திருவொற்றியூர் ஆதிபுரீஸ்வரருக்கு இன்று புணுகு சாம்பிராணி தைல அபிஷேகம்

திருவொற்றியூர் தியாகராஜர் கோயிலில் உள்ள ஆதிபுரீஸ்வரர் மீதுள்ள வெள்ளிக்கவசம் ஞாயிற்றுக்கிழமை அகற்றப்பட்டு, புணுகு சாம்பிராணி தைல அபிஷேகம் நடத்தப்படவுள்ளது.

திருவொற்றியூர் தியாகராஜர் கோயிலில் உள்ள ஆதிபுரீஸ்வரர் மீதுள்ள வெள்ளிக்கவசம் ஞாயிற்றுக்கிழமை அகற்றப்பட்டு, புணுகு சாம்பிராணி தைல அபிஷேகம் நடத்தப்படவுள்ளது.
இதுகுறித்து கோயில் செயல் அலுவலர் எஸ்.சிவகுமார் கூறியது:
தொண்டை மண்டல சிவஸ்தலங்கள் 32 கோயில்களில் முதலாவதாக திருவொற்றியூர் தியாகராஜர் கோயிலில் படம்பக்கநாதர் ஆதிபுரீஸ்வரராக வீற்றுள்ளார். சுயம்புவாக உருவானதாகக் கருதப்படும் ஆதிபுரீஸ்வரர் திருமேனி ஆண்டு முழுவதும் வெள்ளிக் கவசத்தால் மூடப்பட்டிருக்கும். இந்நிலையில் ஆண்டுதோறும் கார்த்திகை பெüர்ணமியையொட்டி மூடப்பட்டிருக்கும் வெள்ளிக் கவசம் 3 நாள்களுக்கு மட்டும் திறந்து வைக்கப்படும். 
ஞாயிற்றுக்கிழமை மாலை திறக்கப்படும் வெள்ளிக் கவசம் செவ்வாய்க்கிழமை மீண்டும் மூடப்படும். இந்த மூன்று நாள்களும் ஆதிபுரீஸ்வரருக்கு புணுகு சாம்பிராணி தைல அபிஷேகம், மஹா அபிஷேகம் நடைபெறும்.
ஞாயிற்றுக்கிழமை இரவு தியாகராஜசுவாமி மாடவீதி உலாவரும் உற்சவம் நடைபெற உள்ளது. மூன்று நாள்கள் மட்டுமே கவசம் திறக்கப்பட்ட நிலையில், ஆதிபுரீஸ்வரரை தரிசிக்க முடியும் என்பதால் பக்தர்கள் திரளானோர் பங்கேற்பர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com