அப்பய்ய தீட்சிதர் தர்மசாலை

மனிதனுக்கு இன்றியமையாததாக பார்வை வழங்கும் கண்களைப் பாதுகாக்க, மருத்துவம் அளிக்க..
அப்பய்ய தீட்சிதர் தர்மசாலை

மனிதனுக்கு இன்றியமையாததாக பார்வை வழங்கும் கண்களைப் பாதுகாக்க, மருத்துவம் அளிக்க சென்னையில் பல கண் மருத்துவமனைகள் உள்ளன. அவற்றில் சிறந்து விளங்கும் எம்.என். கண் மருத்துவமனை மக்களுக்கு பல மருத்துவ சேவைகளை அளித்து வருகிறது. 

வட சென்னை, தண்டையார்பேட்டையில் 1981-ம் ஆண்டு சிறிதாக துவக்கப்பட்டு மருத்துவ பணிகளை மேற்கொண்டது. அக்காலத்தில் மக்கள் எளிய தொகை செலுத்தி மருத்துவ வசதிகளை பெற கஷ்டப்படுவதைக் கண்டு 1987-ம் ஆண்டு ஏழை, எளிய மக்களுக்காக மற்றும் சேவை பணி துவக்கப்பட்டது. தனது தாயின் பெயரால் மருத்துவ சேவை பணிகள் நடைபெற்று வருவதாக மருத்துவர் மதிவாணன் நடராஜன் மற்றும் மருத்துவர் ஷாலினி மதிவாணன் அகியோர், அப்பய்ய தீட்சதர் பவுண்டேஷன் சார்பில் தர்மசாலை துவக்கும் நிகழ்ச்சியில் (14.4.2018) தெரிவித்தனர். 

கண்களில் ஏற்படும் புரை நீக்கும் (CATARACT) சிகிச்சை இதுவரை 70,000 பேருக்கும் மேல் செய்து சேவை செய்துள்ளது. இம்மருத்துவமனை சென்னையை சுற்றியுள்ள கிராமங்களில், பணம் செலுத்தி மருத்துவ வசதி பெறாத இயலாதவர்களை கண்டு அவர்களிக்ல 25 பேரை அழைத்து உரிய மருத்துவ வசதி அளிக்கும் மகத்தான பணியினை
செய்து வருகின்றர். 

இதே போன்று அனைத்து பள்ளிகளுக்கும் சென்று பார்வை குறையுள்ள மாணவர்களை கண்டு அவர்களுக்கும் சேவை ஆற்றுகிறது. மானத்தில் சிறந்தது கண் தானம். கண் வங்கி ஏற்படுத்தி பார்வை குறைவு உள்ளவர்களுக்கு கண்விழி பொருத்தும் சேவையும் செய்து வருகிறது. 

மருத்துவர்களின் மகன்களும், மருமகள்களும் கண் மருத்துவர்களாக இருப்பதால் ஏழை எளிய மக்களுக்கு மருத்துவ சேவை செய்யும் பணியினை எம்.என்.மருத்துவமனை எளிதாக செய்து வருகிறது. இதற்கு உதவியாக அன்பான சேவை மருத்துவமனை பணியாளர்களும் செய்து வருகின்றனர்.

இவ்வாறு மருத்துவ வசதி பெற வரும் ஏழை எளிய மக்களுக்கு தேவைப்படும் உணவு அளிக்க வேண்டும் பொருட்களை அளிக்க அப்பய்ய தீட்சிதர் தர்மசாலை என்ற அமைப்பு துவக்கப்பட்டுள்ளது. இதனை சென்னை கொட்டிவாக்கம் அப்பய்ய தீட்சிதர் பவுண்டேஷன் அமைப்பின் நிறுவனர் எஸ். சீனிவாசன் முழு முயற்சியினை எடுத்துள்ளார்.

துவக்கவிழா தமிழ்ப்புத்தாண்டு முதல் நாள் 14.04.18 அன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியினை துவக்கி வைத்து நீதிபதி ராமநாதன் மற்றும் சி.எல்.ராமகிருஷ்ணன், மூத்தவழக்கறிஞர் குபேரன் ஆகியோர் மருத்துவமனையின் சேவைகளைப் போற்றி பேசினார்கள். இந்நிகழ்ச்சியில் மடிப்பாக்கத்தைச் சேர்ந்த பெண்மணிகள் லலிதா சகஸ்ரநாம பாராயணம் செய்தனர்.

சிவவழிபாட்டின் உயர்ந்த தத்துவத்தை எடுத்துக்கூறிய அப்பய்ய தீட்சிதரின் வரலாறு, பெருமைகளை படக்காட்சியுடன் தொல்லியல்துறை (ஓய்வு) பெற்ற கி.ஸ்ரீதரன் எடுத்துரைத்தார். 

மக்கள் சேவையே மகேசன் சேவை - மருத்துவ வசதி பெற வரும் எளியோர்க்கு உணவு வழங்க அப்பய்ய தீட்சிதர் தர்மசாலை என்ற அமைப்பு துவங்கப்பட்டுள்ளது. இச்சேவையில் அனைவரும் பங்கு கொண்டு உதவிகளை அளிக்கலாம்.

தொடர்புக்கு: 9791019450

தகவல் - கி. ஸ்ரீதரன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com