Enable Javscript for better performance
உண்டியல் காணிக்கை ரூ. 2.93 கோடி- Dinamani

சுடச்சுட

    

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ. 2.93 கோடி வசூலானது.
    திருமலைக்கு வரும் பக்தர்கள் ஏழுமலையானை தரிசித்து திரும்பும்போது, உண்டியலில் காணிக்கையை செலுத்தி வருகின்றனர். அதன்படி, புதன்கிழமை மாலை முதல் வியாழக்கிழமை மாலை வரை பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கையைக் கணக்கிட்டதில் ரூ. 2.93 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
    75 ஆயிரம் பேர் தரிசனம்: ஏழுமலையானை வியாழக்கிழமை முழுவதும் 75,700 பக்தர்கள் தரிசித்தனர். இவர்களில் 44,607 பக்தர்கள் தலைமுடியை காணிக்கையாகச் செலுத்தினர். வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி தர்ம தரிசன பக்தர்கள் சுமார் 14 மணி நேர காத்திருப்புக்குப் பின் ஏழுமலையானை தரிசித்தனர்.
    நடைபாதை பக்தர்களுக்கு சுமார் 12 மணி நேரம் ஆனது.
    ரூ. 11 லட்சம் நன்கொடை: ஏழுமலையான் பெயரில் தேவஸ்தானம் ஏற்படுத்தி உள்ள பல்வேறு அறக்கட்டளைகளுக்கு பக்தர்கள் தினசரி நன்கொடை அளித்து வருகின்றனர். அதன்படி, வியாழக்கிழமை அன்னதான அறக்கட்டளைக்கு ரூ. 10 லட்சம், உயிர் காக்கும் மருத்துவ அறக்கட்டளைக்கு ரூ. 1 லட்சம் என ரூ. 11 லட்சம் நன்கொடையாக வழங்கப்பட்டது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai