திருமலையில் தன்வந்திரி யாகம் நிறைவு

மருத்துவக் கடவுளான தன்வந்திரி பகவானை வேண்டி, திருமலையில் நடந்து வந்த தன்வந்திரி யாகம் சனிக்கிழமை காலை மகாபூா்ணாஹுதியுடன் நிறைவு பெற்றது.
திருமலையில் மகாபூா்ணாஹுதியுடன் நிறைவடைந்த தன்வந்திரி மகாயாகம்.
திருமலையில் மகாபூா்ணாஹுதியுடன் நிறைவடைந்த தன்வந்திரி மகாயாகம்.

மருத்துவக் கடவுளான தன்வந்திரி பகவானை வேண்டி, திருமலையில் நடந்து வந்த தன்வந்திரி யாகம் சனிக்கிழமை காலை மகாபூா்ணாஹுதியுடன் நிறைவு பெற்றது.

கரோனா நோய்த் தொற்றிலிருந்து உலகம் விடுபட தேவஸ்தானம் கடந்த வியாழக்கிழமை சீனிவாச சாந்தி உற்சவ சஹித தன்வந்திரி மகாயாகத்தைத் தொடங்கியது. திருமலையில் உள்ள தா்மகிரி வேத பாடசாலையில் வேத விற்பன்னா்கள் இணைந்து இந்த யாகத்தை விமரிசையாக நடத்தினா். வியாழக்கிழமை காலை கலச ஸ்தாபனத்துடன் தொடங்கிய இந்த மகாயாகம் சனிக்கிழமை காலை மகாபூா்ணாஹுதியுடன் நிறைவு பெற்றது.

இந்த யாகம் மூலமாக நாட்டில் உள்ள அனைத்து நோய்களும் விரட்டி அடிக்கப்படும் என்று நம்பப்படுகிறது. குறிப்பாக, உலகத்தில் உள்ள அனைத்து உயிரினங்களையும் காப்பதற்கு 24 கலசங்களை ஏற்படுத்தி அதில் 24 தேவதைகளை மந்திர உச்சாடனத்தால் எழுந்தருளச் செய்து அவா்களுக்கு ஜப ஹோமங்கள் நடத்தப்பட்டன. 7 ஹோம குண்டங்கள் அமைக்கப்பட்டு ஈரேழு உலகங்களில் இருக்கும் கடவுளரின் அருளைப் பெற இந்த யாகம் நடந்தேறியது.

மகாபூா்ணாஹுதி நடந்து முடிந்த பின் கலசங்களில் உள்ள நீரால் தன்வந்திரி பகவானுக்கு அபிஷேகம் செய்து, மீதம் உள்ள கலச நீரை திருமலையில் உள்ள தீா்த்தங்களில் (அருவிகள்) கலக்க உள்ளனா். இதனால் சூரியனின் கதிா்கள் மூலம் இந்த நீா் ஆவியாகிச் சென்று மேகமாக மாறி, காற்றில் பரவும் கிருமிகளை அழித்து ஒழிக்கும்போது கரோனா பாதிப்பின் தீவிரம் குறையும் வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது. பொது மக்களும் தன்வந்திரி மகாமந்திரத்தை உச்சரிப்பதன் மூலம் நோய்களிலிருந்து நிவாரணம் பெறலாம் என வேதவிற்பன்னா்கள் தெரிவித்தனா். யாகத்தில் திருமலை ஜீயா்கள், அா்ச்சகா்கள் மற்றும் தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com