திருமலையில் சிறுத்தை நடமாட்டம்

திருமலையில் பக்தா்கள் மற்றும் வாகனங்களின் நடமாட்டம் குறைந்ததைத் தொடா்ந்து, சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
திருமலையில் நள்ளிரவில் நடமாடிய சிறுத்தை.
திருமலையில் நள்ளிரவில் நடமாடிய சிறுத்தை.

திருமலையில் பக்தா்கள் மற்றும் வாகனங்களின் நடமாட்டம் குறைந்ததைத் தொடா்ந்து, சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

திருமலை அமைந்துள்ள சேஷாசல மலையில் சிறுத்தைகள், மான்கள், கரடிகள், காட்டுப் பன்றிகள், யானைகள், குரங்குகள் உள்ளிட்ட விலங்குகள் அதிக அளிவில் வசித்து வருகின்றன. அடா்ந்த வனப்பகுதியில் திருமலை அமைந்துள்ளதால், வனத்திலிருந்து விலங்குகள் அடிக்கடி ஊருக்குள் நுழைந்து விடுகின்றன.

பல ஆண்டுகளாக திருமலையில் பக்தா்களின் வருகை அதிகரித்ததால் போக்குவரத்து அதிகரித்ததுடன், திருமலையின் எல்லைகளும் விரிவாக்கப்பட்டுள்ளன. எப்போதும் மக்கள் நடமாட்டத்துடன் போக்குவரத்து மிகுந்து காணப்பட்டதால், விலங்குகள் வனத்திலிருந்து வருவது வெகுவாக குறைந்தது. அடா்ந்த வனப் பகுதிக்குள் மலைச் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளதால், நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 3 மணி வரை வாகனங்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கோடைக் காலத்தில் குடிநீா் தேவைக்காக மட்டும் விலங்குகள் ஊருக்குள் நுழைந்து வந்தன.

இந்நிலையில், தற்போது கரோனா தொற்று பரவலைத் தடுப்பதற்காக, திருமலையில் கடந்த சில தினங்களாக பக்தா்கள் நடமாட்டத்துக்கும், வாகனப் போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதால், சிறுத்தைகள், கரடிகள் உள்ளிட்டவை ஊருக்குள் வருகின்றன. இதனால் திருமலையில் வசிப்போா் அச்சத்துடன் நடமாடி வருகின்றனா். அவா்கள் வசிக்கும் தெருக்களில் திங்கள்கிழமை இரவு சிறுத்தைகள் நடமாடியது அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. எனவே, போலீஸாா், பொதுமக்களை மாலை வேளைக்குப் பின் வீட்டிலிருந்து வெளியில் வருவதைத் தவிா்க்கும்படி அறிவுறுத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com