ஏழுமலையான் கோயிலில் முடி காணிக்கை வருவாய் ரூ.13.54 கோடி

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் முடி காணிக்கை வருவாய் ரூ. 13.54 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.
Published on
Updated on
1 min read

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் முடி காணிக்கை வருவாய் ரூ. 13.54 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.
ஏழுமலையானுக்கு பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் தலைமுடியை தேவஸ்தானம் ரகம் வாரியாக தரம் பிரித்து, மாதந்தோறும் முதல் வியாழக்கிழமை அன்று இணையதள ஏலம் மூலம் விற்பனை
செய்து வருகிறது. அதன்படி, வியாழக்கிழமை மாலை நடைபெற்ற இணையதள ஏலத்தில் 11 ஆயிரம் கிலோ தலைமுடி, ரூ13.54 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டதாக தேவஸ்தானம் தெரிவித்தது.

64,960 பக்தர்கள் தரிசனம்
ஏழுமலையானை புதன்கிழமை முழுவதும் 64,960 பக்தர்கள் தரிசித்தனர். இவர்களில், 27,451 பக்தர்கள் தலைமுடியைக் காணிக்கையாகச் செலுத்தினர். வியாழக்கிழமை காலை நிலவரப்படி, தர்ம தரிசன
பக்தர்கள் 2 அறைகளில், மூன்று மணி நேரம் காத்திருந்து ஏழுமலையானைத் தரிசித்தனர். 
திவ்ய தரிசன பக்தர்கள் வரிசையில் காத்திருக்காமல் டோக்கனில் குறிப்பிட்டுள்ள நேரத்துக்கு சென்றால் நேரடியாக தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர். 20 ஆயிரம் பேருக்கு பின்னர் வரும்
நடைபாதை பக்தர்கள், தர்ம தரிசனத்தில் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். 
ரூ. 23.86 லட்சம் நன்கொடை
ஏழுமலையான் பெயரில் தேவஸ்தானம் ஏற்படுத்தி உள்ள பல்வேறு அறக்கட்டளைகளுக்கு பக்தர்கள் தினமும் நன்கொடை அளித்து வருகின்றனர். அதன்படி, புதன்கிழமை ஏழுமலையானின் அன்னதான
அறக்கட்டளைக்கு ரூ. 10.86 லட்சம், கோ சம்ரக்ஷண அறக்கட்டளைக்கு ரூ. 1 லட்சம், உயிர்காக்கும் மருத்துவ அறக்கட்டளைக்கு ரூ. 1 லட்சம், ஸ்ரீபாலாஜி ஆரோக்கிய வரப்பிரசாதினி அறக்கட்டளைக்கு
ரூ. 10 லட்சம், வேத பரிரக்ஷண அறக்கட்டளைக்கு ரூ. 1லட்சம் என மொத்தம் ரூ. 23.86 லட்சம் நன்கொடையாக வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com