Enable Javscript for better performance
திருமலையில் கோ பூஜை தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    
    go-pooja

    திருமலையிலுள்ள கோ சாலையில் வெள்ளிக்கிழமை கோ பூஜை நடைபெற்றது.
    திருமலையிலுள்ள வராக சுவாமி விருந்தினர் மாளிகை எதிரில் தேவஸ்தானம் கோ சாலையை ஏற்படுத்தி 50 பசுக்களை பராமரித்து வருகிறது.
    இங்கிருந்து பெறப்படும் பால் மூலம் ஏழுமலையானுக்கும், உற்சவ மூர்த்திகளுக்கும் அபிஷேகம் நடைபெற்று வருகிறது.
    அதேபோல், திருப்பதியிலுள்ள வெங்கடேஸ்வரா கோ சாலையில் கார்த்திகை பௌர்ணமி, மாட்டுப் பொங்கல், கிருஷ்ண ஜெயந்தி உள்ளிட்ட விசேஷ நாள்களில் கோ பூஜை நடைபெற்று வருகிறது.
    இந்நிலையில், திருமலையிலுள்ள கோ சாலையில் இனி வெள்ளிக்கிழமைதோறும் அதிகாலையில் கோ பூஜை நடத்த தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
    அதன்படி, வெள்ளிக்கிழமை காலை திருமலையிலுள்ள கோ சாலையில் கோ பூஜை நடைபெற்றது. இதில், தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai