Enable Javscript for better performance
ஐப்பசி மாத பௌர்ணமி: திருவண்ணாமலையில்2-ஆவது நாளாக பக்தர்கள் கிரிவலம்- Dinamani

சுடச்சுட

    

    ஐப்பசி மாத பௌர்ணமி: திருவண்ணாமலையில் 2-ஆவது நாளாக பக்தர்கள் கிரிவலம்

    By DIN  |   Published on : 15th November 2016 04:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    annamalai

    ஐப்பசி மாத பௌர்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் 2-ஆவது நாளாக திங்கள் கிழமை ஏராளமான பக்தர்கள் கிரிவலம் வந்தனர்.
    அக்னி ஸ்தலமான திருவண்ணாமலையில், கிரிவலம் பிரசித்தி பெற்றது. இங்குள்ள 14 கி.மீ. தொலைவு கிரிவலப் பாதையை வலம் வந்து அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மன், திருநேர் அண்ணாமலையார் கோயில், அஷ்டலிங்க சந்நிதிகளை வழிபட்டால் நினைத்தது நடக்கும் என்பது ஐதீகம். எனவே, ஒவ்வொரு மாத பௌர்ணமி அன்றும் பல லட்சம் பக்தர்கள் கிரிவலம் வந்து, அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை வழிபடுகின்றனர்.
    ஐப்பசி மாத பௌர்ணமியையொட்டி, ஞாயிற்றுக்கிழமை (நவ.13) இரவு 10.29 மணி முதல் திங்கள்கிழமை இரவு 8.09 மணி வரை பக்தர்கள் கிரிவலம் வரலாம் என்று அருணாசலேஸ்வரர் கோயில் நிர்வாகம் அறிவித்திருந்தது.
    அதன்படி, ஞாயிற்றுக்கிழமை மாலையில் இருந்து திங்கள்
    கிழமை (நவ.14) காலை வரை விடிய விடிய ஏராளமான பக்தர்கள் கிரிவலம் வந்தனர்.
    2-ஆவது நாளாக கிரிவலம்: தொடர்ந்து, 2-ஆவது நாளாக திங்கள்கிழமை காலை முதல் இரவு வரை ஏராளமான பக்தர்கள் கிரிவலம் வந்தனர்.
    திங்கள்கிழமை பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இருப்பினும், வெயிலையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் பலர் காலணி அணியாமல் கிரிவலம் வந்து அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை வழிபட்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai