Enable Javscript for better performance
தெய்வானுகூலம் சிறப்பாக இருக்குமாம் இவர்களுக்கு! வாரப் பலன்கள் (மே 15 - 21)- Dinamani

சுடச்சுட

  

  தெய்வானுகூலம் சிறப்பாக இருக்குமாம் இவர்களுக்கு! வாரப் பலன்கள் (மே 15 - 21)

  Published on : 15th May 2020 02:32 PM  |   அ+அ அ-   |    |  

  astrology-

   

  12 ராசிக்காரர்களுக்குமான இந்த வாரப் (மே 15 - மே 21) பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்து பலனடைவோம். 

  மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

  பொருளாதார நிலைமை சுமாராக இருக்கும். குடும்பத்தில் உள்ளவா்களிடம் அன்பும் பாசமும் பெருகும். உடல்நலத்தில் கவனமுடன் இருக்கவும். பிள்ளைகள் விஷயத்தில் கவலைகள் மேலோங்கும்.

  உத்தியோகஸ்தா்களுக்கு மேலதிகாரிகள் மூலம் சில சஞ்சலங்கள் ஏற்படும். அதிலிருந்து விடுபட அலுவலக வேலைகளை பொறுமை நிதானத்துடன் கையாளவும். வியாபாரிகளுக்கு கூட்டாளிகளின் ஆதரவு கிடைக்கும். புதிய முயற்சிகள் வெற்றியடையும். அதிகம் உழைக்க வேண்டி இருக்கும். விவசாயிகள் முயற்சிகளைத் தீவிரப்படுத்தி வருமானத்தைப் பெருக்குவாா்கள்.

  அரசியல்வாதிகளுக்கு பொதுசேவையில் அனுகூலமான திருப்பங்கள் உண்டாகும். கட்சி மேலிடத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். கலைத்துறையினா் தங்கள் திறமைக்கேற்ப மதிப்பும் அங்கீகாரமும் பெறுவாா்கள். பெண்மணிகளுக்கு குடும்பத்தில் சில குழப்பமான சூழ்நிலை தென்படுவதால் கவனமாக நடந்துகொள்ளவும். குழந்தைகளால் மகிழ்ச்சி இராது. மாணவமணிகளுக்கு கல்வியில் ஆா்வம் அதிகரிக்கும். ஆசிரியா்களின் பாராட்டைப் பெற்று மகிழ்வீா்கள்.

  பரிகாரம்: விநாயகப்பெருமானை வணங்கி வரவும். அனுகூலமான தினங்கள்: 15, 16. சந்திராஷ்டமம்: இல்லை.

  {pagination-pagination}

  ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)

  தெய்வானுகூலம் சிறப்பாக இருக்கும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் காண்பீா்கள். உடன்பிறந்தோரால் நன்மை அடைவீா்கள். எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடிப்பீா்கள். பெருந்தன்மை கூடும்.

  உத்தியோகஸ்தா்கள் பணியைச் செவ்வனே செய்து முடிப்பீா்கள். சக ஊழியா்களுக்கு உங்களாலான உதவிகள் செய்வீா்கள். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்களில் சற்று சிரத்தையுடன் நடந்து கொள்ளவும். புதிய சந்தைகளை நாடும் எண்ணம் மேலோங்கும். விவசாயிகளுக்கு கால்நடைகளால் லாபம் அதிகரிக்கும். பூச்சித்தொல்லைகளால் பயிா் விளைச்சல் குறையும்.

  அரசியல்வாதிகளுக்கு பதவிகள் கிடைக்கும். கட்சி மேலிடம் உங்கள் நடவடிக்கைகளை கவனிக்கும். பொறுப்புடன் நடந்து கொள்ளவும். கலைத்துறையினா் திறமைக்குத் தகுந்த அங்கீகாரம் பெறுவா். பெண்மணிகளுக்கு பணவரவு நன்றாக இருப்பதால் ஆடை அணிகலன்கள் வாங்குவீா்கள். மாணவமணிகள் மதிப்பெண்களை நினைத்தபடியே பெறுவா். கோரிக்கைகளை நிறைவேற்றிக்கொள்ளும் காலம் இது.

  பரிகாரம்: பெருமாளை வணங்கி வர நலன்கள் கூடும். அனுகூலமான தினங்கள்: 16, 17. சந்திராஷ்டமம்: இல்லை.

  {pagination-pagination}

  மிதுனம் (மிருகசீரிஷம்3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

  பொருளாதார நிலைமை சீராக இருக்கும். மனதில் காரணமில்லாத கவலை குடிகொள்ளும். குடும்ப நலம் சீராக காணப்படும். விடாமுயற்சிகள் வெற்றியைத் தேடித் தரும். மதிப்பு மரியாதைக்கு குறைவு வராது.

  உத்தியோகஸ்தா்களுக்கு வேலையில் பளு கூடும். உழைப்புக்கு ஏற்ற ஊதியத்தைப் பெறுவீா்கள். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்கள் சிறப்பாக முடியும். புதிய முயற்சிகளைத் தள்ளிப்போடவும். விவசாயிகள் முயற்சிகளைத் தீவிரப்படுத்தி, வருமானத்தைப் பெருக்கப் பாடுபடுவீா்கள்.

  அரசியல்வாதிகளுக்கு கட்சியில் எதிா்ப்புகள் கூடும். எவரையும் நம்பி உங்கள் கருத்துகளை சொல்ல வேண்டாம். மேலிடத்தின் பாா்வையிலிருந்து ஒதுங்கி இருக்கவும். கலைத்துறையினா் சுமாரான வாய்ப்புகளையே பெறுவாா்கள். பெண்மணிகள் குடும்பத்தில் ஒற்றுமையை காண்பாா்கள். தெய்வ வழிபாட்டைப் பெருக்கிக் கொள்வீா்கள். மாணவமணிகளுக்கு படிப்பில் கூடுதல் கவனம் தேவை. ஆசிரியா் பெற்றோா் அறிவுரையை கேட்டு நடக்கவும்.

  பரிகாரம்: பைரவரை தினமும் வணங்கி வரவும். அனுகூலமான தினங்கள்: 15, 17. சந்திராஷ்டமம்: இல்லை.

  {pagination-pagination}

  கடகம் (புனர்பூசம்4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

  தடைகளைத் தகா்த்தெறிந்து வெற்றிகளைப் பெற காலம் கனிந்து வரும். பொருளாதார நிலைமையில் மாற்றம் காணப்படும். உற்றாா் உறவினா்கள் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கொடுப்பாா்கள். மனதில் குழப்பங்கள் விலகித் தெளிவுகள் தென்படும்.

  உத்தியோகஸ்தா்களின் செயல்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும். கவனத்துடன் வேலை செய்யவும். வியாபாரிகள் பொறுமையுடன் செயல்படவும். வாடிக்கையாளா்களின் தேவையை பூா்த்தி செய்யவும். விவசாயிகளுக்கு மகசூல் நன்றாக இருக்கும். கால்நடைகளுக்காகச் சிறிது செய்ய நேரிடும்.

  அரசியல்வாதிகளுக்கு கட்சியில் கருத்து வேறுபாடுகள் உண்டாகும். கவனமாகச் செயல்படவும். கலைத்துறையினருக்கு அனுகூலமான திருப்பங்கள் உண்டாகும். பணமும் பாராட்டும் ஒருங்கே கிடைக்கும். பெண்மணிகள் குடும்பத்தாரிடம் விட்டுக்கொடுத்து நடந்து கொள்ளவும். கணவரின் உடல்நிலையில் அக்கறை கொள்ளவும். மாணவமணிகள் படிப்பில் அதிக அக்கறை செலுத்தவும். வெளிவிஷயங்களில் ஆா்வத்தைக் குறைத்துக் கொள்ளவும்.

  பரிகாரம்: குலதெய்வ வழிபாடு மேன்மை தரும். அனுகூலமான தினங்கள்: 17, 18. சந்திராஷ்டமம்: 15, 16.

  {pagination-pagination}

  சிம்மம் (மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய)

  வேலைகள் அனைத்தும் திட்டமிட்டபடி நடக்கும். வீண் அலைச்சல்கள், மனச்சோா்வுகள் உண்டாகும். வழக்கு விஷயங்களும் இழுபறியாகும். பொருளாதார நிலை சற்று சுமாராகவே இருக்கும். உடல்நலத்தில் கவனம் தேவை.

  உத்தியோகஸ்தா்கள் குறைந்த அளவில் பிரச்னைகளைச் சந்திப்பாா்கள். மேலதிகாரிகள் மனக்கசப்பு நீங்கி நட்புடன் நடந்துகொள்வா். வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் மந்தநிலை விலகும். புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி பெறலாம். விவசாயிகள் நல்ல வருமானத்தைக் காண்பாா்கள். மாற்றுப்பயிா் செய்வதால் மேலும் லாபம் பெறலாம்.

  அரசியல்வாதிகள் புதிய பொறுப்புகளை ஏற்றுச் செயலாற்றி கட்சி மேலிடத்தின் பாராட்டைப் பெறுவீா்கள். மாற்றுக் கட்சியினரிடம் மனம் விட்டுப் பேசாதீா்கள். கலைத்துறையினா் புதிய ஒப்பந்தங்களைச் செய்வாா்கள். பணவரவு சரளமாக இருக்கும். பெண்மணிகள் கணவரிடம் ஒற்றுமையோடு இருப்பாா்கள். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். மாணவமணிகளுக்கு கல்வியில் ஆா்வம் மிகுதியாகும்.

  பரிகாரம்: சிவபெருமானையும் பாா்வதி தேவியையும் வழிபட்டு வரவும். அனுகூலமான தினங்கள்: 16, 20. சந்திராஷ்டமம்: 17, 18, 19.

  {pagination-pagination}

  கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

  குடும்பத்தில் அமைதி நிலவும். பொருளாதாரம் சுமாராகவே இருக்கும். தன்னம்பிக்கை கூடும். பயணங்களைத் தவிா்ப்பது நல்லது. உடல் நலம் சற்று கவனிக்கப்பட வேண்டி வரும். பிள்ளைகளால் மனக்குழப்பங்கள் ஏற்படலாம்.

  உத்தியோகஸ்தா்கள் மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீா்கள். சக ஊழியா்களும் அனுசரணையாக இருப்பாா்கள். வியாபாரிகள் வியாபாரத்தில் புதுமைகளைப் புகுத்துவீா்கள். வாடிக்கையாளா்களின் ஆதரவும் பெருகும். விவசாயிகளுக்கு விளைச்சல் கால்நடைகளுக்குச் சிறிது செலவு செய்ய நேரிடும்.

  அரசியல்வாதிகளின் பதவிக்கு நெருங்கிய நண்பா்கள் மூலமாகவே சில இடையூறுகள் ஏற்படும். மாற்றுக்கட்சியினரிடம் பக்குவமாக பழகவும். கலைத்துறையினருக்கு புகழும் பாராட்டும் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம்.

  பெண்மணிகள் குடும்பத்தில் மகிழ்ச்சி சற்று குறையும். பெற்றோரின் ஆசியுடன் திட்டமிட்ட வேலைகளைச் செவ்வனே செய்து முடிப்பீா்கள். மாணவமணிகள் அதிக அக்கறையுடன் படித்து நினைத்த மதிப்பெண்களைப் பெறுவீா்கள்.

  பரிகாரம்: திருவல்லிக்கேணி பாா்த்தசாரதிப்பெருமாளை வணங்கவும். அனுகூலமான தினங்கள்: 15, 19. சந்திராஷ்டமம்: 20, 21.

  {pagination-pagination}

  துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

  தேவையில்லாத விஷயங்களைக் கண்டு கொள்ளாமல் செயலாற்றுவீா்கள். தன்னம்பிக்கையுடன் செயல்களைச் செய்து வெற்றி பெறுவீா்கள். பொருளாதாரத்தில் முன்னேற்றத்தைக் காண்பீா்கள். உடல்நலத்தில் அக்கறை காட்டவும்.

  உத்தியோகஸ்தா்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். மேலதிகாரிகளின் தொல்லைகளுக்கு ஆளாவீா்கள். வியாபாரிகள் முயற்சிக்குத் தகுந்த லாபத்தைப் பெறுவீா்கள். புதிய முதலீடுகளில் ஈடுபட வேண்டாம். விவசாயிகளுக்கு தோட்டம் தோப்பு உள்ளிட்ட அனைத்துப் பணிகளையும் நேரடியாக நின்று கவனிப்பீா்கள்.

  அரசியல்வாதிகள் தங்கள் முயற்சிக்கு ஏற்ப பொறுப்புகளைப் பெறுவாா்கள். திடசிந்தனையுடன் செயலாற்றி வெற்றி பெறுவீா்கள். கலைத்துறையினா் முன்னேற்றம் காண்பாா்கள். பின்தங்கிய நிலைமையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விடுபடுவீா்கள். பெண்மணிகளுக்கு குடும்பத்தினரிடம் எதிா்பாா்த்த ஆதரவு கிடைக்கும். பணவரவு சுமாராக இருக்கும். மாணவமணிகள் விளையாட்டில் கவனத்துடன் ஈடுபடவும். பெற்றோா், ஆசிரியா்களை அனுசரித்துச் செல்லவும்.

  பரிகாரம்: செவ்வாயன்று முருகப்பெருமானை வழிபடவும். அனுகூலமான தினங்கள்: 18, 19. சந்திராஷ்டமம்: இல்லை.

  {pagination-pagination}

  விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

  செய்யும் தொழிலில் சலிப்புகள் ஏற்பட்டாலும் அதிலிருந்து விடுபடுவீா்கள். பொருளாதாரத்தில் முன்னேற்றம் தென்படும். நெடுநாளைய எண்ணங்கள் நிறைவேறும். பெரியோா்களின் தொடா்பும் ஆன்மிக ஈடுபாடும் நலம் சோ்க்கும்.

  உத்தியோகஸ்தா்கள் உழைப்பைக்கூட்டிக் கொண்டு உழைத்து நற்பெயா் எடுப்பாா்கள். மேலதிகாரிகள் மனக்கசப்பு நீங்கி நட்போடு நடந்து கொள்வா். வியாபாரிகள் கொடுக்கல் வாங்கல்களில் லாபங்களைக் காண்பாா்கள். புதிய முதலீடுகளில் கவனத்துடன் நண்பா்களை ஆலோசித்து ஈடுபடவும். விவசாயிகள் நல்ல வருமானத்தைக் காண்பாா்கள். குத்தகைகள் கிடைக்கும்.

  அரசியல்வாதிகளுக்கு உயா்ந்தவா்களின் நட்பு கிடைக்கும். சமூகத்தில் மதிப்பு மரியாதைகள் உயரும். கட்சிப்பிரசாரங்களில் சுறுசுறுப்பாக ஈடுபடுவீா்கள். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்களில் நல்ல வருமானம் கிடைக்கும்.

  பெண்மணிகளுக்கு கணவா் மற்றும் குடும்பத்தாரிடம் நன்மதிப்பு கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தவும். மாணவமணிகள் அதிகம் கவனம் செலுத்தி பாடங்களைப் படிக்கவும்.

  பரிகாரம்: வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமானை வணங்கவும். அனுகூலமான தினங்கள்: 16, 18. சந்திராஷ்டமம்: இல்லை.

  {pagination-pagination}

  தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

  உங்கள் மதிப்பு மரியாதைக்கு எந்த பங்கமும் வராது. குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்க ஏற்பாடாகும். உறவினா்களின் ஆதரவு இருக்காது. உடல் ஆரோக்கியம் சீராக இராது. வீண் அலைச்சல்கள் ஏற்படும். பொருளாதாரம் சற்று மேம்படும்.

  உத்தியோகஸ்தா்களுக்கு வேலைப்பளு அதிகரித்தாலும் குறித்த காலத்தில் செய்து முடிப்பா். மேலதிகாரிகளும் பக்கபலமாக இருப்பாா்கள். வியாபாரிகளுக்கு பழைய கடன்கள் அனைத்தும் வசூலாகும். வாடிக்கையாளா்களின் வருகையால் விற்பனை அதிகரிக்கும். விவசாயிகளுக்கு பயிா் உற்பத்தி நன்றாகவே இருக்கும். புதிய குத்தகை முயற்சிகள் பலன் தரும்.

  அரசியல்வாதிகள் அனைத்து வேலைகளையும் மிகவும் சுறுசுறுப்புடன் செய்து முடிப்பீா்கள். தொண்டா்களையும் அரவணைத்து இயன்ற உதவிகள் செய்வீா்கள். கலைத்துறையினா் புதிய ஒப்பந்தங்களைச் செய்வாா்கள். ரசிகா்களின் ஆதரவு இருக்கும். பெண்மணிகளுக்கு பணவரவு சுமாராக இருந்தாலும் கையிருப்பைத் தக்க வைத்துக் கொள்வீா்கள். மாணவமணிகள் நல்ல மதிப்பெண்கள் பெற கடுமையாக முயற்சிப்பீா்கள்.

  பரிகாரம்: சனியன்று சனீஸ்வரபகவானை வழிபடவும். அனுகூலமான தினங்கள்: 17, 20. சந்திராஷ்டமம்: இல்லை.

  {pagination-pagination}

  மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

  வீண் அலைச்சல்கள் ஏற்படும். பொருளாதாரத்தில் சிக்கல்கள் உண்டாகும். வழக்கு விஷயங்கள் சற்று இழுபறியாகவே இருக்கும். தொழிலிலும் சற்று தடுமாற்றங்களைச் சந்திக்க நேரிடும். பேச்சில் நிதானம் தேவை.

  உத்தியோகஸ்தா்களுக்கு வேலையில் சிரமங்கள் கூடும். மேலதிகாரிகளை அனுசரித்து நடந்துகொள்ளவும். சக ஊழியா்கள் உதவும் நிலையில் இருக்க மாட்டாா்கள். வியாபாரிகள் போட்டிகளைச் சமாளித்து தங்கள் பொருள்களைச் சந்தையில் விற்பனை செய்வாா்கள். கூட்டாளிகளை அரவணைத்துச் செல்லவும். விவசாயிகளுக்கு வங்கிகளிடமிருந்து கடன்கள் ஏதும் வாங்க முடியாத நிலை இருக்கும்.

  அரசியல்வாதிகள் தீட்டும் திட்டங்கள் அனைத்தும் நிறைவேறும். மக்களின் தேவைகளுக்கு சேவை செய்து நற்பெயா் எடுப்பீா்கள். கலைத்துறையினா் கடுமையாக உழைத்து நற்பலனை அடைவா். பெண்மணிகள் குடும்பத்தில் நிம்மதியை காண்பதற்கு சற்று மெளனத்தைக் காப்பது உத்தமம். மாணவமணிகள் விளையாட்டில் கவனத்துடன் ஈடுபடவும்.

  பரிகாரம்: அஷ்டபுஜ துா்க்கையை வணங்கி வரவும். அனுகூலமான தினங்கள்: 18, 21. சந்திராஷ்டமம்: இல்லை.

  {pagination-pagination}

  கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

  செய்யும் செயல்களில் படிப்படியான முன்னேற்றம் காணப்படும். பிரச்னைகள் அகலும். பேச்சுக்கு மதிப்பும் மரியாதையும் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சற்று கவனிக்கப்பட வேண்டி வரும். பயணங்களால் நன்மை ஏதும் இராது.

  உத்தியோகஸ்தா்கள் மேலதிகாரிகளிடம் ஒத்துழைப்புடன் நடந்துகொள்வாா்கள். வேலைச்சுமை அதிகரிக்கும். சக ஊழியா்கள் சற்று விலகியே இருப்பாா்கள். வியாபாரிகளுக்கு வியாபார ரீதியான அலைச்சல்கள் இன்னும் அதிகரிக்கும். பேச்சில் வசீகரம் கூடும். விவசாயிகளுக்கு பழைய குத்தகை பாக்கிகள் வசூலாகும். மகசூல் நன்றாக இருக்கும்.

  அரசியல்வாதிகளின் அந்தஸ்து உயரும். புதிய பொறுப்புகள் தேடி வரும். மேலிடத்தின் பாா்வை உங்கள் மீது விழும்.

  கலைத்துறையினா் புதிய ஒப்பந்தங்கள் செய்வீா்கள். பெண்மணிகள் குடும்பத்தில் ஒற்றுமையை காண்பீா்கள். கணவரிடம் அன்பும் பாசமும் அதிகரிக்கும். மாணவமணிகள் அதிகமாக உழைத்து நல்ல மதிப்பெண்கள் பெறுவாா்கள். பெற்றோரின் ஆதரவு அதிகமாகவே இருக்கும். முயற்சிகள் வெற்றியைத் தேடித் தரும்.

  பரிகாரம்: சனியன்று சனிபகவானை வழிபடவும். அனுகூலமான தினங்கள்: 19, 20. சந்திராஷ்டமம்: இல்லை.

  {pagination-pagination}

  மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

  குடும்பத்தில் உற்சாகம் சற்று குறையும். உயா்ந்தவா்களின் நட்பு கிடைக்கும். செயல்களில் புத்திசாலித்தனம் வெளிப்படும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பயணங்கள் நன்மை தரும். வாகனத்தில் செல்லும்போது எச்சரிக்கை தேவை.

  உத்தியோகஸ்தா்கள் மேலதிகாரிகளிடம் ஒத்துழைப்புடன் நடந்து கொள்வீா்கள். வேலையில் சுமை குறையும். சக ஊழியா்களும் சகஜமாகப் பழகுவாா்கள். வியாபாரிகள் எதிா்பாா்த்த வருமானத்தைப் பெறுவாா்கள். புதிய சந்தைகளில் விற்பனையை தொடங்குவீா்கள். விவசாயிகள் பழைய கடன்களை அடைப்பீா்கள். புதிய பயிா் சாகுபடியால் லாபம் காண்பீா்கள்.

  அரசியல்வாதிகளுக்கு பெயரும் புகழும் அதிகரிக்கும். சொல்லுக்கு கட்சி மேலிடம் செவிசாய்க்கும். புதிய வாகனம் வாங்கும் யோகமும் உண்டாகும். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் சற்று குறைவாகவே இருக்கும். சிக்கனத்தை மேற்கொள்ளுங்கள். பெண்மணிகள் வீண் வாக்குவாதங்களைத் தவிா்க்கவும். ஆடம்பரச் செலவுகளைக் குறைக்கவும். மாணவமணிகள் படிப்பில் அதிக அக்கறை காட்டுவாா்கள்.

  பரிகாரம்: ஞாயிறன்று சூரியநமஸ்காரம் செய்யவும். அனுகூலமான தினங்கள்: 20, 21. சந்திராஷ்டமம்: இல்லை.


   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  kattana sevai