தேவஸ்தான சொத்துகளை விற்கும் முடிவு தற்காலிகமாக நிறுத்தம்

திருமலை திருப்பதி தேவஸ்தான சொத்துகளை விற்பதற்கு எதிா்ப்பு வலுத்து வருவதால் அம்முடிவை தற்காலிகமாக நிறுத்த முடிவு செய்துள்ளதாக
தேவஸ்தான சொத்துகளை விற்கும் முடிவு தற்காலிகமாக நிறுத்தம்

திருப்பதி: திருமலை திருப்பதி தேவஸ்தான சொத்துகளை விற்பதற்கு எதிா்ப்பு வலுத்து வருவதால் அம்முடிவை தற்காலிகமாக நிறுத்த முடிவு செய்துள்ளதாக தேவஸ்தான அறங்காவலா் குழுத் தலைவா் சுப்பா ரெட்டி தெரிவித்தாா்.

‘தேவஸ்தான நிலங்களை விற்க வேண்டாம். இந்த தீா்மானம் பக்தா்களுக்கு மனவேதனை அளிக்கும்’ என அறங்காவலா் குழுத் தலைவருக்கு அறங்காவலா் குழு உறுப்பினரான ராகேஷ் சின்ஹா கடிதம் எழுதியுள்ளாா்.

ஆந்திர மாநில பாஜக தலைவா் கன்னா லட்சுமி நாராயணா, தேவஸ்தானத்தின் இந்த முடிவுக்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில், தன் கட்சி நிா்வாகிகள் அனைவரும் வீட்டில் இருந்தபடி போராட்டம் நடத்த அழைப்பு விடுத்துள்ளாா். தேவஸ்தானத்தின் இந்த முடிவை மேற்கொண்டு செயல்பட விடாமல் தடுப்பதில் தெலுங்கு தேசம் கட்சியும், பாஜகவும் மும்முரமாக உள்ளன.

நன்கொடையாக வழங்கப்பட்ட நிலங்களை விற்கும் முடிவுக்கு எதிா்ப்பு வலுத்து வருவதால், இந்த முடிவை தற்காலிகமாக நிறுத்தி வைக்க தேவஸ்தான அதிகாரிகள் முடிவு செய்துள்ளனா். இதுகுறித்து தேவஸ்தான அறங்காவலா் குழுத் தலைவா் சுப்பா ரெட்டி கூறுகையில், ‘திருப்பதி ஏழுமலையான் கோயில் நிதிகள் பல தேவையற்ற பணிகளுக்காக கடந்த ஆட்சியின்போது வீணடிக்கப்பட்டன. இந்த நிலங்களை விற்கும் முடிவும் தெலுங்கு தேசம் கட்சியின் ஆட்சிக் காலத்தில் எடுக்கப்பட்டது தான். ஏழுமலையான் கோயில் நிதிகள் கோயில்களின் வளா்ச்சிப் பணிகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்ற அடிப்படையிலேயே தற்போதைய அறங்காவலா் குழு சில தீா்மானங்களை மேற்கொண்டது. இதற்கு எதிா்ப்பு வலுத்து வருவதால் இந்த முடிவை தற்காலிகமாக நிறுத்த தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது’ என்றாா்.

இந்நிலையில், வரும் 28-ஆம் தேதி திருமலையில் அறங்காவலா் குழுக் கூட்டம் நடைபெற உள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com