Enable Javscript for better performance
பிரம்மோற்சவம் நான்காம் நாள் கல்ப விருட்ச வாகனத்தில்மலையப்ப சுவாமி- Dinamani

சுடச்சுட

    

    பிரம்மோற்சவம் நான்காம் நாள் கல்ப விருட்ச வாகனத்தில் மலையப்ப சுவாமி

    By DIN  |   Published on : 07th October 2016 03:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    tirupathi

    திருமலையில் நடைபெற்று வரும் பிரம்மோற்சவத்தின் நான்காம் நாளான வியாழக்கிழமை, கல்ப விருட்ச வாகனத்தில் மலையப்ப சுவாமி வலம் வந்தார்.
    வியாழக்கிழமை காலை 9 மணி முதல் 11 மணி வரை கல்ப விருட்ச வாகனத்தில் நாரை வாய் பிளந்த கிருஷ்ணர் அவதாரத்தில் மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவியுடன் சேர்ந்து மாடவீதியில் வலம் வந்து சேவை சாதித்தார். பின்னர், இரவு 9 மணி முதல் 11 மணி வரை பலவித வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சர்வ பூபால வாகனத்தில் மாட வீதியில் வலம் வந்தார். வாகன சேவையின் முன், ஜீயர் சுவாமிகள் குழாம் நாலாயிர திவ்யப் பிரபந்தங்களைப் பாடியபடி சென்றது. பின்புறம், இசைக் கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
    திருமஞ்சனம்: பிரம்மோற்சவ காலத்தில் மாட வீதியில் பவனி வரும் களைப்பை போக்க, வியாழக்கிழமை மதியம் மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோருக்கு பால், தயிர், தேன், மஞ்சள், சந்தனம், பழங்கள், மூலிகைகள் கலந்த வெந்நீரால் ஸ்நபன திருமஞ்சனம் நடைபெற்றது.
    தொடர்ந்து, மாலையில் மலையப்ப சுவாமி 108 விளக்குகளுக்கு இடையில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் ஊஞ்சல் சேவை கண்டருளினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai