Enable Javscript for better performance
நரசிம்ம பெருமாள் கோயிலில் அன்னக்கூடை உற்சவம்- Dinamani

சுடச்சுட

    
    abesigham

    திருவள்ளூரை அடுத்த நரசிங்கபுரத்தில் உள்ள நரசிம்ம பெருமாள் கோயிலில் மூலவர் முன் வைக்கப்பட்டிருந்த அன்னக்கூடைகள்.

    திருவள்ளூர் அருகே அமைந்துள்ள ஸ்ரீலட்சுமி நரசிம்ம பெருமாள் கோயிலில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அன்னக்கூடை மகா உற்சவத்தில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
    திருவள்ளூரை அடுத்த நரசிங்கபுரம் கிராமத்தில் பழைமைவாய்ந்த ஸ்ரீலட்சுமி நரசிம்ம பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் மூலவர் நரசிம்மர், தாயாரை மடிமீது அமர்த்தி அணைத்த கோலத்தில், ஏழரை அடி உயரத்தில் கம்பீரமாகக் காட்சி அளிக்கிறார்.
    இங்கு மாதந்தோறும் பெருமாள் ஜென்ம நட்சத்திரமான சுவாதியன்று மூலவருக்கு சிறப்புத் திருமஞ்சனம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, ஞாயிற்றுக்கிழமை சுவாதி மற்றும் அன்னக்கூடை மகா உற்சவம் நடைபெற்றது.
    இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு மூலவர் நரசிம்மரை தரிசனம் செய்தனர். விழாவை ஒட்டி காலை 5.30 மணியளவில் கோ பூஜை நடைபெற்றது. தொடர்ந்து 9.30 மணியளவில் யாக பூஜையுடன் மூலவருக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. பகல் 11 மணியளவில் மூலவருக்கு முன் பலவகையான இனிப்புகள், பலகாரங்கள் ஆகியவை வைக்கப்பட்டு அன்னக்கூடை மகா உற்சவம் நடைபெற்றது.
    பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 5 மணியளவில் உற்சவர் நரசிம்ம பெருமாள் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
    இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீலட்சுமி நரசிம்ம சுவாமி சேவா சபை அறக்கட்டளையினர் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai