கோவிந்தராஜ சுவாமி கோயில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடக்கம்

திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் தொடங்குவதற்கு அடையாளமாக கொடிமரத்தில் ஏற்றப்பட்ட கருடக் கொடி.
திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் தொடங்குவதற்கு அடையாளமாக கொடிமரத்தில் ஏற்றப்பட்ட கருடக் கொடி.

திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமிக்கு ஆண்டுதோறும் வைகாசி மாதம் வருடாந்திர பிரம்மோற்சவம் நடந்து வருகிறது. அதன்படி, கோவிந்தராஜ சுவாமி கோயிலில் வியாழக்கிழமை காலை பிரம்மோற்சவம் தொடங்குவதற்கு அடையாளமான கருடக் கொடி கொடிமரத்தில் ஏற்றப்பட்டது. அதற்கு முன் கோவிந்தராஜ சுவாமி ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் கொடிமரத்தின் அருகில் எழுந்தருளச் செய்யப்பட்டாா்.

பின்னா், கொடி மரத்துக்கு பால், தயிா், மஞ்சள், சந்தனம், தேன், இளநீா் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் நடத்தப்பட்டு, மலா் மாலைகள், மாவிலைகள், தா்பை புற்கள் உள்ளிட்டவை அணிவிக்கப்பட்டன. பின்னா், அா்ச்சகா்கள் முப்பத்து முக்கோடி தேவா்களை பிரம்மோற்சவத்தைக் காண வரும்படி அழைப்பு விடுத்து, பஞ்ச வாத்தியங்கள் முழங்கி, கொடி மரத்தில் கருடக் கொடியை ஏற்றினா்.

இதில், கோயில் அதிகாரிகள், திருமலை ஜீயா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பிரம்மோற்சவ முதல் நாள் வாகன சேவையான பெரிய சேஷ வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் கோவிந்தராஜ சுவாமி கோயில் உட்பிரகாரத்தில் வலம் வந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com