பஞ்சவர்ணேஸ்வரர் கோயிலில் 10 லட்சம் ருத்ராட்ச அபிஷேகம்

அருள்மிகு திரிபுரசுந்தரி சமேத பஞ்சவர்ணேஸ்வரர் கோயிலில் 10 லட்சம் ருத்ராட்சங்களால் உருவான பஞ்சவர்ணேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
பஞ்சவர்ணேஸ்வரர் கோயிலில் 10 லட்சம் ருத்ராட்ச அபிஷேகம்

அருள்மிகு திரிபுரசுந்தரி சமேத பஞ்சவர்ணேஸ்வரர் கோயிலில் 10 லட்சம் ருத்ராட்சங்களால் உருவான பஞ்சவர்ணேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
திருவள்ளூர் அருகே உள்ள ஈக்காட்டில் பிரசித்தி பெற்ற திரிபுரசுந்தரி சமேத பஞ்சவர்ணேஸ்வரர் கோயில்  உள்ளது. இக்கோயிலில் கிராம நன்மைக்காகவும், கோயில் திருப்பணிகள் சிறப்பாக நடைபெறவும் வேண்டி 10 லட்சம் ருத்ராட்சங்களால் உருவான சிவலிங்கத்துக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜை மற்றும் சிறப்பு ஆராதனை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திருவள்ளூர் நகரம் மற்றும் சுற்றுப் பகுதி கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதில் 108 முறை "ஓம் நமசிவாய' எழுதிய பக்தர்களுக்கு ருத்ராட்சம் அணிவிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை தர்மகர்த்தா ரவிகுமார், அம்பத்தூரைச் சேர்ந்த அப்பர் திருக்கைலாய வாத்திய திருக்கூட அறக்கட்டளையினர், அப்பர் கண்டமணி சீர்தொண்டு பரவுதல் அமைப்பினர், ஈக்காடு கிராம இறைப்பணிக் குழுவினர் ஆகியோர் செய்திருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com