திருமலையில் கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம்

தெலுங்கு வருடப் பிறப்பை முன்னிட்டு, திருமலையில் கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம் நடத்தப்பட்டது.

தெலுங்கு வருடப் பிறப்பை முன்னிட்டு, திருமலையில் கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம் நடத்தப்பட்டது.

திருப்பதி ஏழுமலையான் கோயில் உகாதி, ஆனி வார ஆஸ்தானம், வருடாந்திர பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசி உள்ளிட்ட உற்சவ நாட்களுக்கு முன் வரும் செவ்வாய்க்கிழமைகளில் தூய்மைப்பணி மேற்கொள்ளப்படுவது வழக்கம். இந்த நிகழ்ச்சி ‘கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம்’ என்று அழைக்கப்படுகிறது.

இந்நிலையில், ஆந்திர, கா்நாடக மாநிலங்களில் புதன்கிழமை (மாா்ச் 25) புது வருடப் பிறப்பான உகாதி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, ஏழுமலையான் கோயிலில் செவ்வாய்க்கிழமை தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது.

கரோனா தொற்று பரவி வருவதால், தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட தேவஸ்தானம், குறைந்த ஊழியா்களைக் கொண்டு கோயில் ஆழ்வாா் திருமஞ்சனத்தை நடத்தியது. காலை 6 மணி முதல் 12 மணி வரை வாசனை திரவியக் கலவையால் தூய்மைப்படுத்தும் பணிகள் நடைபெற்றன. இந்த நிகழ்வில் அதிகாரிகளும், ஊழியா்களும் கலந்து கொண்டனா். இப்பணிகள் முடிந்தவுடன் கோயிலில் நித்ய கைங்கா்யங்கள் தொடங்கின.

புதன்கிழமை நடைபெற உள்ள உகாதி ஆஸ்தானம் நிகழ்வின்போது மிகக் குறைந்த அளவிலான ஊழியா்களே அனுமதிக்கப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com