சுடச்சுட

  
  amman1

   

  நாமக்கல் அருகேயுள்ள சிலுவம்பட்டி மாரியம்மன் கோயிலில் நாளை மகா கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது.

  நாமக்கல் அருகே சிலுவம்பட்டி கிராமத்தில், செல்வ விநாயகர், மகா சக்தி மாரியம்மன், மதுரை வீரன் கோயில் மகா கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை (ஜூன் 14) நடைபெறுகிறது.  அதையொட்டி,  மோகனூர் காவிரி ஆற்றில் இருந்து புதன்கிழமை காலை பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். வியாழக்கிழமையான இன்று காலை 6 மணிக்கு, கணபதி ஹோமம், லட்சுமி, நவக்கிரஹ ஹோமம் நடைபெறுகிறது.  

  மாலை 5 மணிக்கு வாஸ்து சாந்தி, முதற்கால மகா வேள்விகள்,  தீபாராதனை உள்ளிட்டவையும், இரவு 10 மணிக்கு கோபுரக் கலசம், மருந்து சாற்றுதல் நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.  

  நாளை காலை 5 மணிக்கு திருமுறை பாராயணம்,  துவாரகா பூஜையும், 6 மணிக்கு செல்வ விநாயகர், நவக்கிரகங்கள்,  சக்தி மாரியம்மன், பொம்மியம்பிகா, வெள்ளையம்பிகா சமேத மதுரை வீரன் சுவாமிக்கு மகா கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது.  விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai