Enable Javscript for better performance
திருத்தணி முருகன் கோயிலில் ஆடிக்கிருத்திகை விழா கோலாகலம்- Dinamani

சுடச்சுட

    

    திருத்தணி முருகன் கோயிலில் ஆடிக்கிருத்திகை விழா கோலாகலம் 

    By dn  |   Published on : 28th July 2016 11:28 AM  |   அ+அ அ-   |  

    tiruthani2

    திருத்தணி: அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாக போற்றப்படும் திருத்தணி முருகன் கோயிலில் ஆடிக்கிருத்திகை விழா இன்று கோலாகலமாக நடைபெற்று வருகின்றது.

    மூன்று நாள் தெப்பத் திருவிழா செவ்வாய்க்கிழமை தொடங்கியது. நேற்று நடைபெற்ற ஆடி பரணி விழாவில் லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டனர். இன்று நடைபெறும் விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு மூலவரை தரிசித்து மகிழ்ந்தனர்.

    ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து காவடிகளுடன் பக்தர்கள் திருத்தணியில் குவிந்த வண்ணம் உள்ளனர். விழாவையொட்டி, சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

    நேர்த்திக் கடன் செலுத்தும் வகையில் பக்தர்கள் மொட்டையடித்து சரவணப்பொய்கை, நல்லாங்குளம் ஆகிய குளங்களில் நீராடி கோயில் படிகள் வழியாகவும், மலைப்பாதை வழியாகவும் கோயிலை அடைந்து, பல மணி நேரம் காத்திருந்து, முருகப்பெருமானை வழிபட்டு வருகின்றனர்.

    பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததைத் தொடர்ந்து, நகரில் பேருந்துகள், லாரிகள், ஆட்டோக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai