வைகுண்ட ஏகாதசி: ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறப்பு ஏற்பாடுகள் தீவிரம் 

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருச்சி ஸ்ரீரங்கத்தில் நாளை சொர்க்கவாசல் திறப்புக்கான..
வைகுண்ட ஏகாதசி: ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறப்பு ஏற்பாடுகள் தீவிரம் 

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருச்சி ஸ்ரீரங்கத்தில் நாளை சொர்க்கவாசல் திறப்புக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. 

108 திவ்ய தேசங்களில் புகழ்பெற்ற வைணவத் தலமான ஸ்ரீரங்கத்தில் பகல்பத்து உற்சவம் கடந்த 8-ம் தேதி தொடங்கியது. விழாவில் இன்று மோகினி அலங்காரத்தில் நம்பெருமாள் பக்தர்களுக்குக் காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் எனும் பரமபதவாசல் நாளை காலை 5.15 மணிக்கு திறக்கப்படுகிறது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. வைகுண்டக் கதவுகள் திறந்து பரந்தாமன் தரிசனம் கிடைத்தால் மறுபிறவி இல்லை என்பது பக்தர்களின் நம்பிக்கை. 

ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா வெகு விமரிசையாக நடைபெற உள்ளதால், பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதற்காக ஸ்ரீரங்கத்தில் 4 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ஆங்காங்கே தற்காலிக பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com