இந்த வாரம் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தைத் தரும்?

12 ராசிக்காரர்களுக்குமான இந்த வார (டிசம்பர் 7 - டிசம்பர் 13) பலன்களை தினமணி ஜோதிடர்..
இந்த வாரம் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தைத் தரும்?

12 ராசிக்காரர்களுக்குமான இந்த வார (டிசம்பர் 7 - டிசம்பர் 13) பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்து பலனடைவோம். 

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

பேச்சைக் குறைத்துக்கொண்டு மௌனத்தைக் கடைப்பிடிக்கவும். உற்றார் உறவினர்களின் வருகை அதிகரிக்கும். ஆக்கபூர்வமான முயற்சிகளில் ஈடுபட இது உகந்த காலமல்ல. மனதில் உற்சாகம் குறைந்தே காணப்படும்.

உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலக வேலைகளில் இருந்த பிரச்னைகள் படிப்படியாகக் குறையும். மேலதிகாரிகளின் ஆதரவுடன் விரும்பிய இடமாற்றம், ஊதியம் பெறுவீர்கள். வியாபாரிகள் புதிய யுக்திகள் கையாள இது உகந்த நேரமல்ல. விவசாயிகளுக்கு நெல் விளைச்சல் நன்றாக இருக்கும். கால்நடைகளால் பலன் உண்டாகும்.

அரசியல்வாதிகள் தங்கள் முயற்சிக்கேற்ற பொறுப்புகளைப் பெறுவர். கட்சிப்பணியை செவ்வனே செய்வதால் பெயரும் புகழும் கூடும். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்களைச் செய்வதில் சில தடைகள் ஏற்படலாம். பெண்மணிகள் குடும்பத்தில்  மகிழ்ச்சியை காண்பார்கள். கணவரிடன் அன்பு மேலோங்கும். மாணவமணிகள் சீரிய முறையில் முயற்சி எடுத்து படித்தால்தான் நல்ல மதிப்பெண்கள் பெறமுடியும்.  கவனத்துடன் படிக்கவும்.

பரிகாரம்: பெருமாள்} தாயாரை வணங்கி நலன்கள் பல பெறவும். 

அனுகூலமான தினங்கள்: 8, 9. 

சந்திராஷ்டமம்: 7.

{pagination-pagination}

ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)

எந்தக் காரியத்தையும் சிந்தித்து செயல்படவும். நீண்டகாலமாக நிலுவையில் இருந்த வழக்குகள் சாதகமாக முடிவடையும். உடன்பிறந்தோர் வழியில் நன்மைகள் அதிகரிக்கும். தந்தை வழியில் நிலவிய பிணக்குகள் மறையும்.  

உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் முழு கவனம் செலுத்தவும். காலநேரங்களை அனுசரித்து உழைத்து பெரிய பொறுப்புகளைப் பெறக்கூடிய காலமிது. வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்கள் நன்றாக முடிவடையும். கூட்டாளிகளிடமிருந்து சற்று விலகியே இருக்கவும். விவசாயிகளுக்கு மகசூல் நன்றாக இருக்கும். உழைப்புக்கேற்ற லாபம் வந்து சேரும். 

அரசியல்வாதிகள் போட்டிகளைச் சந்தித்து தனக்கென ஓர் உயர்ந்த நிலையை அடையும் காலமிது. விடாது போராட்டங்களிலும் ஈடுபடுவீர்கள்.கலைத்துறையினரின் எண்ணங்கள் யாவும் ஈடேறும். எல்லாச் செயல்களையும் நேர்த்தியுடன் செய்து முடிப்பீர்கள். பெண்மணிகள் குடும்பத்தில் ஒற்றுமையை காண்பீர்கள். மாணவமணிகள் ஒருமித்த சிந்தனையுடன் படித்து நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.

பரிகாரம்: செவ்வாயன்று அங்காரகனையும் முருகப்பெருமானையும் வழிபடவும்.

அனுகூலமான தினங்கள்: 7, 11. 

சந்திராஷ்டமம்: 8, 9, 10.

{pagination-pagination}

மிதுனம் (மிருகசீரிஷம்3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

பண வரவு சுமாராக இருக்கும். குடும்பத்தில் மகழ்ச்சி குறைந்தே காணப்படும். உடன்பிறந்தோர் வழியில் சோதனைகளும் கருத்து வேறுபாடுகளும் காணப்படும். வாகனங்களில் செல்வோர் கவனத்துடன் நிதானமாகச் செல்லவும். 

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளால் கவனிக்கப்படுவீர்கள். போட்டித் தேர்வுகளில் வெற்றி என்பது சற்று கடினமே.வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்கள் லாபகரமாக அமையாது. புதிய முதலீடுகளில் ஈடுபட வேண்டாம். விவசாயிகளுக்கு விளைச்சல் சுமாராகவும் வருமானம் குறைந்தும் காணப்படும். நீர்ப்பாசன வசதிகளைப் பெருக்கிக் கொள்ளவும்.

அரசியல்வாதிகளுக்கு வருமானம் என்பது அரிதாகிவிடும். பதவிகளும் தேடி வராது. முக்கியமான பயணங்களை மேற்கொள்வீர்கள். கலைத்துறையினர் ஓரிரு ஒப்பந்தங்களைச் செய்வார்கள். ரசிகர்களை உற்சாகப்படுத்தி அவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். 

பெண்மணிகளுக்கு கணவருடன் பிணக்குகள் ஏற்படும். அதனால் ஒற்றுமையை பேணி காக்கவும். மாணவமணிகளின் முயற்சிக்குத் தகுந்தவாறுதான் மதிப்பெண்களைப் பெறமுடியும்.

பரிகாரம்: சனிக்கிழமைகளில் சனிபகவானையும் நவக்கிரகங்களையும் வழிபடவும். 

அனுகூலமான தினங்கள்: 8, 10. 

சந்திராஷ்டமம்: 11, 12.

{pagination-pagination}

கடகம் (புனர்பூசம்4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

உங்கள் செயல்கள் வெற்றியைத் தேடித் தரும். குடும்பத்தில் அமைதி நிலவும். சுபகாரியங்கள் நடக்கும். உடன்பிறந்தோர் வழியில் இருந்த பிணக்குகள் மாறி, சுமுக உறவு மலரும். உடல்நலத்திற்காகச் சிறிது செலவு செய்ய வேண்டி வரும்.

உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் பளு கூடினாலும் அவைகளை குறித்த நேரத்திற்குள் முடித்து விடுவீர்கள். மேலதிகாரிகளின் ஆதரவு சுமாராகவே இருக்கும்.  வியாபாரிகள் அதிக போட்டிகளைச் சந்திக்க நேரிடும். வரவு செலவு விஷயங்களில் கவனமாக இருந்தால் பிரச்னைகளைத் தவிர்க்கலாம். விவசாயிகளுக்கு விளைச்சலும் அவற்றின் விற்பனையும் அமோகமாக இருக்கும். புதிய குத்தகைகளை எடுக்கும் எண்ணங்கள் மேலோங்கும். 

அரசியல்வாதிகள் தங்கள் முயற்சிகளை சிரத்தையுடன் செயல்படுத்துவார்கள். தலைமையின் ஆதரவால் புதிய பதவிகள் கிடைக்கப் பெறுவார்கள். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவர். வருமானத்திற்கு குறைவு வராது. பெண்மணிகளுக்கு குடும்ப ஒற்றுமை மேலோங்கும். குழந்தைகளால் சந்தோஷமடைவீர்கள். மாணவமணிகளுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும்.  

பரிகாரம்:  பார்வதி தேவியை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்:  7, 11. 

சந்திராஷ்டமம்: 13.

{pagination-pagination}

சிம்மம் (மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய)

பொருளாதாரத்தில் இருந்து வந்த தடைகள் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தாண்டவமாடும். உறவினர்கள் ஆதரவுக்கரம் நீட்டுவர். பெயர், புகழ் வளரும். மூத்த சகோதர சகோதரிக்கு உடல் நலம் பாதிக்கப்படும். அவர்களுக்கு உதவி செய்வீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு விரும்பிய பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிட்டும். சக ஊழியர்களின் பாராட்டுகளும் கிடைக்கும். அலுவலகப் பயணங்களால் நன்மை உண்டாகும். வியாபாரிகள் பொருள்கள் விற்பனையில் கவனம் செலுத்தவும். விவசாயிகள் வயல் வரப்புப் பிரச்னைகளில் முடிவைக் காண்பீர்கள். கால்நடைகளால் கூடுதல் லாபம் உண்டாகும். 

