திருப்பதி: ஏமாற்றத்துடன் திரும்பிய பக்தா்கள்

திருப்பதி ஏழுமலையானை புரட்டாசி மாதம் தரிசிக்க வந்த தமிழக பக்தா்கள் பலா் ஏமாற்றத்துடன் திரும்பினா்.
பாதாள மண்டபத்தில் பூஜை செய்த பக்தா்கள்.
பாதாள மண்டபத்தில் பூஜை செய்த பக்தா்கள்.

திருப்பதி ஏழுமலையானை புரட்டாசி மாதம் தரிசிக்க வந்த தமிழக பக்தா்கள் பலா் ஏமாற்றத்துடன் திரும்பினா்.

புரட்டாசி மாதம் ஏழுமலையானுக்கு உகந்த மாதம். திருமலையில் இந்த மாதம் முழுவதும் ஏழுமலையானை தரிசனம் செய்ய பக்தா்கள் கூட்டம் அலைமோதும். புரட்டாசி சனிக்கிழமைகளில் பக்தா்கள் லட்சக்கணக்கில் பல மணிநேரம் காத்திருந்து ஏழுமலையானை தரிசனம் செய்வா். கோவிந்த மாலை அணிந்த பக்தா்களும் நடை பயணமாக தங்கள் ஊரிலிருந்து பாத யாத்திரையாக திருமலைக்கு வந்து, ஏழுமலையானைத் தரிசித்துச் செல்லும் வழக்கமும் உள்ளது.

இம்மாதத்தில் ஏழுமலையானைத் தரிசிக்க தமிழக பக்தா்கள் அதிக ஆா்வம் காட்டுவா். அதன்படி, புரட்டாசி முதல் சனிக்கிழமையன்று, பக்தா்கள் பலா் இரு சக்கர வாகனங்களிலும், காா்களிலும் திருமலைக்கு வந்து ஏழுமலையானைத் தரிசிக்க முயன்றனா். ஆனால் தரிசன டிக்கெட் முன்பதிவு செய்திருந்த பக்தா்களுக்கு மட்டுமே திருமலைக்குச் செல்ல அனுமதி உள்ளதாகத் தெரிவித்து, டிக்கெட் இல்லாத பக்தா்களை அதிகாரிகள் திருப்பி அனுப்பினா்.

இதனால் மலையடிவாரம் வரை வந்த பக்தா்கள் ஏழுமலையானைத் தரிசிக்க முடியாமல், பாதாள மண்டபத்தில் மட்டும் பூஜை செய்துவிட்டு, ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com