திருமலையில் வரும் 29-இல் பெரிய ஜீயர், சின்ன ஜீயர் சாதுர்மாஸ்ய தீட்சை தொடக்கம்

திருமலையில் வரும் 29-ஆம் தேதி பெரிய ஜீயர் சுவாமிகள் சாதுர்மாஸ்ய தீட்சையை தொடங்க உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருமலை தேவஸ்தான ஜீயர்கள்.
திருமலை தேவஸ்தான ஜீயர்கள்.

திருமலையில் வரும் 29-ஆம் தேதி பெரிய ஜீயர் சுவாமிகள் சாதுர்மாஸ்ய தீட்சையை தொடங்க உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
இந்து சனாதன வைதிக தர்மத்தின்படி ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி உள்ளிட்ட மாதங்களில் ஆச்சார்ய புருஷர்கள் தங்களின் ஸ்நானம், ஜபம், ஹோமம், விரதம், தானம் உள்ளிட்டவற்றை உலக நன்மைக்காக நடத்துவது வழக்கம். 
வைணவ மகா குரு ஸ்ரீமத் ராமாநுஜரின் வம்ச பாரம்பரிய ஆசாரத்தில் ஒரு பாகமாக வியாச பௌர்ணமிக்கு மறுநாளிலிருந்து சாதுர்மாஸ்ய விரத சங்கல்பத்தை மேற்கொள்வது மரபு. 
அதன்படி, ஸ்ரீமத் ராமாநுஜரால் உருவாக்கப்பட்ட திருமலை úக்ஷத்திர சம்பிரதாயத்தை கடைப்பிடித்து வரும் திருமலை மடத்தைச் சேர்ந்த பெரிய ஜீயர் மற்றும் சின்ன ஜீயர் தங்கள் சீடர்களுடன் இணைந்து ஜூலை 29-ஆம் தேதி திருக்குளக்கரையில் உள்ள வாரக சுவாமியை முதலில் தரிசித்து திருக்குளக்கரையில் புனித நீராடி ஏழுமலையான் கோயிலுக்கு வருவர். 
ஏழுமலையான் கோயில் முன் அவரை தேவஸ்தான செயல் அதிகாரி உரிய மரியாதை அளித்து வரவேற்று கோயிலுக்குள் அழைத்துச் செல்வார். அதன்பின் அவர்களுக்கு ரங்கநாயகர் மண்டபத்தில் ஏழுமலையானுக்கு சாற்றப்பட்ட மேல்சாட் வஸ்திரம் மற்றும் நூல் வஸ்திரம் இரண்டையும் தேவஸ்தான அதிகாரிகள் அளிப்பர். அதன்பின் ஜீயர்கள் இருவரும் தங்கள் சாதுர்மாஸ்ய தீட்சையை தொடங்குவார்கள் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com