அரசியல்வாதிகளிடம் கட்சி மேலிடம் கரிசனமாக நடந்துகொள்ளும். புதிய பொறுப்புகளும் தேடிவரும். கலைத்துறையினர் திறமைக்குத் தகுந்த அங்கீகாரம் பெறுவார்கள். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். 
பெண்மணிகள் குடும்பத்தில் ஒற்றுமையை காண்பார்கள். மாணவமணிகள் கல்வியில் அக்கறை காட்டுவார்கள். போதிய பயிற்சிகள் மேற்கொண்டு அதிக மதிப்பெண்கள் பெறுவர்.

பரிகாரம்: வளசரவாக்கம் வேங்கடசுப்ரமணியரை வழிபடவும். 

அனுகூலமான தினங்கள்: 8, 12. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}

கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

இடையூறுகளை புத்தி சாதுர்யத்துடன் சமாளிப்பீர்கள். வேலைத்தொந்தரவுகள் அதிகமாகவே இருக்கும். நண்பர்களின் உதவியுடன் திட்டமிட்ட வேலைகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். 

உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களிடம் ஒத்துழைப்போடு நடந்துகொண்டால் எதிர்காலத்தில் நன்மைகள் உண்டாகும். வியாபாரிகள் நல்ல லாபம் கிடைக்கும். கூட்டுத்தொழில் கூடாது. எவருக்கும் வாக்கு கொடுப்பதோ ஜாமீன் கையெழுத்துப் போடுவதோ கூடாது. விவசாயிகளுக்கு வருமானம் சற்று சிரமம்தான். பயிர் பராமரிப்புக்கு செலவு செய்வீர்கள். 

அரசியல்வாதிகள் தொண்டர்களின் எண்ணங்களைப் பூர்த்தி செய்வார்கள்.  வேலைகளில் அலைச்சல் ஏற்பட்டாலும் அவை சாதகமாகவே முடியும். கலைத்துறையினருக்கு அதிக வாய்ப்புகள் வராது. மனதில் சில சங்கடங்கள் இருந்துக்கொண்டே இருக்கும். 

பெண்மணிகள் கணவரிடம் ஒற்றுமையோடு இருப்பார்கள். குடும்பத்தினரையும் அனுசரித்துச் செல்லவும். மாணவமணிகள் வீண் வாக்குவாதங்களில் ஈடுபடாதிருத்தல் நல்லது. 

பரிகாரம்: வெள்ளியன்று தாயாரையும்  புதனன்று பார்த்தசாரதி பெருமாளையும் வழிபடவும். 

அனுகூலமான தினங்கள்: 9, 13.

சந்திராஷ்டமம்:  இல்லை.

{pagination-pagination}
துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

உங்கள் முயற்சிகள் நிறைவேறும். அலைச்சல்கள் குறையும். குழப்பங்கள் தீர்ந்துவிடும். வீண் பிரச்னைகளையும் வாக்குவாதங்களையும் தவிர்க்கவும். சிறு பயணங்களால் நன்மை உண்டாகும். உறவினர்களிடம் சுமுகமான உறவு நீடிக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு இருக்கும். சக ஊழியர்களிடம் மனம் விட்டுப் பழகுங்கள். சிலருக்கு நிம்மதி தரும் இடமாற்றங்களும் கிடைக்கும். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்கள் திருப்திகரமாக முடியும். விவசாயிகளுக்கு விளைச்சல் அதிகரிக்கும். வருமானமும் உயரும்.

அரசியல்வாதிகளைத் தேடி  புதிய பொறுப்புகள் வரும். பணிகளை ஓர் உத்வேகத்துடன் செய்து முடிப்பீர்கள். தொண்டர்களின் ஆதரவைத் தக்க வைத்துக் கொள்வீர்கள். கலைத்துறையினர் வாய்ப்புகளைத் தேடிச் செல்லாமலேயே தானாகவே தேடிவரும்.

பெண்மணிகளுக்கு கணவருடனான ஒற்றுமை அதிகரிக்கும். மாணவமணிகள் முன்கூட்டியே கல்வியில் அக்கறை எடுத்துப் படிப்பார்கள். தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும்.

பரிகாரம்: "ராம் ராம்' என்று ஜபித்தபடியே ஆஞ்சநேயரை சுற்றி வரவும். 

அனுகூலமான தினங்கள்: 9, 13. 

சந்திராஷ்டமம்:  இல்லை.

{pagination-pagination}

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

உங்கள் நீண்டகால எண்ணங்கள் நிறைவேறும். எதிர்பாராத செலவுகள் ஏற்படும். வருமானம் சுமாராகவே காணப்படும். கடின உழைப்பிற்குப் பிறகே செய்யும் வேலைகளில் வெற்றி கிடைக்கும். உறவினர்களின் ஆதரவு சுமாராகவே இருக்கும்.

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளிடம் சுமுகமான உறவை ஏற்படுத்திக் கொள்ளவும். சக ஊழியர்களால் சிறு தொல்லைகள் ஏற்படும். வியாபாரிகளுக்கு வியாபார விஷயங்களில் சிறு சறுக்கல்கள் உண்டாகும். கொடுக்கல் வாங்கல்கள் சுமாராகவே நடைபெறும். விவசாயிகளுக்கு மகசூலில் குறைவு இராது. போக்குவரத்துக்காக சில செலவுகளைச் செய்ய நேரிடும்.

அரசியல்வாதிகளின் பதவிக்கு நெருங்கிய நண்பர்கள் மூலமாகவே சில இடையூறுகள் ஏற்படலாம். மாற்றுக் கட்சியினரிடம் மனம் திறந்து பேச வேண்டாம். கலைத்துறையினர் புதிய  ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். பணவரவு சரளமாக இராது. பெண்மணிகள் ஆடம்பரப் பொருள்களை வாங்க விரும்புவீர்கள். 

மாணவமணிகளுக்கு படிப்பில் உற்சாகம் குறையும். பெற்றோரின் சொல்படி நடக்கவும். 

பரிகாரம்: குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 9, 10. 

சந்திராஷ்டமம்:  இல்லை.

{pagination-pagination}

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

எண்ணங்கள் சுமாராகவே ஈடேறும். குடும்பத்தில் மகிழ்ச்சி நீடித்து இராது. உற்றார், உறவினர்களின் அலட்சியப்போக்கு வேதனை அளிக்கும். உடன்பிறந்தோர் வழியில் கருத்து வேறுபாடுகள் வரலாம். வருமானத்திற்கு எந்தக் குறைவும் இல்லை.

உத்தியோகஸ்தர்கள் சற்று கூடுதலாக உழைப்பீர்கள். மேலதிகாரிகளின் கெடுபிடிகளைச் சந்திப்பீர்கள். வியாபாரிகளுக்கு வியாபாரம் சற்று மந்தமாகவே இருக்கும். புதிய முயற்சிகளைத் தள்ளிப்போடவும். விவசாயிகளுக்கு கொள்முதலில் லாபம் அதிகரிக்கும். நீர்ப்பாசன வசதிகளில் கவனம் செலுத்துவீர்கள். 

அரசியல்வாதிகள் எவரையும் பகைத்துக் கொள்ளாமல் நற்பெயர் எடுப்பீர்கள். கட்சி மேலிடத்தின் பாராட்டைப் பெறுவீர்கள். கலைத்துறையினருக்கு பணவரவு திருப்திகரமாக இருக்கும். பெண்மணிகள் தம் இல்லத்தில் நடக்கும் சுப நிகழ்ச்சிகளால் சந்தோஷமடைவர். குழந்தைகளின் நலனில் அக்கறை செலுத்துவர்.

மாணவமணிகள் சோம்பேறித்தனத்திற்கு இடம் தராமல் உழைத்தால்தான் நல்ல மதிப்பெண்கள் பெறமுடியும். 

பரிகாரம்: திங்களன்று அம்பாளையும் சனிக்கிழமையில் நவக்கிரகங்களையும் சுற்றி வரவும். 

அனுகூலமான தினங்கள்: 11, 12. 

சந்திராஷ்டமம்:  இல்லை.

{pagination-pagination}
மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

செல்வாக்கு கூடும். பணவரவு படிப்படியாக வளரும். உறவினர்கள், நண்பர்களால் காரிய அனுகூலம் உண்டாகும். பயணங்கள் மனதிற்கு இனிமையை கொடுக்கும். நெருங்கியவர்களுடன்  இருந்து வந்த விரோதங்கள் குறையும். வாகன யோகம் உண்டாகும். 

உத்தியோகஸ்தர்கள் தங்களின் வேலைகளைச் சிறப்பாகச் செய்து  முடிப்பார்கள். விரும்பத்தகாத நிகழ்ச்சிகளின் மூலம் விரும்பிய இடமாற்றங்கள் கிடைக்கும். வியாபாரிகளுக்கு பழைய பாக்கிகள் வசூலாகும். வாடிக்கையாளர்களின் வருகையால் விற்பனை அதிகரிக்கும். விவசாயிகளுக்கு நல்ல மகசூல் கிடைக்கும். புதிய குத்தகைகளை துணிந்து எடுக்கலாம். 

அரசியல்வாதிகளுக்கு சாதகமாக இருந்தவர்கள் எதிரிகளாக மாறும் நேரமிது. மேலிடப் பார்வையிலிருந்து தள்ளியிருங்கள். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள். ரசிகர்கள் ஆதரவு பெருகும். 

பெண்மணிகளுக்கு குடும்பத்தில் மதிப்பு உயரும். கணவரின் ஒற்றுமை அதிகரிக்கும். மாணவமணிகளுக்கு படிப்பில் சிறிய தேக்க நிலை உண்டாகும். நெருங்கியவர்களிடம் அன்பு, பாசம் மேலோங்கும்.

பரிகாரம்:  செய்வாயன்று பைரவரை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 8, 13. 

சந்திராஷ்டமம்:  இல்லை.

{pagination-pagination}

கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

பணப்புழக்கம் சுமாராகவே இருக்கும். கொடுத்தவாக்கைக் காப்பாற்ற பாடுபடுவீர்கள். உடல் ஆரோக்கியம் சீர்படும். மற்றவர்கள் பாராட்டும் வகையில் நடந்துகொள்ள பிரயத்தனப்படுவீர்கள். உறவினர்கள் உதவி செய்ய முன்வருவார்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலக வேலைகள் இழுபறியாகத்தான் போகும். சிலருக்கு உத்தியோகம் தொடர்பாக வெளியூர் செல்லும் வாய்ப்பு ஏற்படும். வியாபாரிகளுக்கு புதிய யுக்திகளைப் புகுத்தி வாடிக்கையாளர்களை கவர்வீர்கள். விவசாயிகளுக்கு திட்டமிட்ட காரியங்களில் தடையுடன் கூடிய வெற்றி கிடைக்கும். 

அரசியல்வாதிகள் உட்கட்சிப் பூசலுக்கு கவலை அடைவர். தொண்டர்களைச் சாந்தப்படுத்தும் உங்கள் முயற்சிகள் வீணாகும். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்களால் நல்ல வருமானம் வரும்.  

பெண்மணிகள் ஆடை அணிகலன்களை வாங்கி மகிழ்வார்கள். குழந்தைகளால் சிறு குழப்பங்கள் வரும் என்பதால் அவர்களிடம் கவனம் தேவை. மாணவமணிகள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். படிப்பில் போதிய அக்கறை தேவை.  

பரிகாரம்: வெள்ளிக்கிழமையில் மஹாலட்சுமியை நெய் தீபம் ஏற்றி வழிபடவும். 

அனுகூலமான தினங்கள்: 11, 12. 

சந்திராஷ்டமம்:  இல்லை. 

{pagination-pagination}

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

பொருளாதாரச் சூழல் சிறப்பாக இருக்கும். பேச்சில் கண்ணியம் கூடும். எடுத்த காரியங்களைச் சிறப்பாகச் செய்து புகழ் பெறுவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். உறவினர்கள் அனுசரணையாக இருப்பார்கள். செலவுகள் கட்டுக்குள் இருக்கும். 

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். சக ஊழியர்களும் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். வியாபாரிகள் புதுப்புது யுக்திகளைக் கையாண்டு வியாபாரத்தைப் பெருக்குவார்கள். விவசாயிகள் லாபங்களைக் காண்பார்கள். எண்ணெய் வித்துக்கள், கருப்பு நிற தானியங்களால் வருமானம் கூடும். 

அரசியல்வாதிகள் மேலிடத்தின் ஆதரவைப் பெறுவீர்கள். அதை முழுமையாக அனுபவிக்க விடாமல் சில இடையூறுகள் ஏற்படும். கலைத்துறையினரைத் தேடி, புதிய வாய்ப்புகள் வந்து சேரும். 
பெண்மணிகளுக்கு எதிலும் திருப்தி கிடைக்காத சூழல் நிலவினாலும் அதையெல்லாம் கடந்து விடுவீர்கள். மாணவமணிகள் படிப்பில் சிரம்மேற்கொண்டு உழைப்பதினால் எதிர்பாராத கேள்விகளுக்கும் சிறப்பாக பதிலளித்து நல்ல மதிப்பெண்கள் பெறுவீர்கள்.

பரிகாரம்: ஸ்ரீ லட்சுமி நரசிம்மரை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 12, 13. 

சந்திராஷ்டமம்:  இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com