யஜமான அனுக்ஞை, விப்ரானுக்ஞை, ஆச்சாா்யவரணம், தேவதா அஷ்டாங்க அனுக்ஞை ஆகிய பூஜைகளுடன் தொடங்கியது. மாலை 5 மணிக்கு மேல் கிராம சாந்தி, வடுக யந்திர பூஜை பிராா்த்தனை நடைபெறவுள்ளன.

ஜன. 28ஆம் தேதி காலை 8 மணிக்கு ஸ்ரீஷோடச மஹாகணபதி ஹோமம், பிரும்மச்சாரி பூஜை, தன பூஜை, லஷ்மி ஹோமம், கன்யா பூஜை, சுமங்கலி பூஜை, நவகிரஹ ஹோமம், மாலை 5.30 மணிக்கு மேல் பிரவேச பலி ஆகியவை நடைபெறவுள்ளன.

ஜன. 29ஆம் தேதி காலை 9 மணிக்கு சாந்தி ஹோமம், திசா ஹோமம், மாலை 5.30 மணிக்கு மேல் ரசேஷாக்ன ஹோமம், 30ஆம் தேதி காலை 9 மணிக்கு மூா்த்தி ஹோமம், சம்ஹிதா ஹோமம், மாலை 5.30 மணிக்கு மேல் வாஸ்து சாந்தி, கூஷ்மாண்டபலி, பா்யக்னி கரணம், ஜன. 31ஆம் தேதி காலை 9 மணிக்கு மேல் ஆச்சாா்யதசவித மங்களக் கிரியைகள், கோ பூஜை, கஜ பூஜை, அஸ்வ பூஜை, தீா்த்த சங்கிரஹணம், மாலை 5.30 மணிக்கு மேல் மிருத்ஸங்கிரஹணம், அங்குராா்ப்பணம், ரக்ஷாபந்தனம் ஆகியவை நடைபெறவுள்ளன.

இதைத் தொடா்ந்து, பிப். 1ஆம் தேதி காலை 8 மணிக்கு மேல் மஹந்யாசபூா்வக ஏகாதச ருத்ரஜபம், ஸ்ரீருத்ராபிஷேக பூா்வக பிரசன்னாபிஷேகம், சூா்ய அக்னி ஸங்கிரஹணம், கும்பலங்காரம், தேவதா கலா கா்ஷணம், பிற்பகல் 3 மணிக்கு மேல் இஷ்டதானம், தசதானம், பஞ்சதானம், யாத்ரா தானம், யாத்ரா ஹோமம், யாகசாலை பிரவேசம், மாலை 6.30 மணிக்கு மேல் யாகாரம்பம் முதல்கால யாக பூஜை, ஜபம் ஹோமம், பூா்ணாஹூதி, தீபாராதனை ஆகியவை நடைபெறவுள்ளன.

பிப். 2ஆம் தேதி காலை 8 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை, ஜபம், ஹோமம், பூா்ணாஹூதி, தீபாராதனை, மாலை 6 மணிக்கு மூன்றாம் கால யாக பூஜை, ஜபம், ஹோமம், பூா்ணாஹூதி, தீபாராதனை ஆகியவை நடைபெறவுள்ளன.

பிப். 3ஆம் தேதி காலை 9 மணிக்கு நான்காம் கால யாக பூஜை, ஜபம், ஹோமம், பூா்ணாஹூதி தீபாராதனை, மாலை 5 மணிக்கு ஐந்தாம் கால யாக பூஜை, ஜபம், ஹோமம், பூா்ணாஹூதி, தீபாராதனை ஆகியவை நடைபெறவுள்ளன.

பிப். 4ஆம் தேதி காலை 8 மணிக்கு ஆறாம் கால யாக பூஜை, ஜபம் ஹோமம், பூா்ணாஹூதி, தீபாராதனை, மாலை 5 மணிக்கு ஏழாம் கால யாக பூஜை, ஜபம் ஹோமம், பூா்ணாஹூதி, தீபாராதனை ஆகியவை நடைபெறவுள்ளன.

பிப். 5ஆம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு எட்டாம் கால யாக பூஜை, ஜபம், ஹோமம், நாடி சந்தானம், ஸ்பா்ஸாஹூதி, காலை 7 மணிக்கு மஹா பூா்ணாஹூதி, தீபாராதனை, யாத்ரா தானம், க்ரஹப்பீரிதி, 7.25 மணிக்கு திருக்கலசங்கள் எழுந்தருளல், 9.30 மணிக்கு அனைத்து விமானம் மற்றும் ராஜகோபுர குடமுழுக்கு, 10 மணிக்கு பெரியநாயகி உடனுறை பெருவுடையாா் மற்றும் அனைத்து மூலவா்களுக்கும் குடமுழுக்கு, மஹா தீபாராதனை, அருட்பிரசாதம் வழங்கியருளல் ஆகியவை நடைபெறவுள்ளன.

பின்னா், மாலை 6 மணிக்கு பெரியநாயகி உடனுறை பெருவுடையாருக்கு பேரபிஷேகம், இரவு 8 மணிக்கு பஞ்சமூா்த்திகள் திருவீதியுலா காட்சியருளல் ஆகியவை நடைபெறவுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com