திருப்பதியில் அதிவேகத்தில் வாகனம் ஓட்டினால் அபராதம்

திருப்பதி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் அதிவேகத்தில் வாகனங்களை ஓட்டினால் அபராதம் கட்டாயம் என போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


திருப்பதி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் அதிவேகத்தில் வாகனங்களை ஓட்டினால் அபராதம் கட்டாயம் என போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆந்திரம், கர்நாடகம், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து அதிக அளவிலான வாகனங்கள் திருப்பதிக்கு வருகின்றன. அதற்காக புறவழிச்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், தற்போது சொந்த வாகனங்களில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால் அவர்கள் அதிவேகத்தில் வாகனங்களை ஒட்டுகின்றனர். அதனால் நெடுஞ்சாலைகளில் விபத்துகள் அதிகரித்து வருகின்றன.
இவற்றைக் கட்டுப்படுத்த போக்குவரத்துத்துறை அதிவேகமாக வாகனம் ஒட்டுபவர்களைக் கண்டறிய ஸ்பீட் ஹாண்டர்' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர். நெடுஞ்சாலைகளில் இந்தக் கருவியை வைத்துக் கொண்டு, போக்குவரத்துத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபடுகின்றனர். குறிப்பிட்ட வேகத்தைக் காட்டிலும், அதிவேகமாக செல்லும் வாகனங்களின் புகைப்படம், அது சென்ற வேகம், அதன் எண் ஆகியவற்றுடன் ஒரு சீட்டு இந்தக் கருவியில் அச்சாகி வரும். அதன் அடிப்படையில், சம்மந்தப்பட்ட வாகன உரிமையாளரிடமிருந்து, அபராத தொகையை அதிகாரிகள் வசூல் செய்கின்றனர். நிற்காமல் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு இ-சலான் மூலம் பணம் வசூல் செய்யப்படும் என்று அதிகாரிகள் கூறினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com