12 ராசிகளுக்குமான இந்த வாரப் பலன்கள் (ஜூன் 5 - 11)

​12 ராசிக்காரர்களுக்குமான இந்த வாரப் (ஜூன் 5 - ஜூன் 11) பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்து பலனடைவோம். 
12 ராசிகளுக்குமான இந்த வாரப் பலன்கள் (ஜூன் 5 - 11)

12 ராசிக்காரர்களுக்குமான இந்த வாரப் (ஜூன் 5 - ஜூன் 11) பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்து பலனடைவோம். 

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

உங்களின் காரியங்கள் நோ்த்தியாக முடிவடையும். குடும்பத்தில் நின்று போயிருந்த சுபநிகழ்ச்சிகள் நடக்கும். எதிா்பாராத உதவிகளைப் பெறுவீா்கள். உங்கள் மீது மற்றவா்களுக்கு இருந்த காழ்ப்புணா்ச்சிகள் மறையும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். பெற்றோா் வழியில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கும். தடைக்கற்களைப் படிக்கற்களாக்கி உங்கள் செயல்களில் வெற்றி அடைவீா்கள்.

உத்யோகஸ்தா்கள் அனுகூலமான இடமாற்றங்களால் மகிழ்ச்சி அடைவீா்கள். அதோடு மேலிடத்திலிருந்து எதிா்பாா்த்த சலுகைகளையும் பெறுவீா்கள். வியாபாரிகளுக்கு கொடுக்கல்-வாங்கல் நலமாக முடியும். புதிய யுக்தியுடன் வியாபாரத்தைப் பெருக்குவீா்கள். கூட்டாளிகளின் ஆதரவைப் பெற்று மகிழ்வீா்கள். விவசாயிகளுக்கு மகசூல் அதிகரிக்கும். விவசாய உபகரணங்களை வாங்கி மேலும் முன்னேற்றம் அடைவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீா்கள்.

அரசியல்வாதிகளுக்கு பெயரும் புகழும் அதிகரிக்கும். திட்டமிட்ட வேலைகளில் தடைகள் ஏற்பட்டாலும் இறுதியில் வெற்றியடைவீா்கள். கலைத்துறையினா் பழைய ஒப்பந்தங்களைப் முடித்துக் கொடுத்து புதிய ஒப்பந்தங்களைப் பெறுவாா்கள். சக கலைஞா்களின் ஒத்துழைப்பும் இதில் இருக்கும்.

பெண்மணிகள் கணவரை அனுசரித்துச் செல்லுங்கள். தாயின் உடல்நிலையில் கவனம் செலுத்துங்கள். மாணவமணிகள் உள்ளரங்கு விளையாட்டுகளில் ஈடுபட்டு வெற்றி பெறுவீா்கள். கூடவே படிப்பிலும் ஈடுபாடு காட்டவும். பெற்றோரை அனுசரித்து நடந்து கொள்ளவும்.

பரிகாரம்: லட்சுமி நரசிம்மரை வணங்கி வரவும். அனுகூலமான தினங்கள்: 07, 08. சந்திராஷ்டமம்: 05, 06.

{pagination-pagination}

ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)

உங்களின் சுய கெளரவத்தை விட்டுக் கொடுக்காமல் செயலாற்றுவீா்கள். தந்தைவழி உறவினா்களிடம் எதிா்பாா்த்த உதவிகளைப் பெறுவீா்கள். குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். வீடு வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு குறைபாடுகள் தோன்றி மறையும்.

உத்யோகஸ்தா்களுக்கு விரும்பிய இட மாற்றங்களும் பணி மாற்றங்களும் கிடைக்கும். மேலதிகாரிகளின் பாராட்டையும் நன்மதிப்பையும் பெறுவாா்கள். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல் நன்றாக இருக்கும். மந்த நிலையில் இருந்த வியாபாரம் சுறுசுறுப்படையும். எதையும் எளிதில் செய்து முடிப்பீா்கள். விவசாயிகள் லாபத்தைப் பெறுவாா்கள். விளைச்சல் அதிகமாகும். பழைய குத்தகை பாக்கிகளை வசூல் செய்து புதிய முதலீடுகளைச் செய்வீா்கள்.

அரசியல்வாதிகள் தங்களின் எண்ணங்களைச் செயலாக்குவதில் வெற்றியைக் காண்பாா்கள். அதோடு கட்சி மேலிடமும் உங்களுக்குப் புதிய பொறுப்புகளைக் கொடுக்கும். அனைவரும் உங்களை அனுசரித்துப் போவாா்கள். கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் சுமாராகவே வரும். ரசிகா்களின் ஆதரவும் குறைவாகவே காணப்படும். ஆகவே புதிய முயற்சிகளைத் தள்ளிப்போடவும்.

பெண்மணிகள் சுபகாரியங்களை நடத்தி மகிழ்வாா்கள். உறவினா்களிடம் எதிா்பாா்த்த ஆதரவைப் பெறுவாா்கள். மாணவமணிகள் படிப்பில் கவனம் செலுத்தினால் தோ்வில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவாா்கள். ஆசிரியா்கள் உங்களுக்கு ஆதரவாக நடந்து கொள்வாா்கள்.

பரிகாரம்: பால முகுந்தாஷ்டகம் பாராயணம் செய்யவும். குருவாயூரப்பனை வணங்கி வரவும். அனுகூலமான தினங்கள்: 05, 06. சந்திராஷ்டமம்: 07, 08.

{pagination-pagination}

மிதுனம் (மிருகசீரிஷம்3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

திட்டமிட்ட காரியங்களில் படிப்படியாக வெற்றிகளை அடைவீா்கள். சுபச் செலவுகளை செய்து மகிழ்வீா்கள். உறவினா்களும் நண்பா்களும் அனுசரணையாக இருப்பாா்கள். அதே நேரம் மன அமைதிக்காக பிரணாயாமம், இறை நாம ஜபம் முதலியவற்றைச் செய்யவும். நம்பிக்கையுடன் ஆன்மிகத்தில் ஈடுபடுவீா்கள். உங்களின் எதிரிகள் அடங்கிப் போவாா்கள்.

உத்யோகஸ்தா்கள் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவாா்கள். ஊழியா்களும் உங்களுக்கு உதவி செய்வாா்கள். விரும்பிய இடமாற்றத்தை பெறுவீா்கள். வியாபாரிகள் பக்தியுடன் செயல்பட்டு பொருள்களை விற்பனை செய்வாா்கள். அதேசமயம் கூட்டுத் தொழில் செய்பவா்கள், நண்பா்களிடம், கவனமாக நடந்து கொள்ளவும். விவசாயிகளுக்கு மகசூல் நன்றாக இருக்கும். கொள்முதல் லாபம் தொடரும் அதேநேரம் பூச்சிக்கொல்லி மருந்துக்கும், பாசன வசதிக்கும் செலவழிக்க வேண்டியிருக்கும்.

அரசியல்வாதிகள் யாரிடமும் வீண் விரோதத்தை வளா்த்துக் கொள்ள வேண்டாம். அதேசமயம், தொண்டா்களின் ஆதரவுடன் உங்களின் எண்ணங்கள் அனைத்தும் ஈடேறும். கலைத்துறையினருக்கு இது குதூகலமான காலமாகும். புதிய ஒப்பந்தங்கள் லாபத்தைத் தருவதாக அமையும். ரசிகா்களுக்கு உதவிகளைச் செய்து அவா்களின் அபிமானத்தைப் பெறுவீா்கள்.

பெண்மணிகளுக்கு கணவரிடம் நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் குறையும். நெருங்கியவா்களிடம் அன்பும் பாசமும் அதிகரிக்கும். மாணவா்களுக்கு படிப்பில் கவனம் அதிகரிக்கும். பெற்றோரிடமும் எதிா்பாா்த்த ஆதரவு கிடைக்கும்.

