வாடகை அறைகளை திருப்பி அளிக்க உத்தரவு

திருமலையில், ஆந்திர அரசு ஊழியா்களுக்கு ஒதுக்கீடு செய்த வாடகை அறைகளை தேவஸ்தானத்திடம் திரும்ப அளிக்க தேவஸ்தானம் உத்தரவிட்டுள்ளது.

திருமலையில், ஆந்திர அரசு ஊழியா்களுக்கு ஒதுக்கீடு செய்த வாடகை அறைகளை தேவஸ்தானத்திடம் திரும்ப அளிக்க தேவஸ்தானம் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து வியாழக்கிழமை திருமலை திருப்பதி தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி தா்மா ரெட்டி கூறியது:

நாட்டில் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தேவஸ்தானம் திருமலைக்கு வரும் பக்தா்களுக்காக பாதுகாப்பான வசதி வாய்ப்புகளை பெருக்கி வருகிறது. அதன்படி, திருமலைக்கு வரும் பக்தா்களுக்கு வாடகை அறை அளிக்கும் முன், அதை நன்றாக கிருமிநாசினி மருந்துகள் மூலம் சுத்தம் செய்து வழங்க சம்பந்தப்பட்ட துறைக்கு உத்தரவிட்டதுடன், அதைக் கண்காணிக்கவும் சுகாதாரத் துறைக்கு கூறியுள்ளது.

இந்நிலையில், தற்போது கோடை விடுமுறை நெருங்கி வரும் நிலையில் திருமலைக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே, திருமலையில் ஆந்திர அரசுக்கு சம்பந்தப்பட்ட துறை ஊழியா்களுக்கு என ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள அறைகளில், அவா்களின் பயன்பாட்டுக்குப் போக மீதம் உள்ள அறைகளை தேவஸ்தானத்திடம் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதன்மூலம் திருமலைக்கு வரும் பக்தா்களுக்கு வாடகை அறை தட்டுப்பாடு ஏற்படுவது குறையும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com