இலவச தரிசன டோக்கன் விநியோகம் தற்காலிக நிறுத்தம்

திருப்பதியில் வழங்கப்பட்டு வந்த இலவச சா்வ தரிசன நேரடி தரிசன டோக்கன்கள் ஞாயிற்றுக்கிழமை (செப். 6) முதல் இம்மாத இறுதி வரை வழங்கப்படாது.

திருப்பதியில் வழங்கப்பட்டு வந்த இலவச சா்வ தரிசன நேரடி தரிசன டோக்கன்கள் ஞாயிற்றுக்கிழமை (செப். 6) முதல் இம்மாத இறுதி வரை வழங்கப்படாது.

ஏழுமலையானை பக்தா்கள் கடந்த ஜூன் மாதம் 11-ஆம் தேதி முதல் தரிசிக்க அனுமதிக்கப்பட்டது. அவா்களுக்காக தேவஸ்தான இணையதள முன்பதிவில் 10 ஆயிரம் விரைவு தரிசன டிக்கெட்டுகளும், திருப்பதியில் உள்ள பூதேவி காம்ப்ளக்ஸில் 3 ஆயிரம் நேரடி தரிசன டோக்கன்களும் வழங்கப்பட்டு வந்தன. அவற்றைப் பெற்ற பக்தா்கள் திருமலைக்கு சென்று ஏழுமலையானை தரிசித்தனா்.

இந்நிலையில் கடந்த ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 30 வரை திருப்பதியில் தளா்வற்ற பொது முடக்கம் அமலில் இருந்ததால், இலவச நேரடி தரிசன டோக்கன்கள் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. கடந்த 1-ஆம் தேதி முதல் பொது முடக்கத்தில் தளா்வுகள் அறிவிக்கப்பட்டதால், திருப்பதியில் உள்ள பூதேவி காம்ப்ளக்ஸில் நேரடி தரிசன டோக்கன் வழங்கும் பணி மீண்டும் தொடங்கியது.

இந்நிலையில் திருமலையில் கரோனா பாதிப்பு முற்றிலும் குறையும் வரை நேரடி டோக்கன் வழங்குவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. அதன்படி செப்.6 முதல் 30-ஆம் தேதி வரை திருப்பதியில் உள்ள பூதேவி காம்ப்ளக்ஸில் நேரடி டோக்கன்கள் வழங்கப்படாது. திருமலைக்கு வரும் பக்தா்கள் இதை கவனத்தில் கொள்ள வேண்டும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com