காவிரி மகா புஷ்கர விழா: குடந்தையில் செப்.19-இல் புனித நீராடல்; மகா ஆரத்தி

காவிரி மகா புஷ்கர விழாவை முன்னிட்டு, கும்பகோணத்தில் செப்டம்பர் 19-ம் தேதி காலை காவிரியில் புனித நீராடலும், மாலையில் மகா ஆரத்தியும் நடைபெறவுள்ளது என்றார் பேரூர் ஆதீனம் மருதாச்சல அடிகளார்.
புஷ்கர விழா பத்திரிகையை அகில பாரத துறவியர் சங்கச் செயலாளர் சுவாமி ராமானந்தா வெளியிட, கும்பகோணம் விழாக் குழு சார்பில் பெற்றுக்கொள்ளும் கல்யாணசுந்தரம், சத்தியநாராயணன், முரளி ஆகியோர்.
புஷ்கர விழா பத்திரிகையை அகில பாரத துறவியர் சங்கச் செயலாளர் சுவாமி ராமானந்தா வெளியிட, கும்பகோணம் விழாக் குழு சார்பில் பெற்றுக்கொள்ளும் கல்யாணசுந்தரம், சத்தியநாராயணன், முரளி ஆகியோர்.

காவிரி மகா புஷ்கர விழாவை முன்னிட்டு, கும்பகோணத்தில் செப்டம்பர் 19-ம் தேதி காலை காவிரியில் புனித நீராடலும், மாலையில் மகா ஆரத்தியும் நடைபெறவுள்ளது என்றார் பேரூர் ஆதீனம் மருதாச்சல அடிகளார்.
காவிரி மகா புஷ்கரத்தையொட்டி, கும்பகோணத்தில் காவிரி ஆற்றை மகா புஷ்கர விழாக் குழுவினர் திங்கள்கிழமை பார்வையிட்டனர். பிறகு, விழா பத்திரிகையை அகில பாரத துறவியர் சங்கச் செயலாளர் சுவாமி ராமானந்தா வெளியிட, கும்பகோணம் விழாக் குழு சார்பில் கல்யாணசுந்தரம், சத்தியநாராயணன், முரளி ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
தொடர்ந்து, பேரூர் ஆதீனம் மருதாச்சல அடிகளார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
காவிரி புஷ்கரம் 144 ஆண்டுகளுக்குப் பிறகு கொண்டாடப்பட உள்ளது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குருபகவான் கன்னி ராசியிலிருந்து துலாம் ராசிக்கு பிரவேசிக்கும் போது நடத்தப்படும் விழாவாகும். வரும் செப். 12 ஆம் தேதி தொடங்கி 24 ஆம் தேதி வரை காவிரி நதி உற்பத்தியாகும் குடகு மலையிலிருந்து வங்கக் கடலில் கலக்கும் பூம்புகார் வரை இவ்விழாவை கொண்டாட உள்ளோம்.
துலா கட்டமான மயிலாடுதுறையில் இவ்விழா சிறப்பாகக் கொண்டாடப்பட உள்ளது. அதேபோல, செப். 19 இல் மகாளய அமாவாசை என்பதால், கும்பகோணம் காவிரி ஆற்றில் பகவத் படித்துறையில் காலையில் புனித நீராடலும், மாலையில் மகா ஆரத்தியும் நடைபெறவுள்ளது. இந்த விழாக்களில் பல ஆயிரக்கணக்கானோர் பங்கேற்க உள்ளனர்.
காவிரி அன்னையை போற்றும் விதத்தில் 6 அடி உயரத்தில் கற்சிலைகள் வடிவமைக்கப்பட்டு வருகிறது. இந்த சிலைகள் காவிரி ஆற்றின் கரைகளான குளித்தலை, திருவாலங்காடு, மயிலாடுதுறை ஆகிய இடங்களில் அமைக்கப்பட உள்ளது.
காவிரி புஷ்கர விழாவின் போது, காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக, செப்டம்பர் முதல் வாரத்தில் கர்நாடக முதல்வரை சந்தித்து காவிரியில் கூடுதலாக தண்ணீர் திறக்க வேண்டுகோள் விடுக்கப்படும். அதேபோல, தமிழகத்தில் ஒகேனக்கல் முதல் பூம்புகார் வரை காவிரி ஆற்றில் செப். 12 முதல் 24 வரை நீராடும் அளவுக்கு தண்ணீர் வரத்தை பராமரிக்க தமிழ அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரியில் புனித நீராட ஏதுவாக அனைத்து கட்டமைப்புகளையும் செய்து தரவேண்டும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com