Enable Javscript for better performance
பாளையத்தம்மன் கோயிலில் தீமிதி திருவிழா- Dinamani

சுடச்சுட

    
    amman

    ஊத்துக்கோட்டையை அடுத்த பூண்டி ஒன்றியம், பென்னாலூர்பேட்டை கிராம தேவதை ஸ்ரீபாளையத்தம்மன் கோயிலில் 26-ஆம் ஆண்டு தீ மிதி திருவிழா ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.
    முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமை பெண்கள் பால்குடம், சீர்வரிசைகள் ஏந்தி கோயிலுக்கு ஊர்வலமாக வந்தனர். பின்னர் அம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது.
    இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை காலை நோன்பு இருந்த தீமிதிக்கும் பக்தர்களுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும், கரக ஊர்வலம், கூழ்வார்த்தல், பொங்கலிடுதல் ஆகியன நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து இரவு 7 மணிக்கு மஞ்சள் ஆடை அணிந்து 200-க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் குழந்தைகளுடன் தீக்குண்டம் இறங்கி நேர்த்திக் கடனை நிறைவேற்றினர்.
    இரவு அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அம்மன் திருவீதி உலா, வாண வேடிக்கை, மேளதாளம் முழங்க நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai