இந்த வாரம் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தைத் தரும்?

12 ராசிக்காரர்களுக்குமான இந்த வார (ஆகஸ்ட் 31 - செப்டம்பர் 6) பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர்..
இந்த வாரம் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தைத் தரும்?

12 ராசிக்காரர்களுக்குமான இந்த வார (ஆகஸ்ட் 31 - செப்டம்பர் 6) பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். 

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

நினைத்த காரியங்கள் அனைத்தும் சுலபமாக நிறைவேறும். நண்பர்களால் பாராட்டப்படுவீர்கள். எதிரிகளும் அடங்கிப் போவார்கள். பொருளாதார வசதிகளில் முன்னேற்றம் காண்பீர்கள். குடும்பத்தினர் ஆதரவுக்கரம் நீட்டுவர். தெய்வ அனுக்கிரகம் கிடைக்கும். 

உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகரித்தாலும் அவற்றை குறித்த காலத்தில் செய்து முடிப்பீர்கள்.  வியாபாரிகள் வாடிக்கையாளர்களின் தேவைகளைப் புரிந்துகொண்டு அதற்கேற்ற விற்பனை முறைகளைக் கையாளுவீர்கள். விவசாயிகள் நல்ல விளைச்சலைக் காண்பீர்கள். பயிர்களில் பூச்சிகள் பாதிப்பு ஏற்படாது. 

அரசியல்வாதிகள் முரட்டுப் பிடிவாதங்களையும் முரணான யோசனைகளையும் தவிர்க்கவும். எதையும் வெற்றிகரமாக முடித்து  மேலிடத்தின் பாராட்டைப் பெறுவீர்கள். கலைத்துறையினரின் செயல்களில் சுறுசுறுப்பு அதிகரிக்கும்.  பெண்மணிகள் குடும்பத்தில் சந்தோஷத்தைக் காண்பீர்கள். மாணவமணிகள் படிப்பில் ஆர்வம் செலுத்தவும். பெற்றோரின் ஆதரவு குறைவாக இருப்பதால் உங்கள் கோரிக்கைகளை எடுத்துச்செல்ல வேண்டாம்.

பரிகாரம்: பெருமாள் கோயிலுக்குச் சென்று தாயாரை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 31, 01. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)

புதியவர்கள் அறிமுகமாவார்கள். அவர்களால் புதிய அனுபவம் உண்டாகும். பழைய கடன்கள் வசூலாகும். பண வருவாய் எதிர்பார்த்த அளவிற்கு மேல் இருக்கும். ஆன்மிக விஷங்களிலும் ஆலயத் திருப்பணிகளிலும் ஈடுபடுவீர்கள். வெற்றி தரும் பயணங்களை மேற்கொள்வீர்கள்.
  
உத்தியோகஸ்தர்களுக்கு சக ஊழியர்களின் ஆதரவினால் வேலைப்பளு குறையும். இருப்பினும் உங்கள் வேலைகளைப் புரிந்து கொண்டு நல்லபடியாக முடிக்கவும். வியாபாரிகளுக்கு இது முன்னேற்றகரமான காலகட்டமாகும். கூட்டாளிகளுடன் இணைந்து சிறப்பாகப் பணியாற்றுவீர்கள். விவசாயிகள் உடல் சோர்வைப் பொருட்படுத்தாமல் கடுமையாக உழைப்பீர்கள். 

அரசியல்வாதிகள் எதிலும் விழிப்புடன் இருந்து கட்சியில்  ஏற்படும் குழப்பங்களிலிருந்து விடுபடுங்கள். கலைத்துறையினர் புதிய தொழில் நுட்பத்தைப் புகுத்தித் தங்களின் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். பெண்மணிகள் புதிய ஆடை ஆபரணங்களை வாங்குவீர்கள். உற்றார் உறவினர்கள் உதவி கேட்டு வருவார்கள். மாணவமணிகள் தெளிந்த சிந்தனையுடன் கல்வியில் ஈடுபடுவீர்கள்.

பரிகாரம்: துர்க்கையம்மனை வழிபட்டு சிறப்புகளைக் கூட்டிக் கொள்வீர்கள். 

அனுகூலமான தினங்கள்: 31, 02.

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}

மிதுனம் (மிருகசீரிஷம்3-ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

தொழிலில் நிலவி வந்த தடைகள் விலகி நன்மைகள் அதிகரிக்கும். குடும்பத்தினரிடம் அன்பும் பாசமும் வளரும். உடன்பிறந்தோர் வழியில் சில மனக்கசப்புகள் ஏற்படலாம். வருமானம் வந்தாலும் அதற்கேற்ற செலவுகளும் இருக்கும். எவரிடமும் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம்.

உத்தியோகஸ்தர்கள் மீது மேலதிகாரிகளுக்கு ஏற்பட்ட மனக்கசப்புகள் நீங்கும். அலுவலகப் பணிகள் சுமுகமாக நடந்தேறும். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல் லாபகரமாகவே அமையும். புதிய சந்தைகளில் பொருள்களை விற்பீர்கள். விவசாயிகளுக்கு மகசூல் அதிகரிக்கும். பயிர்களில் பூச்சிக்கொல்லி மருந்துகளைப் பயன்படுத்தவும். 

அரசியல்வாதிகள் யாரிடமும் வீண் விரோதத்தை வளர்த்துக்கொள்ள வேண்டாம். திட்டமிட்ட பணிகளில் வெற்றி பெறுவீர்கள். கலைத்துறையினருக்கு இது குதூகலமான காலகட்டமாகும். புதிய ஒப்பந்தங்கள் லாபம் தரும்.

பெண்மணிகளுக்கு நெருங்கியவர்களுடன் சில விரோதங்கள் ஏற்படலாம். கவனமாக இருக்கவும்.  மாணவமணிகளின் கோரிக்கைகள் நிறைவேறும். விளையாட்டுகளில் கவனத்துடன் ஈடுபடவும்.

பரிகாரம்: காலையில் சூரிய நமஸ்காரம் செய்யுங்கள். 

அனுகூலமான தினங்கள்: 01, 02. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
கடகம் (புனர்பூசம்4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

எவரிடமும் அனாவசியமாகப் பேசவேண்டாம். "கொக்குக்கு ஒன்றே மதி' என்கிற ரீதியில் செயல்படுங்கள். பொருளாதாரம் எதிர்பார்த்த அளவுக்கு இருக்கும். ஆன்மிகத்தில் நம்பிக்கையுடன் ஈடுபடுவீர்கள். புதிய வீட்டுக்கு மாறும் எண்ணம் உள்ளவர்கள் தற்போது மாறிக் கொள்ளவும்.   

உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத நிம்மதி கிடைக்கும். மேலதிகாரிகளிடம் உங்களின் கோரிக்கைகளை எடுத்துச் செல்வீர்கள். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல் விஷயங்கள் சீராக முடிவடையும். விவசாயிகள் அதிக மகசூலைக் காண்பீர்கள். கடுமையாக உழைத்து நல்ல வருமானத்தைப் பெறுவீர்கள். 

அரசியல்வாதிகளின் அனைத்துக் காரியங்களும் சுலபமாகவே முடியும். கட்சியின் கட்டளைகளை செவ்வனே செய்து முடித்து நற்பெயர் எடுப்பீர்கள். கலைத்துறையினர் உற்சாகத்துடன் பணியாற்றுவீர்கள். முக்கிய முடிவுகள் எடுப்பதை இந்த காலங்களில் தவிர்க்கவும். பெண்மணிகள் குடும்பத்தில் அமைதியைக் காண்பீர்கள். கணவர் உங்களைப் புரிந்துகொண்டு நடப்பார். மாணவமணிகள் அதிக அக்கறையுடன் படிப்பீர்கள். அனைவரது பாராட்டையும் பெறுவீர்கள். 

பரிகாரம்: பெருமாள் தாயாரை வணங்கி வரவும். 

அனுகூலமான தினங்கள்: 31.03.

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
சிம்மம் (மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய)

வெற்றிகள் குவியும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப காரியங்கள் நிகழும். பெயர், புகழ் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சிறிய தூரப் பயணங்களால் நன்மைகள் உண்டாகும். உற்றார் உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். சமுதாயத்தில் நன்மதிப்பைப் பெறுவீர்கள். 

உத்தியோகஸ்தர்களுக்கு அனைத்து வேலைகளும் சந்தோஷமாக முடியும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். வியாபாரிகளுக்கு வியாபார ரீதியாக இருந்து வந்த அலைச்சல் டென்ஷன் குறையும். வருமானம் பெருகும். விவசாயிகளுக்கு விளைச்சல் அமோகமாக இருக்கும். கால்நடைகள் மூலம் நல்ல லாபத்தைக் காண்பீர்கள். 

அரசியல்வாதிகளுக்கு சமூகத்தில் அந்தஸ்தான பதவிகள் கிடைக்கும். உங்களின் பணியாற்றும் திறன் கண்டு கட்சி மேலிடம் பாராட்டும். கலைத்துறையினருக்கு பணவரவு திருப்திகரமாக இருக்கும். பெண்மணிகளுக்கு கணவரிடம் அன்பு அதிகரிக்கும். பொருளாதார நிலைமை நன்றாக இருக்கும். மாணவமணிகள் கடினமாக உழைத்து நல்ல மதிப்பெண்கள் பெறுவீர்கள். பெற்றோரின் ஆதரவு நன்றாக இருக்கும்.

பரிகாரம்: காலபைரவரை வணங்கி வர, நன்மைகள் கூடும்.

அனுகூலமான தினங்கள்:  31, 04. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

செய்தொழில் சிறப்பாக நடக்கும். எதிர்பாராத இடங்களிலிருந்து வாய்ப்புகள் தேடி வரும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்ப அதிக ஆதாயங்கள் கிடைக்கக்கூடிய வேலைகளை முதலில் செய்வீர்கள். கூட்டாளிகளை அரவணைத்துச் செல்லவும்.

உத்தியோகஸ்தர்கள் வேலைகளை முன்கூட்டியே செய்யாவிட்டால் மேலதிகாரிகளின் அதிருப்திக்கு ஆளாவீர்கள். சக ஊழியர்களின் உதவி கிடைக்கும். வியாபாரிகளைத் தேடி பல வகையிலும் லாபம் வரும். புதிய வாகனங்களை வாங்குவீர்கள். விவசாயிகளுக்கு மகசூல் குறையும். மாற்றுப்பயிர்களையும் பயிரிட்டால் லாபம் பெறலாம். 

அரசியல்வாதிகளுக்கு சமூகத்தில் மதிப்பு மரியாதை உயரும். வளர்ச்சிக்கான திட்டங்களை தீட்டுவீர்கள். கலைத்துறையினருக்கு அதிக முயற்சிகளுக்குப்பிறகே ஒப்பந்தங்கள் கைகூடும். பெண்மணிகள் ஆடை அணிகலன்கள் வாங்கி மகிழ்வீர்கள். மாணவமணிகளுக்கு இது சாதகமான நேரமாகும். விளையாட்டுப் போட்டிகளில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். 

பரிகாரம்: சனிக்கிழமையன்று சனிபகவானுக்கு நல்லெண்ணெய் தீபமேற்றி வழிபடவும்.  

அனுகூலமான தினங்கள்:  02, 04. 

சந்திராஷ்டமம்: 31, 01.

{pagination-pagination}

துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

பொருளாதார நிலைமை சீராக இருக்கும். எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றியுடன் முடியும். உங்கள் மதிப்பு உயரும். மனதிலிருந்த குழப்பங்கள் விலகித் தெளிவுகள் தென்படும். சிலருக்கு வீடு மற்றும் யோகம் உண்டாகும். நெருங்கியவர்களிடம் எச்சரிக்கையுடன் பழகவும்.  

உத்தியோகஸ்தர்களுக்கு சக ஊழியர்களின் ஆதரவு குறைவாகவே கிடைக்கும். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல் விஷயங்கள் சீராகவே இருக்கும். போட்டிகளுக்கு ஏற்றவாறு சாதுர்யமாகச் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். விவசாயிகள் தானிய உற்பத்தியை லாபகரமாகச் செய்து முடிப்பீர்கள். மாற்றுப்பயிர்களை உற்பத்திச்செய்து பலன் பெறலாம்.

அரசியல்வாதிகளுக்கு கட்சிப் பணிகளில் நாட்டம் குறையும். நண்பர்களின்ஆதரவும் குறைந்தே காணப்படும். கலைத்துறையினருக்கு சக கலைஞர்களே புதிய வாய்ப்புகளைத் தேடித் தருவார்கள். பெண்மணிகள் புதிய ஆடை அணிகலன்களை வாங்கி மகிழ்வீர்கள். தந்தைவழி உறவினர்களால் நன்மை அடைவீர்கள். மாணவமணிகள் படிப்பில் போதுமான அக்கறை செலுத்தவும்.  

பரிகாரம்: பிரதோஷத்தன்று சிவபெருமானையும் நந்தீஸ்வரரையும் வழிபடவும். 

அனுகூலமான தினங்கள்:  01, 05. 

சந்திராஷ்டமம்: 02, 03.

{pagination-pagination}

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

உறுதியுடன் செயல்பட வேண்டிய காலகட்டமிது. எதிலும் முன்னெச்சரிக்கையுடன் செயல்படவும். போட்டியாளர்களிடமிருந்து ஒதுங்கியிருப்பீர்கள். எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டாலும் அவைகளை ஈடுகட்டுவதற்கான பணவரவு உண்டாகும். தேக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு அனைத்து வேலைகளும் மகிழ்ச்சிகரமாக முடியும். ஊதிய உயர்வும் விரும்பிய இடமாற்றமும் கிடைக்கும். வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். பொருள்களின் விற்பனை நல்ல முறையில் நடக்கும். விவசாயிகள் உற்பத்திப் பொருள்களின் விற்பனையில் நல்ல லாபத்தைக் காண்பீர்கள். புதிய முதலீடு செய்ய முனைவீர்கள். 

அரசியல்வாதிகள்அனைத்து காரியங்களிலும் வெற்றி வாகைச் சூடுவீர்கள். சிரமமின்றி புதிய பதவிகளில் அமர்வீர்கள். கலைத்துறையினரின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும். பெண்மணிகள் பொருளாதாரத்தில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். கணவருடன் ஒற்றுமை கூடும். மாணவமணிகளுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். அதனால் எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.

பரிகாரம்: பார்வதி தேவியை தீபமேற்றி வழிபட்டு வரவும்.  

அனுகூலமான தினங்கள்: 03, 06.

சந்திராஷ்டமம்: 04, 05.

{pagination-pagination}
தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

தேவையற்ற விஷயங்களை கண்டு கொள்ளாமல் தங்கள் வேலைகளில் மட்டும் கவனம் செலுத்தவும். வருமானம் எதிர்பார்த்தபடி இருக்கும். உறவினர்கள் நண்பர்களிடம் அனுசரித்துச் செல்லவும். உடன்பிறந்தோரிடம்  மனக்கசப்புகள் ஏற்படாதவாறு அனுசரணையாக நடந்து கொள்ளவும்.

உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளை செவ்வனே செய்வார்கள். வெளியூர் பயணம் நிம்மதியாக அமையும். வியாபாரிகள் கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் கவனமாக நடந்து கொள்ளவும். கூட்டாளிகளின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பது நல்லது. விவசாயிகளுக்கு மகசூல் எதிர்பார்த்தபடி இருக்கும். கடன் வாங்கியாவது புதிய குத்தகை எடுக்கவும். 

அரசியல்வாதிகள் கட்சிப் பணிகளில் ஆர்வத்துடன் கலந்துகொள்வீர்கள். புதிய முயற்சிகளில் ஈடுபடுவது நல்லதல்ல. கலைத்துறையினருக்கு ஒப்பந்தங்கள் கைகூடும். ரசிகர்களின் ஆதரவு குறைந்திருக்கும். பெண்மணிகள் குடும்பத்தில் அனைவரையும் அனுசரித்துச் செல்லவும்.  மாணவமணிகள் கல்வியில் ஆர்வம் குறையாத வண்ணம் பாடங்களைப் படித்து பயிற்சி செய்யவும். 

பரிகாரம்: துர்க்கையையும் சனீஸ்வரரையும் வழிபட்டு வரவும்.  

அனுகூலமான தினங்கள்:  04, 05. 

சந்திராஷ்டமம்:  06.

{pagination-pagination}

மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

பிரச்னைகளைத் துணிச்சலுடன் எதிர்கொள்வீர்கள். தொழிலில் இடையூறு செய்பவர்களை சமாளிப்பீர்கள். சுறுசுறுப்புடன் காரியங்களில் ஈடுபடுவீர்கள். சிக்கனத்தைக் கடைப்பிடித்து புதிய முதலீடுகளில் ஈடுபடுவீர்கள். வெளியூருக்குக் குடும்பத்துடன் சென்று வருவீர்கள். 

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளிடம் ஒத்துழைப்போடு நடந்துகொள்ளவும். பணவரவு கூடும். வியாபாரிகள் படிப்படியாக முன்னேற்றம் அடைவீர்கள்.  கடன் கொடுப்பது, வாங்குவதைத் தவிர்க்கவும் . விவசாயிகள் புதிய முதலீடுகளில் ஈடுபடுவீர்கள். போட்டிக்குத் தகுந்தவாறு செயல்பட்டு லாபத்தைப் பெருக்குவீர்கள். 

அரசியல்வாதிகளின் பொதுச்சேவைக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும். சிலர் புதிய பதவிகளில் அமர்வீர்கள். கலைத்துறையினர் முன்னர் முடித்துக் கொடுத்த பணிக்கு தற்போது பணம் கைவந்து சேரும்.  பெண்மணிகள் குடும்பத்தில் ஒற்றுமையை காண்பீர்கள். இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். மாணவமணிகள் கல்வியில் அதிக கவனம் செலுத்துவார்கள். கடினப் பயிற்சிகள் செய்து பெரிய சாதனைகளுக்கு அடித்தளம் போடுவீர்கள்.

பரிகாரம்: விநாயகப் பெருமானை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்:  01, 04. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

கவலைகள் மறைந்து மகிழ்ச்சி நிறையும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்க முன்கோபத்தை அறவே ஒழிக்க வேண்டும். எதிலும் நிதானித்து செயல்படவும். உற்றார் உறவினர்களுடன் அன்பாகப் பழகவும். உடன்பிறந்தோர் வழியில் நிலவும் மனக்கசப்புகள் விலகி, அன்பு மேலோங்கும். 

உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளைச் செவ்வனே செய்து முடிப்பீர்கள். மேலதிகாரிகளின் பாராட்டுகளையும் சலுகைகளையும் பெறுவீர்கள். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்களில் சாதகமான சூழ்நிலை நிலவும். வாடிக்கையாளர்களைக் கவரும் திட்டங்களைத் தீட்டுவீர்கள்.  விவசாயிகள் உற்பத்திப் பொருள்களில் நல்ல லாபம் காண்பீர்கள். 

அரசியல்வாதிகள் தீட்டும் ரகசியத் திட்டங்கள் வெற்றி பெறும். புதிய பதவிகள் தேடி வரும். கலைத்துறையினர் உற்சாகத்துடன் பணியாற்றுவீர்கள். புதிய ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள்.  பெண்மணிகள் பெரியோர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடந்துகொள்ளவும். குடும்பத் தலைவரின் உடல்நலனில் அக்கறை எடுப்பது நல்லது. மாணவமணிகள் படிப்பில் முழுகவனம் செலுத்திப் படிக்கவும். 

பரிகாரம்: குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.  

அனுகூலமான தினங்கள்:  

31, 05. சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
மீனம்  (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

பணம் தாராளமாக புரளும் காலமிது. நண்பர்கள் உங்களுக்கு எல்லாவகையிலும் உதவுவார்கள். உங்களுக்குகீழ் பணிபுரிபவர்களால் உண்டாகும் பிரச்னைகளைச் சமாளிப்பீர்கள். குடும்பத்தில் அதிக ஈடுபாடு உண்டாகும். உடன்பிறந்தோரிடம் ஒற்றுமை நிலவும். 

உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலக வேலைகள் அனைத்தும் சமுகமாக முடியும். திருப்திகமரான வருமானம் கிடைக்கும். முன்னேற்றத்திற்கு தடையாக இருந்தவர்களை இனம் கண்டு விலக்குவீர்கள். வியாபாரிகள் யுக்தியுடன் செயல்பட்டு வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். விவசாயிகள் புதிய குத்தகைகளை நாடிச் செல்ல வேண்டாம். கையிருப்புப் பொருள்களைத் தக்கவைத்துக் கொள்ளவும்.

அரசியல்வாதிகளின் செயல்கள் அனைத்தும் சாதனைகளாக மாறும். மேலிடத்தின் பாராட்டு கிடைக்கும். கலைத்துறையினரின் விடாமுயற்சிகள் அனைத்தும் வெற்றியைத் தேடித்தரும். பெண்மணிகளுக்கு கணவருடனான ஒற்றுமை சீராகும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சி கிடைக்கும். மாணவமணிகள் கல்வியில் உயர்ந்த இடத்தைப் பெறுவதற்கு இது உகந்த காலமாகும். 

பரிகாரம்: சூரியபகவானை ஞாயிறன்று அர்ச்சனை செய்து வழிபடவும். 

அனுகூலமான தினங்கள்: 05, 06. 

சந்திராஷ்டமம்: இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com