வருமானத்தை நிர்ணயிக்கும் ஜாதகம்: சொந்தத் தொழிலா? அடிமைத் தொழிலா? அறியலாம்

மனிதனின் முக்கிய தேவைகளை பூர்த்தி செய்ய வருமானம் அவசியம் தேவை. வருமானம் வரும் பாதை இரண்டு உள்ளது. அவை உழைப்பால்  வரும் வருமானம்.
வருமானத்தை நிர்ணயிக்கும் ஜாதகம்: சொந்த தொழிலா? அடிமை தொழிலா? அறியலாம்
வருமானத்தை நிர்ணயிக்கும் ஜாதகம்: சொந்த தொழிலா? அடிமை தொழிலா? அறியலாம்

மனிதனின் முக்கிய தேவைகளை பூர்த்தி செய்ய வருமானம் அவசியம் தேவை. வருமானம் வரும் பாதை இரண்டு உள்ளது. அவை உழைப்பால்  வரும் வருமானம். மற்றொன்று  உழைக்காமல் வரும் வருமானம். ஒருவன் என்னதான் உழைத்தாலும் பணம் சம்பாதிக்க முடியாது, மற்றும் சிலருக்கு உழைக்காமல் வரும் வருமானம் தொடர்ந்து  வந்துகொண்டே இருக்கும், மற்றும் சிலர் ஒரு  குறிப்பிட்ட கால அளவிற்கு உழைப்பு இருக்கும் பின்பு சீர்பட்டு ஒரு கணிசமான வருமானம் நிரந்தரமாகும். வருமானம் என்றவுடன் ஜோதிடத்தில் 2ம் பாவத்தையும், தொழில் அதனால் ஏற்படும் லாபம் கலந்த திருப்தி 10ம் பாவத்தைத் தொடர்ந்து 11ம் பாவத்தையும் குறிப்பிடும். 

இவற்றில் சொந்த தொழிலா,  அடிமை தொழிலா என்பது வெவ்வேறு பாவங்கள் கூறும். வருமானம் எந்த வழியில் வரும் என்பது அவரவர் கர்மாவை பொறுத்து அமையும். 

வருமானம் என்று சொல்லும்போது உழைப்பாள்  வரும் வருமானம், தந்தை அல்லது  பரம்பரை சொத்து மூலம் வருமானம், மனைவி வழியில் வருமானம், சேமிப்பு மூலமாகவோ, வட்டி, வாடகை வழியாகவோ - ஜோதிட வாயிலாக ஆராய்ந்து சொல்லலாம்.  இவற்றில் இரண்டாம் பாவத்தில் உள்ள கிரகம் அல்லது அந்த பாவத்தில் அதிபதி  முக்கிய பங்கு வகிப்பார். 

இரண்டாம் அதிபதி ஆட்சியோ, உச்சமோ பெற்று சுபத்துவம் பெற்றால் மற்றும் ராகு சம்பந்தம் பெற்றால் பல்வேறு (multiple) வழியில் வருமானம் இருக்கும். இவற்றில் வருமானம் என்ற 2ம் பாவம் மட்டும் முக்கிய பங்கு வகிக்கவில்லை, அவற்றோடு 10ம் பாவம், புதன், சனி சம்பந்தம் பெறவேண்டும். கூட்டு தொழிலோடு ஒப்பிடும் பொழுது 7ம் பாவமும், மாற்றவரிடம் வேலை பற்றி சொல்லும்பொழுது 10, 6ம் பாவம் தொடர்பு பெறவேண்டும். பாட்டன் சொத்து வருமானம் என்ற பொழுது திரிகோண அதிபதிகள் இரண்டாம் பாவத்துடன் தொடர்பு பெறவேண்டும்.

இரண்டாம் பாவத்தை பற்றி பேசும்பொழுது நிறைய காரகத்துவம் உண்டு. ஆனால் நாம் இன்று பார்ப்பது பேச்சு தன்மையால் வருமானம் ஈட்டும் ஜோதிட சூட்சமங்களைப்  பார்க்கலாம். எடுத்துக்காட்டாக ஜோதிடத்தில் இரண்டாம் பாவத்தில் வாக்கு, பேச்சு, ஆசிரியர், உணவு, குடும்பம் என்று சொல்லும் இடம். அந்த பாவம் பலம் பெற்றால்  பேச்சால் வருமானம் ஈட்டுவார் (உதாரணமாக.. பேச்சாளர், ஜோதிடர், விற்பனைப் பிரதிநிதி போன்றோர்).  நிறந்தர வருமானம் என்று சொன்னால் இரண்டோடு மற்றும் பூர்வபுண்ணியம் மற்றும் காரியத்திற்குரிய கர்மா, லக்கின சுபாரோடு  செயல் படவேண்டும். இது தவிர இன்னும் ஆழமாக போனால் முக்கிய நிபுணர் என்று உள்ளது.

அது எந்தத் துறை என்பது 2, 10ம் பாவத்தின் சாரநாதன் கொண்டு முடிவு பெரும். பத்து மற்றும் இரண்டாம் பாவ தொடர்பு கொண்டால் பேச்சால் வருமானம் ஈட்டுபவர். உதாரணமாக தொகுப்பாளர், ஜோதிடர், மார்க்கெட்டிங், பேச்சாளர்கள், கலைத்துறை, உணவு துறை, முகம் சார்ந்த ஒப்பணை என்று அடுக்கி கொண்டு போகலாம். இவற்றில் அரசியல் பேச்சும், குடும்பத்தின் மூலம் வருமானம், வட்டி தொழில்,  கண் மற்றும் முகம் சார்ந்த தொடர்பு கொண்ட செயல் மூலம் வருமானம் இருக்கும். இரண்டாம் பாவம் கொண்டு மனைவி மூலம் வருமானம். இரண்டாம்   பாவம் இருந்தால் குடும்பத்தை குறிக்கும். அவர்கள் மூலமாகவும்  வருமானம் வரும். இவற்றை எல்லாம் ஜோதிட சூட்சமத்தில் நன்கு ஆராய்ந்து சொல்ல வேண்டும். ஈட்டிய வருமானத்தை சரியான முறையில் சொத்து சேர்க்க சுக்கிரன், குரு பலம் அவசியம் தேவை. குரு என்பவர் ஒருவரை கோடீஸ்வர நிலைக்கு அழைத்துச் செல்ல முடியும்.

இரண்டாம் பாவத்தில் வாக்கு என்ற காரகத்துவமும் அடங்கும்.  அது  உண்மையான பேச்சா, போலியான பேச்சு கொண்டு வருமானம் பெறுவார்களா என்றும் ஒருவர் ஜாதகத்தில் பார்த்து சொல்லலாம். அங்குள்ள கிரகங்களின் தொடர்பு கொண்டு அறியலாம். திருவள்ளுவர் தன் பாடல் வரிகளில் சொல்வன்மை பற்றி அதிகமாக சொல்லபட்டுள்ளது. அவற்றில் முக்கியமான ஒன்று ஒருவர் பேசும் வார்த்தை..  இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய்கவர்ந்தற்று" என்கிறார் வள்ளுவ பெருந்தகை. 

முக்கியமாக ஒருவர்  உண்மையை உணர்ந்தவர்களின் வாய்ச் சொல் எந்த அளவுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்குமோ, அதுபோல, நல்ல இனிமையான வார்த்தைகள் மனதில் இன்பத்தையும், நெஞ்சில் ஈரத்தையும் கசிந்துருகச் செய்துவிடும். ஜாதகத்தில் உண்மையாக மற்றும் இனிமையாக பேசுபவர்கள் லக்கினதோடு இரண்டாம் பாவமும் அங்கு அமரும் சுபரும், அந்த பாவத்தை பார்ப்பவரும்  முக்கியப் பங்கு வகிக்கின்றனர்.

ஒருவர் பேசுவதில் இனிமை இருந்தாலும் பொய் மறைந்திருக்கும், ஒருசிலர் உண்மையை   வெளிப்படையாக பேசினாலும் அவற்றில் ஒரு ஆக்ரோஷம் இருக்கும், மற்றொரு  தரத்தினர் பேச்சில் வஞ்ச புகழ்ச்சி இருக்கும். உண்மையாக ஒருவர் பேசும்பொழுது மற்றவர் ஏற்றுக்கொள்ளும் அளவு உண்மையை உணர்த்தும் விதமாக, அவர்களுக்கு நன்மை பயக்கும் விதமாக பேசவேண்டும். பொதுவாக ஜாதக சூட்சமத்தில் பார்க்கும் பொழுது இரண்டாம் பாவத்தில் சுபகிரகங்கள், அதாவது குரு, சுக்கிரன், புதன் இருந்தால் நன்று. இங்கு பேச்சில் படபடப்பு, மறைக்கும் தன்மை  மற்றும் தெளிவு இல்லாமல் இருந்தால் அங்கு சந்திரன் ராகு, கேது வேலை அதிகமாக இருக்கும். 

இரண்டாம் பாவத்தில் செவ்வாய், சூரியன் இருந்தால் சுடும் மற்றும் கடும் சொல்லாக இருக்கும். அவற்றில் அந்த சுடும் சொல்லின் உண்மை தன்மை அந்த கிரகத்தின் ராசி சாரம் பொறுத்து அமையும். தொழிலை நிர்வகிப்பவருக்கு செவ்வாய், சூரியன் பலம் முக்கியமாக தேவை.  ஒருசில தொழில்கள் தைரியம் மற்றும் ரிஸ்க் எடுத்தால்தான்  வருமானம் ஈட்டமுடியும். அவற்றிற்கும்  சூரியன், செவ்வாய் பலம் பொருந்தி இருக்க வேண்டும்.

பொதுவாகவே ராசியோ / லக்னமா 12 பாவத்திற்கும் உண்மையான குணங்கள் பேச்சு தன்மைகள் மாறுபடும். ஒருசில எடுத்துக்காட்டு மூலம் பார்க்கலாம். கடக ராசிக்காரர்கள் பேசுவதில் உண்மை இருந்தாலும் ஒரு படபடப்பும் மற்றவர்களை பயமுறுத்தும் விதமாக, அவர்கள் உண்மையே பேசினாலும் நம்பத்தகாததாக இருக்கும். அதுவே சிம்மமாக இருந்தால் உண்மையான வார்த்தை கலந்த கடும் பேச்சாக இருக்கும்.  அதேபோல் சுக்கிரன் வீடான ரிஷபம், துலாம் இருவரும் மாறுபட்டு இருப்பார்கள். ரிஷபத்தில் சந்திரன் உச்சமாகவும் மூலதிரிகோணம் பெற்று இருப்பதால் பேச்சில் மற்றவரை கவரும் தன்மையும், அதோடு செயலை உறுதியாக்க பேச்சில் மறைக்கும் மற்றும் போலி தன்மை இருக்கும். அதீத வருமானம்  ஈட்ட இவர்களின் கவரும் பேச்சே மூலதனமாக அமையும். அதுவே மற்றொரு ஆதிபத்தியம் பெற்ற சுக்கிரன் வீடான  துலா ராசி என்றால் பேச்சில் அழகு, அதோடு உண்மை, நீதி கலந்து இருக்கும். ஆனால் அவர்கள் சொல்லுவதை மற்றவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.  அங்கு சனி உச்சம், அதனால் உடைத்து பேசும் தன்மை, அதோடு நியமான பேச்சு அமையும்.

நாம் செய்யும் கர்மாவின் வெளிப்பாட்டிற்கு ஏற்ப உழைப்பின் மூலம் வருமானம் ஈட்ட ஒவ்வொரு தொழிலுக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட கிரகங்களின் உதவி தேவை. ஒருவர் பேச்சைத் தொழிலாகக் கொண்டவர்கள்  நாக்கில் புதன், சுக்கிரன், குருவின் அனுகிரகம் தேவைப்படுகிறது. நிர்வாக தொழிலை கட்டிக்காப்பவர்களுக்கும் அரசியல் பேச்சாளர்களுக்கு நெருப்பு கிரகங்களான சூரியன் அல்லது செவ்வாயின் பலம் தேவைப்படுகிறது. இவற்றோடு புத்திக்கும், கடின உழைப்புக்கும்  புதன் சனி வலுக்கவேண்டும்.  நீர்மட்டத்தில் உள்ள பொருள் அல்லது நீரை சார்ந்து தொழில் புரிபவருக்கும் அதோடு செலவை சரியாக பார்க்க சந்திரன் உதவி தேவைப்படுகிறது. இவற்றில் வருமானத்திற்கு ஆசைப்படாமல் ஆன்மீக பேச்சுக்கு குரு, கேது தொடர்பு அவசியம் தேவை. 

அனைத்து கிரகங்களின்  உதவி இருந்தால் கட்டாயம் வெற்றி பெறுவது நிச்சயம். அவரவர் ஜாதகத்தில் யார் நமக்கு உதவ முன்வருவார்கள் என்று பார்க்க வேண்டும். இந்த பிரபஞ்ச சக்தியையும் நம்மையும் செயல்படுத்த சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு சுக்கிரன், சனி முக்கிய பங்கு வகிக்கிறது. அதோடு நம் வருமானத்தையும்  இரட்டிப்பு ஆக்கவும்  மற்றும் பற்றற்று ஆசையை குறைத்து வருமானம் வரும் பாதையை குறைக்கவும் ராகு - கேது முன்நிற்பார்கள். 

ஜாதகருக்கு எந்த கிரகங்கள் உதவுமோ அவற்றின் உதவியுடன் மற்றும் கடவுளின் அருளுடன், உழைப்புடன் முயற்சி என்கிற மூன்றாம் பாவம் தொடர்ச்சியாக நல்வழியில் வருமானத்தை ஈட்டுவோம். 

ஜோதிட சிரோன்மணி தேவி 
வாட்ஸ்ஆப்:8939115647
மின்னஞ்சல்: vaideeshwra2013@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com