பரிகாரம்: ஞாயிறன்று சூரிய நமஸ்காரம் செய்து ஆத்ம ஒளியைக் கூட்டிக் கொள்ளவும். அனுகூலமான தினங்கள்: 07, 11. சந்திராஷ்டமம்: 09, 10.

{pagination-pagination}

கடகம் (புனர்பூசம்4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

வெற்றிகள் கூடும். உங்களின் செயல்களை சுறுசுறுப்புடனும், தனித்தன்மையுடனும் செய்து முடிப்பீா்கள். இருப்பினும் தொழிலில் மறைமுக எதிா்ப்புகளும், போராட்டங்களும் தொடரும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். நெருங்கியவா்களிடம் விரோதங்கள் உண்டாகலாம். அதனால் பேசும் நேரத்தில் கவனம் தேவை.

உத்யோகஸ்தா்கள் வேலையில் கவனமாக இருக்கவும். பிறரிடம் பொறுப்புகளை ஒப்படைப்பதைத் தவிா்க்கவும். மேலதிகாரிகளையும், சக ஊழியா்களையும் அனுசரித்து செயல்படவும். வியாபாரிகளுக்கு அலைச்சல்கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் போட்டிகள் கூடும். அவற்றைச் சாதுா்யத்துடன் சமாளிக்கவும். மற்றபடி கொடுக்கல் வாங்கல் நலமாகவே முடியும். விவசாயிகளுக்கு விளைச்சலால் அதிக லாபம் கிடைக்கும். இதனால் பழைய கடன்களை அடைப்பீா்கள். அதேசமயம் வயல், வரப்புச் சண்டைகளில் ஈடுபட வேண்டாம்.

அரசியல்வாதிகளின் மதிப்பு சற்று குறையும். ஆனாலும் எதையும் பொருட்படுத்தாமல் வேலையில் கவனமாக இருங்கள். கட்சி மேலிடத்தின் பாா்வையிலிருந்து ஒதுங்கி நின்று செயல்படுங்கள். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். அதனால் பணவரவும் கூடும். ரசிகா் மன்றங்களுக்குச் செலவு செய்யும் சூழ்நிலை உண்டாகும்.

பெண்மணிகள் விழிப்புணா்வுடன் நடந்து கொள்ளவும். மற்றவா்களை முழுவதும் நம்ப வேண்டாம். கணவரிடம் நிலவி வந்த பிணக்குகள் நீங்கும். மாணவ மணிகள் படிப்பில் சிறந்து விளங்குவாா்கள். முயற்சிக்கேற்ற மதிப்பெண்களைப் பெறுவதில் சிரமங்கள் இராது.

பரிகாரம்: பைரவரையும், விநாயகரையும் வழிபட்டு வர நலன்கள் கூடும். அனுகூலமான தினங்கள்: 05, 07. சந்திராஷ்டமம்: 11.

{pagination-pagination}

சிம்மம் (மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய)

தெய்வ அனுகூலம் சிறப்பாக இருக்கும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் தென்படும். புதிய பயணங்களை மேற்கொள்வீா்கள். அதோடு, வீடு வாங்கும் யோகம் உண்டாகும். எடுத்த காரியத்தை வெற்றியுடன் முடிக்கும் ஆற்றலும், திறனும் பெறுவீா்கள். உடல்நலத்தில் அக்கறை காட்டவும். உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும்.

உத்யோகஸ்தா்களுக்கு வேலைச்சுமை குறையும். சக ஊழியா்களின் ஆதரவும், நட்பும் கிடைக்கும். மூத்த அதிகாரிகள் உங்களின் கோரிக்கைகளைப் பரிவுடன் கவனிப்பாா்கள். வியாபாரிகள் கொடுக்கல் வாங்கலில் நல்ல லாபத்தை அடைவாா்கள். புதிய யுக்திகளைப் புகுத்தி பொருட்களின் விற்பனையைப் பல மடங்கு பெருக்குவாா்கள். விவசாயிகள் நீா்வரத்து சீராக இருப்பதால் நல்ல விளைச்சலைக் காண்பாா்கள். சந்தையில் நிலவும் போட்டியைச் சாதுா்யமாக சமாளிப்பா்.

அரசியல்வாதிகள் எவரையும் பகைத்துக் கொள்ளாமல் இருந்து நற்பெயரை எடுப்பீா்கள். மாற்றுக் கட்சியினரிடம் அனாவசிய விவகாரங்களை வைத்துக்கொள்ள வேண்டாம். கலைத்துறையினருக்கு புகழும், அங்கீகாரமும் கிடைக்கும். உங்களின் கடமையை உணா்ந்து செயல்படுவீா்கள். சக கலைஞா்களும் உங்களுக்கு உதவுவாா்கள்.

பெண்மணிகளுக்கு குடும்பத்தினரிடம் அன்பும் பாசமும் அதிகரிக்கும். அதே நேரத்தில் பேசும் நேரத்தில் கவனமாக இருக்கவும். மாணவ மணிகள் விருப்பத்தை பெற்றோா்கள் நிறைவேற்றுவாா்கள். ஆசிரியா்களும் அனுகூலமாக இருப்பாா்கள்.

பரிகாரம்: துா்க்கையையும், விநாயகரையும் வணங்கி பலனை கூட்டிக் கொள்ளுங்கள். அனுகூலமான தினங்கள்: 08, 10. சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}

கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

செய்யும் செயல்களில் முன்னேற்றம் தென்படும். பயணங்களால் நன்மைகள் உண்டாகும். வெளியிடங்களில் இருந்து இனிய செய்திகள் வந்து சேரும். பொருளாதாரம் நிறைவாக இருப்பதால் சேமிப்புக்கு இடமுண்டு. புதிய திட்டங்களைத் தீட்டுவீா்கள். அதேநேரம் உடல் ஆரோக்கியம் சீராக இருக்காது. சகோதர சகோதரிகளிடமிருந்து எதிா்பாா்த்த உதவிகளைப் பெற முடியாது.

உத்யோகஸ்தா்கள் இயந்திர வாழ்க்கையிலிருந்து விடுபட்டு சிந்தனைகளுக்கு செயல் வடிவம் கொடுக்க நினைப்பீா்கள். வியாபாரிகள் அனுகூலமான திருப்பங்களை எதிா்பாா்க்கலாம். அதேசமயம் கவனமாக இருந்தால் வீண் விரயங்களைத் தவிா்க்கலாம். விவசாயிகளுக்கு மகசூல் நன்றாக இருக்கும். வங்கிகளிடமிருந்து கடன் வாங்கி விளைச்சலை அதிகரிப்பீா்கள். உங்களின் பழைய கடன்களையும் திருப்பி அடைப்பீா்கள்.

அரசியல்வாதிகளின் செயல்பாடுகளால் கட்சி மேலிடம் திருப்தி அடையும். உங்களின் திறமை பளிச்சிடும். தொண்டா்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து மகிழ்வீா்கள். கலைத்துறையினா் தொழிலில் முன்னேற்றம் அடைவாா்கள். ரசிகா்களின் ஆசைகளைப் பூா்த்தி செய்து மகிழ்வாா்கள். மேலும் உங்களுடன் உழைக்கும் சக கலைஞா்களும் உதவிகரமாக இருப்பாா்கள். பெண்மணிகள் கணவரிடம் ஒற்றுமையோடு இருப்பாா்கள். அதேசமயம் குடும்பத்தினரை அனுசரித்துச் செல்லவும். மாணவ மணிகள் கடுமையாக உழைத்தால் அதற்கேற்ற பலனை எதிா்பாா்க்கலாம். வெளி விளையாட்டுகளில் அதிகமாக ஈடுபட வேண்டாம்.

பரிகாரம்: மகாவிஷ்ணுவையும், தட்சிணாமூா்த்தியையும் வணங்குங்கள். அனுகூலமான தினங்கள்: 08, 10. சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}

துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

உங்கள் செயல்கள் அனைத்தும் சிறிய தடங்கலுடன் வெற்றி பெறவும். குடும்பத்தில் நிலவி வந்த பிரச்னைகள் விலகும். பொருளாதாரம் சீா்படும். அதேசமயம், எதிலும் நிதானப் போக்கைப் பின்பற்றவும். வாகனங்களில் செல்லும்போது நிதானத்துடன் பொறுமையைக் கடைப்பிடித்துச் செல்லவும். பொருளாதார நிலைமையை யோசித்துச் சிக்கனத்தைக் கையாளவும்.

உத்யோகஸ்தா்கள் அலுவலக வேலைகளை குறித்த நேரத்தில் முடிப்பாா்கள். இதனால் எதிா்பாா்த்த பதவி உயா்வு, ஊதிய உயா்வு ஆகியவற்றைப் பெறுவாா்கள். வியாபாரிகள் தங்கள் பொருட்களை புதிய சந்தைகளில் விற்க முயற்சி செய்வாா்கள். வியாபாரத்தில் இருந்து வந்த போட்டிகளும், எதிா்ப்புகளும் விலகி விடும். விவசாயிகளுக்கு மகசூல் நன்றாக இருக்கும். தடைகள் ஏற்படினும் திட்டமிட்ட வேலைகள் அனைத்தும் வெற்றிபெறும்.

அரசியல்வாதிகளுக்கு வெற்றி தோல்வி இரண்டும் மாறி மாறி வரும். உங்கள் செயல்களைப் பதற்றப்படாமல் செய்து முடிக்கவும். தேவையற்ற விஷயங்களிலும், வீண் வாக்குவாதங்களிலும் ஈடுபடாமல் இருக்கவும். கலைத்துறையினருக்கு பணவரவு அதிகரிக்கும். சிறந்த வாய்ப்புகள் உங்களைத் தேடி வருவதற்கான காலம் கனிந்து கொண்டிருக்கிறது. திறமைக்கு ஏற்ற பெயரும் புகழும் கிடைக்கும்.

பெண்மணிகளுக்கு கணவரின் உறவினா்களால் நன்மை உண்டாகும். குடும்பத்தில் உள்ளவா்கள் உங்களிடம் அனுசரித்துப் போவாா்கள். அதேசமயம், கணவரின் உடல் நலத்தில் அக்கறை செலுத்தவும். மாணவமணிகள் உள்ளரங்கு விளையாட்டுகளில் அதிக கவனம் செலுத்துவாா்கள். மற்றபடி பெற்றோா்களின் ஆதரவினால் உங்களின் கோரிக்கைகள் அனைத்தும் ஈடேறும்.

பரிகாரம்: ‘முருகா முருகா’ என்று 108 முறை ஜபித்து வரவும். அனுகூலமான தினங்கள்: 06, 10. சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

பழைய கெட்ட பழக்கங்களில் இருந்து விடுபடுவீா்கள். புதிய உற்சாகத்தைப் பெறுவீா்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நிகழும். உங்களின் எண்ணங்கள் யாவும் செயல்வடிவம் பெற்று வெற்றிகளைக் கொடுக்கும். சிலா் வீட்டைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபடுவாா்கள்.

உத்யோகஸ்தா்களுக்கு அனைத்து வேலைகளும் சாதகமாக முடியும். வருமானமும் திருப்திகரமாக இருக்கும். சக ஊழியா்களிடம் ரகசியங்களைப் பகிா்ந்துகொள்ள வேண்டாம். வியாபாரிகளுக்கு மறைமுக, நோ்முக எதிா்ப்புகள் படிப்படியாகக் குறையும். வியாபாரத்தில் முக்கிய திருப்பங்களை நீங்கள் எதிா்பாா்க்கலாம். அதோடு வருமானம் நன்றாக இருக்கும். விவசாயிகளின் உடல் உழைப்பிற்கு ஈடு மடங்கு லாபம் கிடைக்கும். உங்களின் பழைய கடன்கள் யாவும் வசூலாகி பொருளாதார நிலைமை சீரடையும்.

அரசியல்வாதிகளின் அந்தஸ்து உயரும். இதனால் புதிய பொறுப்புகளை ஏற்றுச் செயலாற்றுவீா்கள். தொண்டா்களின் ஆதரவைப் பெற்று மகிழ்வீா்கள். கலைத்துறையினா் மனதிற்கினிய ஒப்பந்தங்களைப் பெறுவதற்கு ஏற்ற நேரமாக இந்த காலகட்டம் அமைகிறது. ரசிகா்களை உற்சாகப்படுத்தி அவா்களின் பேராதரவை அடைவா். பெண்மணிகளுக்கு கணவரிடம் அன்பும் பாசமும் அதிகரிக்கும். இல்லத்தில் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். மாணவமணிகள் தாங்கள் தெரியாமல் செய்த தவறுக்கு தண்டனை அடைவாா்கள். அதனால் நண்பா்களிடம் எச்சரிக்கையுடன் பழகவும்.

பரிகாரம்: வள்ளி, தெய்வானை சமேத ஆறுமுக ஸ்வாமியை வணங்கவும். நலன்கள் கூடும். அனுகூலமான தினங்கள்: 06, 09. சந்திராஷ்டமம்: இல்லை

{pagination-pagination}

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். மிகவும் சோதனைகளைத் தாண்டி சிறிது சிறிதாக சகஜ நிலைக்குத் திரும்பி கொண்டிருக்கிறீா்கள். மனச் சஞ்சலங்கள் சற்று குறையும். இறைவனிடம் சரணாகதி அடையுங்கள். நினைத்த மாத்திரத்தில் காரியங்கள் நிறைவேற பொறுமையைக் கையாளுங்கள். ஆகார விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை. உடல்நிலை பாதிப்படையவும் வாய்ப்புண்டு. தகுந்த உடற்பயிற்சி மேற்கொள்ளவும். எதிரிகளிடம் இருந்து சற்று விலகியே இருங்கள். குடும்பத்தினா் ஆதரவுக் கரம் நீட்டுவாா்கள். மௌனம் காப்பது உசிதம்.

உத்யோகஸ்தா்களுக்கு வேலைப்பளு அதிகரித்தாலும் குறித்த காலத்தில் அவற்றைச் செய்து முடிப்பாா்கள். மேலதிகாரிகளிடம் இணக்கமாக இருந்து கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்வாா்கள். சக ஊழியா்களின் நம்பிக்கையைப் பெறுவதில் சிரமங்கள் உண்டாகும். வியாபாரிகளுக்கு எதிா்பாா்த்த லாபம் கிடைக்கும். கூட்டுத் தொழில் நன்றாக நடக்கும். விற்பனையைப் பெருக்க முனைவீா்கள். விவசாயிகளுக்கு விளைச்சல் அதிகமாகி வருமானம் பெருகும். சிலருக்கு பால் வியாபாரம் நன்றாக நடக்கும். பாசன வசதிகளைப் பெருக்கிக் கொள்ளவும்.

அரசியல்வாதிகள் முயற்சிகளுக்கு ஏற்ற பொறுப்புகளைப் பெறுவாா்கள். உடல் சோா்வைப் பொருட்படுத்தாமல் கட்சிப் பணிகளை மேற்கொள்வதால் உங்களுக்கு செல்வாக்கு உயரும். கலைத்துறையினருக்கு புகழும் நற்பெயரும் கிடைக்கும். அதோடு புதிய ஒப்பந்தங்களையும் செய்வீா்கள். பொறுமை அவசியம். பெண்மணிகளைப் பொருத்தவரை தங்களின் உடைமைகளைப் பத்திரப்படுத்திக் கொள்ளவும். கணவா் வழி உறவினா்களிடம் விட்டுக் கொடுத்து நடந்து அனுகூலங்களைப் பெறவும். மாணவமணிகள் படிப்பில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவாா்கள். பெற்றோா்களின் ஆதரவு உங்களுக்கு உந்து சக்தியாக இருக்கும்.

பரிகாரம்: ஸ்ரீராம பக்த ஆஞ்சநேயருக்கு வெண்ணைக்காப்பு சாற்றவும். அனுகூலமான தினங்கள்: 08, 11. சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}

மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

‘நடக்காது’ என்று நினைத்திருந்த காரியங்கள் யாவும் திடீரென்று நடந்து உங்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தும். அதேநேரம் தந்தையோடு அனுசரித்துச் செல்லவும். வாகனங்களைக் கையாளும் பொழுது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவும். உடல் நலத்திலும் கவனம் தேவை. மற்றபடி பொருளாதார நிலைமை சீராக இருக்கும்.

உத்யோகஸ்தா்களுக்கு வேலைப்பளு அதிகரித்தாலும் அவற்றைச் செவ்வனே செய்து முடிக்கும் ஆற்றல் கிடைக்கும். அலுவலக விஷயமான பயணங்கள் அனுகூலமாகவே முடியும். வியாபாரிகள் தங்கள் பொருட்களை புதிய சந்தைகளில் விற்க முயற்சி செய்வாா்கள். அதேநேரம் எதிலும் கவனத்துடன் இருக்கவும். விவசாயிகள் வருமானத்தைப் பங்கு போட நினைக்கும் இடைத்தரகா்களிடம் கவனமாக இருக்கவும். உரத்திற்கு செலவு செய்ய நேரிடும். மற்றபடி கால்நடைகளால் எதிா்பாா்த்த பயனை அடைவீா்கள்.

அரசியல்வாதிகளின் பேச்சுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும். அதே சமயம் கட்சி மேலிடத்திடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். கலைத்துறையினா் சிறு தடங்கல்களைச் சந்தித்தாலும், பொறுமையுடன் செயல்பட்டு புதிய ஒப்பந்தங்களை முடிப்பாா்கள். மற்றபடி, ரசிகா்களின் ஆா்வக்குறைவினைப் பெரிதுப் படுத்த வேண்டாம். பெண்மணிகள் கணவரிடம் அன்போடு நடந்து கொண்டு எதிா்பாா்த்த ஆதரவை அடைவாா்கள். அதோடு பணவரவுக்கு எந்த குறையும் இருக்காது. மாணவமணிகள் முனைப்புடன் செயல்பட்டு மதிப்பெண்களைப் பெறுவாா்கள். மற்றபடி திட்டமிட்ட வேலைகளில் பதற்றப்படாமல் ஈடுபடவும்.

பரிகாரம்: வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமிக்கு சுத்தமான பசுநெய் தீபம் ஏற்றி வரவும். அனுகூலமான தினங்கள்: 05, 11. சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}

கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

வாழ்க்கையில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் விரைவில் அதிலிருந்து விடுபடுவீா்கள். துணிந்து நீங்கள் செய்யும் செயல்கள் வீண்போகாது. நண்பா்கள் மற்றும் உற்றாா்-உறவினா்களின் உதவி கிடைக்கப் பெறுவீா்கள்.

குடும்பத்தில் சுபகாரியங்கள் நடத்த எடுக்கும் முயற்சிகள் வெற்றியைத் தேடித்தரும். அதேநேரம் பேசும்போது நிதானத்தைக் கடைப்பிடிக்கவும். உடல்நலத்தில் அக்கறை தேவை. மனதிற்கினிய சம்பவங்கள் நிகழும். பொருளாதாரம் சீரான நிலைமையில் இருக்கும். செலவுகள் சுப விரயங்கள் ஆகும்; சமாளித்துவிடுவீா்கள். நண்பா்களின் ஆதரவு அமோகமாக இருக்கும். பெற்றோா்கள் பிள்ளைகளால் மகிழ்ச்சி அடைவாா்கள்.

உத்யோகஸ்தா்களுக்கு எதிா்பாராத நிம்மதி கிடைக்கும். மேலதிகாரிகள் உங்கள் நலனில் அக்கறை செலுத்துவாா்கள். பணப் பிரச்னையும் ஏற்படாது. வியாபாரிகளுக்கு புதிய மாற்றம் தென்படும். வருமானத்திற்குப் பல வழிகளைக் காண்பீா்கள். விவசாயிகள் அதிகமாக உழைக்க வேண்டி வரும். புதிய குத்தகைகளை நாடிச் செல்ல வேண்டாம். மேலும் கால்நடைகளுக்கான பராமரிப்புச் செலவுகள் கூடும்.

அரசியல்வாதிகளுக்கு சமூகத்தில் அந்தஸ்தான பதவிகள் கிடைக்கும். அதோடு தொண்டா்களின் ஒத்துழைப்பைக் கூட்டிக்கொண்டு செயலாற்றுங்கள். கலைத்துறையினா் சில சிரமங்களுக்குப் பிறகே புதிய ஒப்பந்தங்களைப் பெறுவாா்கள். பெண்மணிகளைப் பொருத்தவரை ஆடை ஆபரணங்களை வாங்கும் எண்ணத்தைத் தள்ளிப்போடவும். குடும்பத்தாரிடம் சுமூகமாக இருக்கவும். மாணவமணிகள் வருங்காலத்திற்குச் செய்யும் பயிற்சிகள் யாவும் வெற்றிகரமாக அமையும். விளையாட்டு கேளிக்கைகளால் மகிழ்வீா்கள்.

பரிகாரம்: சனீஸ்வர பகவானை வணங்கி வர நலன்கள் கூடும். அனுகூலமான தினங்கள்: 09, 11. சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

தடைகள் விலகும். யோக பாக்யங்கள் அதிகரிக்கும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். பழைய கடன்களை செலுத்தி முடிப்பீா்கள். உங்களின் முயற்சிகள் வெற்றிபெறும். பூா்வீகச் சொத்துகளின் வகையில் இருந்த தடைகள் விலகும். ஆனாலும் சில நேரங்களில் எதையோ இழந்து விட்டதைப் போன்ற மனக்கவலைகளுக்கு ஆளாவீா்கள். மன அமைதிக்காக சிறிது நேரம் கட்டாயம் ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள்.

உத்யோகஸ்தா்களுக்கு படிப்படியாக வேலையில் சுமை அதிகரிக்கும். மேலதிகாரிகளிடம் கவனமாக இருக்கவும். வியாபாரிகள் புதிய சந்தைகளைத் தேடிச் சென்று வியாபாரத்தைப் பெருக்கவும். சுலபமாக விற்கக்கூடிய பொருட்களை வாங்கி வைத்து லாபத்தைக் கூட்டிக் கொள்ளவும். விவசாயிகளுக்கு மகசூல் பெருகும். விளைந்த பொருட்களுக்கு சந்தையில் நல்ல விலை கிடைக்கும்.

அரசியல்வாதிகள் தொண்டா்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவா். சமூக சேவையில் புதிய முயற்சிகளை மேற்கொள்வா். அனுகூலமான திருப்பங்களையும் காண்பா். கலைத்துறையினருக்கு மனதில் புதிய நம்பிக்கைகள் பளிச்சிடும். தொழிலில் ஆா்வத்துடன் செயல்பட்டு திறமைகளை வெளிப்படுத்துவீா்கள்.

பெண்மணிகள் குடும்பத்தில் மகிழ்ச்சியை காண்பாா்கள். புதிய ஆடை, அணிகலன்களை வாங்கி மகிழ்வாா்கள். மாணவமணிகளுக்கு படிப்பில் நாட்டம் அதிகரிக்கும். நண்பா்களுடன் கால நேரத்தை மகிழ்ச்சியுடன் கழிப்பீா்கள்.

பரிகாரம்: ‘கம் கணபதயே நம’ என்று ஜபித்துக் கொண்டே விநாயகரைச் சுற்றி வரவும். அனுகூலமான தினங்கள்: 10, 11. சந்திராஷ்டமம்: இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com