கும்பகோணத்தில் உள்ள சிவாலயங்களில் ஆருத்ரா சிறப்பு தரிசனம்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் 26-வது தலமாக, திருஞானசம்பந்தர்..
கும்பகோணத்தில் உள்ள சிவாலயங்களில் ஆருத்ரா சிறப்பு தரிசனம்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் 26-வது தலமாக, திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோரால் பாடல் பெற்றதாகவும், உலகப் புகழ்பெற்ற மகாமகத் பெருவிழாவின் பிரதான திருக்கோயிலாகவும் விளங்கக்கூடிய, ஸ்ரீ ஆதிகும்பேஸ்வரர் திருக்கோயில் ஆருத்ரா தரிசன விழாவில், இப்பகுதியிலுள்ள சிவாலய ஸ்ரீநடராஜ பெருமான் சந்திப்பு நடைபெற்றது.

இவ்விழாவில், கும்பகோணத்தில் உள்ள அருள்மிகு 1-ஆதிகும்பேஸ்வரர், 2-நாகேஸ்வரர், 3-சோமேஸ்வரர், 4-அபிமுகேஸ்வரர், 5-காசிவிஸ்வநாதர், 6-ஆதிகம்பட்ட விஸ்வநாதர், 7-கொட்டையூர் கோடிஸ்வரர், 8-கௌதமேஸ்வரர், 9-பாணபுரீஸ்வரர், 10-ஏகாம்பரேஸ்வரர் [காளியம்மன்], 11-காளகஸ்தீஸ்வரர் ஆகிய சிவாலயங்களில் மார்கழி மாத திருவாதிரை தினத்தினையொட்டி இரவு ஸ்ரீநடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிஷேகமும் அதிகாலையில் சிறப்பு அலங்காரத்தில் ஆருத்ரா தரிசனமும் நடைபெற்றது  

அதனைத்  தொடர்ந்து ஆதிகும்பேஸ்வரர் திருக்கோயில் அருள்மிகு நடராஜப் பெருமான் கீழரத வீதியில் கிழக்கு நோக்கி எழுந்தருள, கும்பகோணத்திலுள்ள மகாமகம் விழாவில் தொடர்புடைய இதர சிவாலய ஸ்ரீநடராஜ மூர்த்திகள் இரட்டை வீதியாக வலம் வந்து ஸ்ரீஆதிகும்பேஸ்வர ஸ்வாமி திருக்கோயில் நடராஜ பெருமானுடன் சந்திப்பு  வைபவம் மிகச் சிறப்பாக  நடைபெற்றது.  

இவ்வருடம் பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க, இப்பகுதியிலுள்ள சிவாலயங்களில் ஸ்ரீநடராஜ மூர்த்தங்கள் அனைத்தையும் ஏககாலத்தில் ஒரே இடத்தில் தரிசிக்கும் வகையில் திருக்கோயில்களின் நிர்வாகிகள் முயற்சியினாலும் மற்றும் ஸ்ரீமந்திரபீடேஸ்வரி பக்தர்கள் சார்பிலும் இவ்விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

- குடந்தை ப.சரவணன் 9443171383
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com