Enable Javscript for better performance
நெல்லூர் பாராஷாஹீத் தர்காவில் ரொட்டி பண்டிகை நாளை நிறைவு- Dinamani

சுடச்சுட

    

    நெல்லூர் பாராஷாஹீத் தர்காவில் ரொட்டி பண்டிகை நாளை நிறைவு

    By DIN  |   Published on : 15th October 2016 02:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    nellore

    நெல்லூரிலுள்ள பாராஷாஹீத் தர்காவில் ரொட்டி பண்டிகை ஞாயிற்றுக்கிழமை (அக். 16) நிறைவடைகிறது.
    ஆந்திர மாநிலம், நெல்லூரிலுள்ள பாராஷாஹீத் தர்கா உலக அளவில் புகழ்பெற்றது.
    சில நூற்றாண்டுகளுக்கு முன், ஆற்காடு நவாப் ஆட்சியின் கீழ் நெல்லூர் இருந்தது. ஒரு சமயம், நவாபின் மனைவி மிகவும் நோய்வாய்ப்பட்டு இருந்தார்.
    நெல்லூரிலுள்ள பாராஷாஹீத் தர்காவுக்கு சென்று பிரார்த்தனை செய்து, அங்கு தங்கினால் அவருடைய நோய் குணமாகும் என சலவைத் தொழிலாளிகள் மன்னரிடம் தெரிவித்தனர். அதன்படி, மன்னரும் தன் மனைவியுடன் அங்கு சென்று தங்கினார். மறுநாள், அவருடைய நோய் குணமடைந்தது.
    அப்போது, மன்னர் தான் கொண்டு வந்த ரொட்டிகளை பொதுமக்களுக்கு பகிர்ந்தளித்தார். பக்தர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதால், அன்று முதல் மொகரம் மாதத்தில் இங்கு ரொட்டி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இதன்படி, பக்தர்கள் தாங்கள் செய்து எடுத்து வரும் ரொட்டிகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்கின்றனர்.
    இந்த ஆண்டு, பாராஷாஹீத் தர்காவில் ரொட்டி பண்டிகை புதன்கிழமை தொடங்கியது. இப்பண்டிகை, ஞாயிற்றுக்கிழமை நிறைவடைகிறது. இதில், ஒட்டுமொத்தமாக பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 12 லட்சம் பேர் கலந்துகொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai