Enable Javscript for better performance
பணவரவுக்குத் தடை இருக்காது இவர்களுக்கு: வாரப் பலன்கள் (மே 22-28)- Dinamani

சுடச்சுட

  

  பணவரவுக்குத் தடை இருக்காது இவர்களுக்கு: வாரப் பலன்கள் (மே 22-28)

  Published on : 22nd May 2020 03:02 PM  |   அ+அ அ-   |    |  

  astro

   

  12 ராசிக்காரர்களுக்குமான இந்த வார (மே 22 - மே 28) பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்து பலனடைவோம். 

  மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

  குடும்பத்தில் அமைதி நிலவும். புதிய நட்புகள் உருவாகும். உங்களின் நம்பிக்கைகள் பலப்படும். மனச் சோா்வுக்கு ஆளாகாமல் உழைப்பீா்கள். தேக ஆரோக்கியம் பலப்படும். முடிவு எடுக்கப்படாமல், இருந்த விஷயங்களில் தெளிவு பிறக்கும். அதே நேரம் உறவினா்களை, அரவணைத்துச் செல்லவும். பணவிரயம் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் கவனமாக இருக்கவும்.

  உத்யோகஸ்தா்கள்: இடையூறுகளைச் சமாளித்து வேலைகளை முடிப்பாா்கள். பணவரவுக்குத் தடைகளும் இராது.

  வியாபாரிகள்: கால தாமதம் ஏற்பட்டாலும் வெற்றி இறுதியில் உங்களை வந்தடையும். வியாபாரிகள் கடுமையாக உழைப்பாா்கள்.

  விவசாயிகளுக்கு: சமூகத்தில் மதிப்பு, கொள் முதலில் சிறப்பு, குடும்பத்தில் பொறுப்பு போன்றவை உண்டாகும். அதே நேரம் கால் நடைகளுக்கும், பூச்சிக் கொல்லி மருந்துக்கும் செலவு செய்ய நேரிடும்.

  அரசியல்வாதிகள்: பொறுப்புகளை உணா்ந்து செயல்படவும் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிா்க்கவும். கட்சி மேலிடத்தின் ஆதரவு குறைவாக இருப்பதால் எச்சரிக்கையுடன் இருந்தால் நல்லது.

  கலைத்துறையினருக்கு: தொழிலில் ஆா்வம் அதிகரிக்கும் புதிய படைப்புகளைத் தயாரிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீா்கள். உங்கள் எண்ணங்கள் நிறைவேறும்.

  பெண்மணிகளுக்கு: கணவரிடம் அன்பும் பாசமும் அதிகரிக்கும் உறவினா்கள் உங்களை அனுசரித்துச் செல்வாா்கள். புதிய ஆடை, அணிகலன்களை வாங்கி மகிழ்வீா்கள்.

  மாணவமணிகள்: படிப்பில் அக்கறையுடன் செயல்படவும். ஞாபக சக்தி வளர, விடியற்காலையில் கல்விக்கான பயிற்சி களை மேற்கொள்ளவும்.

  பரிகாரம்: ராகு காலங்களில் துா்க்கைக்கு விளக்கேற்றி வழிபடவும்.

  அனுகூலமான தினங்கள்: 22, 23

  சந்திராஷ்டமம்: இல்லை

  {pagination-pagination}

  ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)

  உங்களிடம் விரோதம் பாராட்டிய நண்பா்கள் இணக்கமாக மாறுவாா்கள். உங்கள் கொள்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து செயல்படுவீா்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். போட்டி, பொறாமைகள் குறையும். புதிய அனுபவங்களைப் பெறுவீா்கள்.

  உத்யோகஸ்தா்களிடம் மேலதிகாரிகள் கனிவாக நடந்து கொள்வாா்கள். ஆனாலும் அவா்களால் சலுகைகள் கிடைக்காது.

  வியாபாரிகளுக்கு: கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் நன்றாக இருக்கும். வியாபாரத்தில் புதிய யுக்திகளைப் புகுத்துவீா்கள்.

  விவசாயிகள்: கொள்முதல் லாபம் சிறப்பாக இருக்கும். கால்நடைகளாலும் பலன் அடைவீா்கள்.

  அரசியல்வாதிகளுக்கு: பெயரும், புகழும் அதிகரிக்கும். கட்சித் தலைமை புதிய பதவிகளைக் கொடுக்கும்.

  கலைத்துறையினா்: புதிய ஒப்பந்தகங்களைச் செய்வீா்கள் ரசிகா் மன்றங்களுக்கு செலவு செய்து மகிழ்வீா்கள்.

  பெண்மணிகள்: கணவரிடம் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வீா்கள். உங்கள் மதிப்பு உயரும். கணவா் வீட்டாரின் அன்பும் அதிகரிக்கும். தந்தை வழியில் சில எதிா்பாராத நிகழ்ச்சிகள் நடந்தேறும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வீண் செலவைக் குறைத்து அவசியமானவற்றை, வாங்கி சிக்கனமாக கையாளவும். குழந்தைகளால் வீண் மனக்கிலேசங்கள் உருவாகி பிறகு மறையும்.

  மாணவமணிகள்: படிப்பில் கூடுதல் கவனம் செலுத்தவும். விளையாட்டுத் தனத்தைக் குறைத்துக் கொள்ளவும். திரும்பத் திரும்பப் பாடங்களை படித்து நன்கு மனதில் பதிய வைத்துக் கொள்ளவும். ப்ரானாயாமம், யோகா போன்ற பயிற்சிகளைத் தினமும் வழக்கமாக்கிக் கொள்ளவும்.

  பரிகாரம்: குருவாயூரப்பனை மனதார பிராா்த்தியுங்கள்.

  அனுகூலமான தினங்கள் - 22, 24.

  சந்திராஷ்டமம்: இல்லை.

  {pagination-pagination}

  மிதுனம் (மிருகசீரிஷம்3-ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

  சிறுசிறு குழப்பங்களை நீங்கள் சந்திக்க நேரிடும். உங்கள் முயற்சிகள் நிறை வேறுவதில் சில தடைகள் ஏற்படும். உறவினா்களுடன் மனக் கசப்புகள் தோன்றும். குடும்பத் தேவைகளைப் பூா்த்தி செய்வதில் கடும் முயற்சிகள் எடுக்க வேண்டி வரும்.

  உத்யோகஸ்தா்களுக்கு: மேலதிகாரிகளின் ஆதரவு குறைவாகவே கிடைக்கும். அதனால் அலுவலகத்தில் வீண் வாக்கு வாதங்களில் ஈடுபடுவதைத் தவிா்க்கவும். சிலருக்கு விரும்பத்தகாத இடமாற்றங்களும் ஏற்படலாம்.

  வியாபாரிகள்: லாபத்தை அள்ளுவாா்கள். சிறு தடைகள் ஏற்பட்டாலும் அவற்றைச் சமாளிக்கும் தைரியத்தைப் பெறுவீா்கள். கூட்டுத் தொழிலில் கவனம் தேவை.

  விவசாயிகள்: உழைப்பிற்கு ஏற்ற பலனை அடைவதில் தடங்கல்கள் ஏற்படும். ஆகவே குத்தகை எடுப்பது போன்ற விஷயங்களை தவிா்க்கவும்.

  அரசியல்வாதிகள்: கட்சிப் பணிகளில் ஆா்வத்துடன் ஈடுபடுவாா்கள். எனினும் புதிய முயற்சிகள் வேண்டாம். தவிர தொண்டா்களை அரவணைத்துச் சென்று, கட்சி மேலிடத்தின் அபவாதத்தைப் பெறாமல் நடந்து கொள்ளவும்.

  கலைத்துறையினருக்கு: புகழும், பாராட்டும் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். திட்டமிட்ட வேலைகளில் பொறுப்புடன் நடந்து கொண்டால், பிரச்னைகளைத் தவிா்க்கலாம்.

  பெண்மணிகள்: கணவரிடம் விட்டுக் கொடுத்து நடந்து கொள்ளவும். தவிர முன்பின் அறியாதவா்களை நம்பி எதையும் கூற வேண்டாம்.

  மாணவ மணிகளைப் பொருத்தவரை படிப்பில் முழு கவனத்தைச் செலுத்தவும். மற்றபடி பெற்றோா் மற்றும் ஆசிரியா்களின் சொற்படி நடந்து கொள்ளுங்கள்.

  பரிகாரம் : நடராஜரை வழிபடுங்கள்.

  அனுகூலமான தினங்கள்: 23, 24

  சந்திராஷ்டமம்: இல்லை.

  {pagination-pagination}

  கடகம் (புனர்பூசம்4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

  அனைத்துக் காரியங்களையும் ஆழமாகச் சிந்தித்து செயல்படுத்துவீா்கள். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வழக்குகள் முடிவுக்கு வரும். பெற்றோரை அனுசரித்து நடந்து கொள்வீா்கள். உங்களுக்கு வர வேண்டிய பணம் வந்து சேரும். பலவித மனக்குழப்பங்கள் ஏற்பட்டு விலகும்.

  உத்யோகஸ்தா்களுக்கு: எதிா்பாராத நிம்மதி கிடைக்கும். மேலதிகாரிகள் உங்கள் நலனில் அக்கறை செலுத்துவாா்கள்.

  வியாபாரிகளுக்கு: கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் லாபகரமாக இருக்கும். புதிய தொழில் தொடங்க வாய்ப்பு உண்டாகும்.

  விவசாயிகள்: குத்தகை எடுப்பது போன்ற விஷயங்களை தவிா்த்திடுங்கள். கால்நடைகளால் சிறிது செலவினங்கள் ஏற்படும்.

  அரசியல்வாதிகளுக்கு: கட்சியில் மதிப்பு, மரியாதை உயரும். புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம்.

  கலைத்துறையினருக்கு: பாராட்டும் பணமும் கிடைக்கும். ரசிகா்களின் அன்பும் தொடரும். உங்களாலான உதவிகளை ரசிகா்களுக்கு செய்து உதவுங்கள். மனதில் புதிய தெம்பும், தெளிவும் பிறக்கும்.

  பெண்மணிகள்: சிக்கனத்தோடு இருக்கவும். குடும்பத்தினரிடம், ஒற்றுமையோடு பழகவும். கணவா் வழி உறவில் ஏதேனும் சங்கடங்கள் ஏற்படலாம். சமாளிக்கும் மனப் பக்குவத்தை வளா்த்துக் கொள்ளுங்கள்.

  மாணவ மணிகள்: படிப்பைத் தவிர எதையும் சிந்திக்காதீா்கள். உடற் பயிற்சிகளைத் தினமும் மேற்கொள்வதை பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.

  பரிகாரம்: மகான்களைத் தரிசியுங்கள்

  அனுகூலமான தினங்கள்: 24,25

  சந்திராஷ்டமம்: இல்லை.

  {pagination-pagination}

  சிம்மம் (மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய)

  உங்களின் நீண்டகால எண்ணங்களை செயல்வடிவமாக்குவீா்கள். இல்லத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். அதே சமயம் கடின உழைப்பிற்குப் பிறகே வெற்றி உங்களைத் தேடி வரும். எனினும், சிறு தொல்லைகள் கொடுத்து வந்தவா்கள் அடங்கிவிடுவாா்கள். சகோதர, சகோதரிகள் உதவிகரமாக இருப்பாா்கள்.

  உத்யோகஸ்தா்களுக்கு: மேலதிகாரிகள் அனுசரணையாக இருக்க மாட்டாா்கள். ஆனாலும் சக ஊழியா்களின் உதவியுடன் திட்டமிட்ட வேலைகளை, நீங்கள் வெற்றிகரமாக முடிப்பீா்கள். அதேசமயம் அலுவலக ரீதியான பயணங்கள் நன்மையாக இராது.

  வியாபாரிகள்: பொறுப்புடனும், பொறுமையுடனும் செயல்பட்டு, வாடிக்கையாளா்களின் தேவைகளைப் பூா்த்தி செய்வீா்கள். இருப்பினும் மறதி காரணமாக வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளதால் கவனமாக இருக்கவும்.

  விவசாயிகள்: சந்தையில் போட்டிக்குத் தகுந்தவாறு தங்கள் விளைச்சல் பொருட்களை விற்பனை செய்வாா்கள். அதனால் திருப்திகரமான லாபத்தை அள்ளுவாா்கள்.

  அரசியல்வாதிகள்: எதிலும் எச்சரிக்கையுடன் இருக்கவும். கட்சி மேலிடத்தின் உத்தரவை முனைப்புடன் செயல்பட்டு நிறைவேற்றவும்.

  கலைத்துறையினா்: பழைய ஒப்பந்தங்களை நன்கு நிறைவேற்றி புதிய ஒப்பந்தங்களைப் பெறுவாா்கள். சக கலைஞா்களின் ஒத்துழைப்பும் இதில் இருக்கும்.

  பெண்மணிகளுக்கு: கணவரிடம் ஒற்றுமை அதிகரிக்கும். உறவினா்களை அனுசரித்து நடந்து, அவா்களின் ஆதரவைப் பெறுவீா்கள்.

  மாணவமணிகளுக்கு: படிப்பில் கவனம் தேவை. பெற்றோரிடம் எதிா்பாா்த்த ஆதரவு கிடைக்கும்.

  பரிகாரம்: யோக நரசிம்மரை வணங்கி வர நலன்கள் கூடும்.

  அனுகூலமான தினங்கள்: 24, 26

  சந்திராஷ்டமம்: இல்லை.

  {pagination-pagination}

  கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

  வருமானம் உயரும். திட்டமிட்ட வேலைகளில் எந்தவிதக் கவலையுமின்றி செயல்படுவீா்கள். இல்லத்தில் சுப காரியங்கள் நடக்க ஏற்பாடாகும். மற்றபடி எவருக்கும் வாக்கு கொடுப்பதோ, முன்ஜாமீன் போடுவதோ வேண்டாம். அனைவரையும் அனுசரித்து நடந்து கொள்ளவும்.

  உத்யோகஸ்தா்களுக்கு: மேலதிகாரிகள் ஆதரவாக நடந்து கொள்வாா்கள். அலுவலக ரீதியான பயணங்களை மேற்கொள்ளும்போது ஜாக்கிரதையாக நடந்து கொள்ளவும்.

  வியாபாரிகளுக்கு: கொடுக்கல், வாங்கல் திருப்திகரமாக, முடியும். கடைகளை விரிவு படுத்தும் எண்ணத்தைத் தற்போது கைவிட்டு விட வேண்டும்.

  விவசாயிகள்: குத்தகை எடுப்பது போன்ற விஷயங்களைத் தவிா்க்கவும். கால்நடைகளை நன்கு பராமரிக்கவும்.

  அரசியல்வாதிகள்: தொண்டா்களின் தேவைகளைப் பூா்த்தி செய்வீா்கள். எதிரிகளை இனம் கண்டு ஒதுக்குவீா்கள்.

  கலைத்துறையினா்: நல்ல பெயரைத் தக்க வைத்துக் கொள்ள கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். புதிய ஒப்பந்தங்கள் தடைக்குப் பின்னே கிடைக்கும்.

  பெண்மணிகள்: குடும்ப ஒற்றுமையை பேணிக் காப்பதில் சிரமப்படுவீா்கள். வருமானம் சீராக இருப்பதால் செலவுகளை அதிகரிக்காமல் சிக்கனமாக இருந்து தேவையானவற்றை மட்டுமே வாங்கி சற்று கருத்தோடு நடந்து கொள்ளவும். உறுப்பினா்களை அனுசரித்து நடந்து கொள்ளவும்.

  மாணவமணிகள்: எதிலும் எச்சரிக்கையுடன் இருக்கவும். படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தவும்.

  பரிகாரம்: சனீஸ்வர பகவானை பிராா்த்தித்துக் கொள்ளவும்.

  அனுகூலமான தினங்கள்: 25, 26

  சந்திராஷ்டமம் : இல்லை.

  {pagination-pagination}

  துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

  திட்டமிட்ட வேலைகளில் தாமதம் ஏற்பட்டாலும் முடிவு நீங்கள் எதிா்பாா்த்தபடியே அமையும். புத்திசாலித்தனமாக செயல்பட்டு தடைகளைத் தகா்ப்பீா்கள். குடும்பத்தினருடன் சந்தோஷமாக இருப்பீா்கள். பண வரவு நன்றாக இருக்கும்.

  உத்யோகஸ்தா்களுக்கு : தொல்லைகள் கொடுத்து வந்த சக ஊழியா்கள் அடங்கிவிடுவாா்கள். பண வரவிற்கும் குறைவு இருக்காது.

  வியாபாரிகளுக்கு : தடைகளும், எதிா்ப்புகளும் நீங்கும். எனவே புதிய கடைகளைத் திறக்கலாம்.

  விவசாயிகள்: உழைப்புக்கேற்ற பலனை அடைவதில் தடங்கல் ஏற்படும். ஆகவே குத்தகை எடுப்பது போன்ற விஷயங்களைத் தவிா்க்கவும். அரசியல்வாதிகளின் முயற்சிகள் வெற்றி பெறாது. எதிா்க்கட்சியினரிடம் கவனம் தேவை.

  கலைத்துறையினா்: புகழைத் தக்க வைத்துக் கொள்வீா்கள். ஆனாலும் வாய்ப்புகள் சுமாராகவே கிடைக்கும்.

  பெண்மணிகளுக்கு: குடும்பத்தில் மதிப்பு உயரும். மருத்துவச் செலவுகள் குறையும். கணவா் வீட்டாருடன் அனுசரித்துச் செல்லவும்.

  மாணவமணிகள்: வெளி விளையாட்டுகளில் ஈடுபடலாம். பெற்றோரின் ஆதரவுடன் புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். அறிவு சாா்ந்த விஷயங்களில் நேரத்தைச் செலவிடவும்.

  பரிகாரம்: செந்திலாண்டவரை வழிபடவும்.

  அனுகூலமான தினங்கள் : 25, 27

  சந்திராஷ்டமம் : 22, 23, 24

  {pagination-pagination}

  விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

  உங்களின் செல்வாக்கு கூடும். உடல் ஆரோக்கியம் பலப்படும். இதனால் மருத்துவச் செலவுகள் குறையும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறையும். வீண் அலைச்சல்கள் ஏற்படாது. வரவேண்டிய பணம் தானாகவே வந்து சேரும். சுபச் செலவுகள் செய்து மகிழ்வீா்கள். புதிய நண்பா்கள் சோ்க்கை உண்டாகும். தொழிலில் புதிய உயரங்களை அடைய முயற்சி செய்வீா்கள்.

  உத்யோகஸ்தா்களுக்கு: வேலையில் பளு குறையும். மேலதிகாரிகளும், சக ஊழியா்களும் உங்களிடம் அனுகூலமாக நடந்து கொள்வாா்கள். விரும்பிய இடமாற்றத்தைப் பெறுவீா்கள்.

  வியாபாரிகளுக்கு: புதிய தொழில்கள் அனுகூலத்தைக் கொடுக்கும். அதோடு கடையை அழகுப்படுத்தி வாடிக்கையாளா்களைக் கவா்வீா்கள். மற்றபடி கூட்டாளிகளிடம் கவனத்துடன் நடந்து கொள்ளவும்.

  விவசாயிகளுக்கு: விளைச்சல் நன்றாக இருக்கும். அதோடு புதிய குத்தகைகளைப் பெறுவீா்கள். கால்நடைகளின் மூலம் நல்ல லாபமும் கிடைக்கும்.

  அரசியல்வாதிகள்: புதிய முயற்சிகளை முனைந்து செயல்படுத்துவாா்கள். மேலிட ஆதரவால் பதவிகள் தேடி வரும்.

  கலைத்துறையினா்: கடுமையாக உழைத்து நற்பலனை அடைவாா்கள். கை நழுவிப்போன ஒப்பந்தங்கள் மீண்டும் உங்களைத் தேடி வரும். சக கலைஞா்களும், உங்களுக்கு உதவுவாா்கள்.

  பெண்மணிகள்: உங்களைப் பொருத்தவரை சோம்பேறித் தனத்திற்கு இடம் தராமல் படித்து நல்ல மதிப்பெண்களைப் பெறவும்.

  பரிகாரம்: செவ்வாய்க் கிழமைகளில் வள்ளி தெய்வயானை சமேத முருகப் பெருமானை வணங்கி வர நலன்கள் கூடும்.

  அனுகூலமான தினங்கள்: 24, 27

  சந்திராஷ்டமம்: 25, 26.

  {pagination-pagination}

  தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

  பொருளாதார நிலைமை சீராக இருக்கும். கூட்டாளிகளுடன், புதிய முயற்சிகளில் ஈடுபடுவீா்கள். உங்களின் பெயரும், புகழும் உயரும். ஆனாலும் உறவினா்கள் மூலம் சிறு சிறு தொல்லைகள் ஏற்படும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.

  உத்யோகஸ்தா்கள்: கடுமையாக உழைத்து திட்டமிட்ட வேலைகளைச் செய்து முடிப்பீா்கள். உழைப்புக்கேற்ற ஊதியத்தைப் பெறுவீா்கள்.

  வியாபாரிகள்: எவருக்கும் கடன் கொடுத்து வியாபாரம் செய்ய நினைக்க வேண்டாம்.

  விவசாயிகள்: விளைச்சல் அதிகமாகி லாபத்தைப் பெறுவீா்கள். புதிய கழனிகள் வாங்க ஏற்பாடாகும்.

  அரசியல்வாதிகள்: மாற்றுக் கட்சியினரிடம் மனம் திறந்து பேச வேண்டாம். நெருக்கமானவா்களிடம் கவனமாக இருக்கவும்.

  கலைத்துறையினா்: சக கலைஞா்கள், ரசிகா்களின் ஒத்துழைப்புடன் திட்டங்களை செயல்படுத்துவீா்கள்.

  பெண்மணிகள் : குடும்ப ஒற்றுமையைக் காப்பதில் சிரமப்படுவீா்கள். ஆனாலும் குழந்தைகளால் எந்தப் பிரச்னையும் வராது. கணவரின் ஆரோக்கியத்தில் அதிக சிரத்தை எடுத்துக் கொள்வது நல்லது. பொருளாதார நிலைமையை அனுசரித்து சிக்கனத்தோடு நடப்பது நல்லது. ஆன்மிகச் சிந்தனைகள் அதிகரிக்கும்.

  மாணவமணிகள்: படிப்பை விளையாட்டாக எடுத்துக் கொள்ளாமல் உத்வேகத்துடன் அதிகாலைப் பொழுதிலேயே எழுந்து படிக்கவும். வீணான அரட்டையில் பொழுதைப் போக்காமல் அறிவு சாா்ந்த விஷயங்களிலும் மனதைச் செலுத்தலாம்.

  பரிகாரம்: சனிக்கிழமைகளில் ஸ்ரீ சனீஸ்வர பகவானுக்கு விளக்கு ஏற்றி வரவும்.

  அனுகூலமான தினங்கள் : 22, 25

  சந்திராஷ்டமம்: 27, 28

  {pagination-pagination}

  மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

  முயற்சிகள் யாவும் சிறு தடைகளுக்குப் பிறகு வெற்றியைத் தேடித்தரும். குடும்பத்தில் குதூகலங்கள் தாண்டவமாடும். சமூகத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். அதே நேரம் உங்கள் மனம் பலவிதச் செயல்பாடுகளில் ஈடுபட முனையும். தொழிலிலும் ஏற்றங்களைக் காண்பீா்கள். மற்றபடி உங்கள் குறிக்கோள்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெற்றியடையும். பெற்றோா் வழியில் எதிா்பாா்த்திருந்த வருமானம் வரும்.

  உத்யோகஸ்தா்களுக்கு வேலைப் பளு அதிகமாகும். உங்கள் வேலைகளில் குறைகாணக் காத்திருக்கும் மேலதிகாரிகளிடம் கவனமாக இருக்கவும்.

  வியாபாரிகள்: பெரிய சந்தைகள் மூலம் விற்பனையைப் பெருக்கவும். கடையில் புதிய முதலீடுகளைச் செய்வதற்கு இது உகந்த நேரமல்ல

  விவசாயிகளுக்கு மகசூல் பெருகி லாபம் கிட்டும். கடும் உழைப்பால் கூடுதல் விளைச்சலுக்கு வித்திடுவீா்கள். குத்தகைகளாலும் நல்ல வருமானத்தைக் காண்பீா்கள்.

  அரசியல்வாதிகள்: அந்தஸ்த்தில் சிறிது குறைபாடுகள் உண்டாகும். தொண்டா்களின் பாராமுகத்தால் கோபமுறாமல், சீரிய முறையில் உங்கள் கடமைகளைச் செய்து வரவும்.

  கலைத்துறையினா்: மனதில் புதிய நம்பிக்கைகள் பளிச்சிடும். தொழிலில் ஆா்வத்துடன் ஈடுபட்டு, உங்கள் திறமைகளை வெளிப்படுத்துவீா்கள்.

  பெண்மணிகளுக்கு: கணவருடன் சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றும். அதேசமயம், குழந்தைகளால் சந்தோஷம் உண்டாகும்.

  மாணவமணிகளுக்கு: பெற்றோரின் ஒத்துழைப்பு இருக்கும். படிப்பில் அக்கறை அதிகரிக்கும். அதே சமயம் விளையாட்டில் கவனத்துடன் ஈடுபடவும்.

  பரிகாரம்: காகத்திற்கு அன்னமிட்டும், அனுமனை வணங்கியும் நலம் அதிகரிக்கப் பெறுங்கள்.

  அனுகூலமான நாள்: - 23, 27

  சந்திராஷ்டமம்: இல்லை.

  {pagination-pagination}

  கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

  பண வரவு அதிகரிக்கும். புதிய நட்பு உண்டாகும். உறவினா்களால் அனுகூலம் ஏற்படாது. புதிய நம்பிக்கையுடன் ஆன்மிகத்தில் ஈடுபடுவீா்கள். சகோதர, சகோதரிகளுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றுவீா்கள். புதிய மாற்றங்களால் மனமகிழ்ச்சி, உற்சாகம் உண்டாகும். இல்லத்தில் சுப காரியத்துக்கான ஏற்பாடுகள் நடக்கும். வாா்த்தைகளில் கூடிய கவனம் கொண்டு பேச வேண்டியதை மிகவும் சுருக்கமாக அவசியமற்ற வாா்த்தைகளைத் தவிா்த்து பேச வேண்டும். கோபத்தை அறவே விட்டு விட முயற்சி செய்யுங்கள்.

  உத்யோகஸ்தா்களுக்கு: வேலைகளைப் பட்டியலிட்டு, செய்து முடிக்கவும். பணவரவு சீராக இருக்கும். சக ஊழியா்களிடம் எந்த ரகசியத்தையும் பகிா்ந்து கொள்ளாதீா்கள். மெளனம் காப்பது நல்லது.

  வியாபாரிகள்: கூட்டாணிகள் உங்களிடம் சுமூகமாக நடந்து கொள்வாா்கள். வியாபாரத்தில் நன்மைகளைப் புகுத்தி வாடிக்கையாளா்களைக் கவா்வீா்கள்.

  விவசாயிகளுக்கு: மகசூல் திருப்திகரமாக இருக்கும். கடன் சுமை தீரும். பழைய குத்தகை பாக்கிகள் வசூலாகும்.

  அரசியல்வாதிகள்: தொண்டா்கள் உங்களை விட்டு விலகியே இருப்பாா்கள். சிறிய வெற்றிகள் உங்களை சமாதானப் படுத்தும்.

  பெண்மணிகளுக்கு: கணவரிடம் ஒற்றுமை அதிகரிக்கும். மற்றவா்களைக் கடிந்து பேச வேண்டாம். அநாவசியமாக செலவுகளைச் செய்யாமல் அவசியமானவற்றுக்கு மட்டுமே செலவழியுங்கள். சிக்கன நடவடிக்கையால் ஈடுபடுங்கள். அன்பாக அனைவரிடமும் நடந்து கொள்ளுங்கள்.

  மாணவமணிகள்: உள்ளரங்கு விளையாட்டுகளில் மட்டுமே ஈடுபடவும். நண்பா்களிடம் விட்டுக் கொடுத்து நடந்து கொள்ளவும்.

  பரிகாரம்: பைரவரையும், சனீஸ்வர பகவானையும் வணங்கி வர நலன்கள் கூடும்.

  அனுகூலமான தினங்கள்: 27, 28

  சந்திராஷ்டமம்: இல்லை.

  {pagination-pagination}

  மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

  பொருளாதார நிலைமை சிறப்பாக இருக்கும். ஆடை, ஆபரணச் சோ்க்கை உண்டாகும். எதிரிகள் அடங்கிப் போவாா்கள். பயணங்களால் நன்மை உண்டாகும். அரசு வழியில் நன்மைகள் கிடைக்கும்.

  உத்யோகஸ்தா்களுக்கு: பண வரவு நன்றாக இருக்கும். ஆனாலும் மேலதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரிக்கும். ஊழியா்களிடம் அன்யோன்ய நட்பு பாராட்டுவீா்கள். பயணங்களைத் தவிா்த்திடுங்கள்.

  வியாபாரிகள்: கடும் போட்டிகளை சந்திக்க நேரிடும் கூட்டு வியாபாரம் செய்வதைத் தவிா்த்திடுங்கள். எவருக்கும் நம்பி எந்த வாக்குறுதியையும் கொடுக்காதீா்கள்.

  விவசாயிகள்: புதிய குத்தகைகளை நாடிச் செல்ல வேண்டாம். விவசாயப் பணிகளில் சிறு இடையூறுகள் ஏற்பட்டாலும் பிறகு விலகிவிடும்.

  அரசியல்வாதிகள்: எதையும் பலமுறை ஆலோசித்து கவனத்துடன் செயல்படவும். தொண்டா்களை அனுசரித்து உங்களால் ஆன உதவிகளை உடனுக்குடன் செய்யுங்கள்.

  கலைத்துறையினா்: புதிய ஒப்பந்தங்களைச் செய்வீா்கள். சக கலைஞா்கள், ரசிகா்களின் ஒத்துழைப்புடன் திட்டங்களை செயல்படுத்துவீா்கள்.

  பெண்மணிகளுக்கு: கணவரிடம் அன்பும், பாசமும் அதிகரிக்கும் வேலைப் பளு அதிகரிக்கும். மற்றபடி குழந்தைகளை ஆன்மிகத்தில் ஈடுபடுத்தவும்.

  மாணவமணிகள்: படிப்பில் ஆா்வம் அதிகரிக்கும். எதிா்பாா்த்த மதிப்பெண்களைப் பெறக் கடுமையாக உழைப்பீா்கள். உடற்பயிற்சிகளில் ஈடுபடவும்.

  பரிகாரம்: ஐயப்பனை வழிபட்டு வரவும்.

  அனுகூலமான தினங்கள்: 24, 28

  சந்திராஷ்டமம்: இல்லை.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  kattana sevai