குரு பலம் குன்றியவர்கள் செய்யவேண்டிய பரிகாரங்கள்!

ஒரு தனி நபரின், நாட்டின் அல்லது இவ்வுலக..
குரு பலம் குன்றியவர்கள் செய்யவேண்டிய பரிகாரங்கள்!

ஒரு தனி நபரின், நாட்டின் அல்லது இவ்வுலக பொருளாதாரத்தின் வலிமையை நிர்ணயிப்பதில் குருவின் பங்கு நிச்சயமாக உண்டு.

சூரியனை மையமாக வைத்து 9 கிரகங்களும் செயல்படுகின்றன. இக்கருத்தை, கலீலியோ எனும் விஞ்ஞானமேதை சொல்வதற்கு முன்பே, நமது முன்னோர்கள் ஜோதிடம் வாயிலாக நமக்கு உணர்த்தியுள்ளனர் . 

தங்கம் குருவின் உலோகம். ஒரு நாட்டின் பொருளாதார நிதி, தங்கம் சார்ந்தே உள்ளது. இதனையே, காரல் மார்க்ஸ், "இந்த உலகை ஆட்டிப் படைக்கும் மஞ்சள் பிசாசு" என்பார். ஒரு மாபெரும் கிரகமான குருவின் கட்டுப்பாட்டில் தான் இந்த உலகின் பொருளாதார ஜீவனமே உள்ளது என ஆணித்தரமாக கூறுகிறார், பொருளாதார மேதை காரல் மார்க்ஸ்.

ஒருவருடைய ஜீவனத்தை, சம்பாத்தியத்தை, பண வரவை, பண பலத்தை அவரின் ஜாதகத்தில் நிர்ணயிக்கிறார் குரு. இந்தியாவில் வாழும் சராசரி மக்கள் அனைவரும் வறுமையில் பிறந்து, வறுமையில் வாழ்ந்து, வறுமையில் இறக்கிறார்கள். இதற்குக் காரணம், இந்தியாவின் ராசி மகரம் சனி தான் அதன் அதிபதி. அதனால் இந்தியர்கள் கடின உழைப்பாளிகள் அல்லது சிலர் தூங்கித் திரியும் சோம்பேறிகள். 

பொருளாதாரத்தை, பொருள் ஆதாயத்தைக் குறிப்பிடுகின்ற குரு, ஐரோப்பிய நாடுகளிலும், அரபு நாடுகளிலும் அபரிமிதமாக அள்ளித்தருவதற்குக் காரணம் அவர்கள் வழிபடும் குருவாகிய இயேசு மற்றும் நபிகள் மூலம் இறைவனை அடைவதைக் கொண்டுள்ளதால் அவர்களின் பொருளாதார வளர்ச்சி வளர்ந்துகொண்டே உள்ளது என்றால் அது மிகை ஆகாது. 

கொஞ்சகாலமாக தற்போது நமது இந்தியாவிலும் பாபா, ராகவேந்திரர் போன்ற குரு மகான்கள் வழிபாடு செய்ய துவங்கி விட்டதால், இனி இந்தியாவும் வல்லரசாக எல்லா வளமும் பெற்று உயர்வோம் என்பதில் சந்தேகம் இல்லை. அதே போல், நோயற்ற வாழவே குறைவற்ற செல்வம், இந்த நிலையை அதாவது, ஆரோக்கியமாக ஒருவர் பிறக்கின்ற, இருக்கின்ற, வாழ்கின்ற, மற்றும் ஆரோக்கியமான குழந்தைகளை பெறுகின்ற தன்மை ஒருவரின் ஜாதகத்தில், அமையப்பெற்றுள்ள குருவை வைத்துத் தான் கூற இயலும். 

ஒருவரின் பெருந்தன்மையை, வள்ளல் தன்மையை, பிறருக்கு உதவி செய்யும் தன்மையை இவ்வுலகிற்கு வெளிப்படுத்துபவரும், குருவே ஆவார். இதனை, ஒருவரின் ஜாதகத்தில் குருவின் நிலையை கொண்டே இவற்றை அறியலாம். ஒரு மனிதன் முழுமையான மற்றும் புகழப்படுவதற்கும் ஒருவரின் ஜாதகத்தில் உள்ள குருவின் 
நிலையே ஆகும். ஒருவரது அரசியல் பிரவேசமும், அரசியலில் பிரகாசமும் குருவால் அளிக்கப்படுவதே. குரு பலம் இன்றி ஒருவர் அரசியலில் ஈடுபட முடியாது. 

சமூக பாகுபாட்டில், ஒருவரது அந்தஸ்து எங்கே இருக்கிறது அல்லது எங்கே அமையும் என்பதனை குரு தெரிவிப்பார். திருமணம் ஆகக்கூடிய வாய்ப்பு பற்றியும் குரு அறிவிப்பார். குருவை வைத்து, ஒருவரின் சந்ததிகள், வாரிசுகள் குறிப்பாக ஆண் வாரிசுகள் எப்படி இருப்பார்கள் என அறியலாம். குருவின் மூலம் ஒருவர் சமூக வாழ்வில் பெறப்போகும் முக்கியத்தைத் தெரிந்து கொள்ளலாம். பெரும்புள்ளி, பெரிய மனிதர் என்பதெல்லாம் அவர்களின் ஜாதகத்தில் குரு அமைந்த மற்றும் அமர்ந்த நிலையைக் காரணம். அதே போல், மோட்ச நிலையை அடைவதற்கும், குருவை வைத்து உணரலாம்.  

ஒரு ஜாதகத்தில், குருவின் மூலம் ஒருவரின் ஆண்மை தன்மை, குழந்தை பெறும் தன்மை அறியலாம். குரு பலத்தை பொறுத்தே கல்லீரல் பலம் அமையும். கல்லீரல் பொறுத்தே ஜீரணம், உடல் வலிமை அமையும், வளர்ந்த அந்த உடலால் பணம் சம்பாதிக்கும் திறனும், இன உற்பத்தித் திறனையும் துல்லியமாக அறியமுடியும். 
முயற்சி இருந்தும் இகழ்ச்சியைச் சந்திப்பவர்கள், குரு துரோகிகள், பண விஷயத்தில், நாணயத்தில் ஏமாற்றுபவர்கள், அடுத்தவர் வாழ்க்கை வசதிகளை ஜீவனத்தைக் கெடுப்பவர்கள், ஜாதகத்தில் குரு 6 , 8, 12 இல் மறைந்து இருப்பார்.

குரு பலம் ஜாதகத்தில் பெற்றவர்கள், கோவிலுக்குச் செல்லாமலேயே வாழ்வில் வெற்றி பெறுவார்கள். குரு பலம் குன்றியவர்கள், முயற்சி இருந்தும் கூட பின்னடைவு பெறுவார்கள். 

குரு பலம் குன்றியவர்கள் செய்யவேண்டிய ப்ரீத்தி / பரிகாரங்கள்

1. உடலுக்கு செயல்திறன் அளிக்கும் உணவை, அன்னதானமாக அளிக்கலாம். குழந்தைபேறு இல்லாதோர் நிச்சயம் அன்னதானம் செய்தல் அவசியம். 

2. பெண்களுக்கு குரு ப்ரீதி, கணவனைப் போற்றுவது. 

3. குழந்தைகளைப் பேணி காப்பது பெற்றோர்களின் குரு ப்ரீத்தி ஆகும். தனது குழந்தைகளின் கல்வி, நல்வாழ்வுக்கு உழைப்பவனே அல்லாவுக்கு பிரியமானவன் என நபிகள் நாயகம் உரைப்பார். இறைவன் குருவே. இறை ப்ரீதியும் குரு ப்ரீதியும் ஒன்றே என்பது இதனால் அறியமுடிகிறது.

- ஜோதிட ரத்னா தையூர் சி.வே.லோகநாதன்  

தொடர்புக்கு: 98407 17857

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com