வைத்திய வீரராகவ பெருமாள் கோயில் ஆனி தெப்போற்சவம்

திருவள்ளூர் வைத்திய வீரராகவ பெருமாள் கோயிலில் ஆனி மாத தெப்ப உற்சவத்தை முன்னிட்டு முதல் நாள் விழாவில் புண்ணிய தீர்த்த குளத்தில் கொட்டும் மழைக்கிடையே வைத்திய வீரராகவர் ஸ்ரீதேவி,
திருவள்ளூர் வைத்திய வீரராகவர் கோயில்  ஆனி உற்சவத்தின் முதல் நாளில், கோயில் குளத்தில் வண்ண விளக்குகளுடன் வலம்  வந்த  தெப்பம். (உள்படம்) சிறப்பு  அலங்காரத்தில்  ஸ்ரீதேவி  பூதேவி சமேத  வைத்திய வீரராகவர்.
திருவள்ளூர் வைத்திய வீரராகவர் கோயில்  ஆனி உற்சவத்தின் முதல் நாளில், கோயில் குளத்தில் வண்ண விளக்குகளுடன் வலம்  வந்த  தெப்பம். (உள்படம்) சிறப்பு  அலங்காரத்தில்  ஸ்ரீதேவி  பூதேவி சமேத  வைத்திய வீரராகவர்.

திருவள்ளூர் வைத்திய வீரராகவ பெருமாள் கோயிலில் ஆனி மாத தெப்ப உற்சவத்தை முன்னிட்டு முதல் நாள் விழாவில் புண்ணிய தீர்த்த குளத்தில் கொட்டும் மழைக்கிடையே வைத்திய வீரராகவர் ஸ்ரீதேவி, பூதேவியுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 
திருவள்ளூரில் 108 திவ்ய தேசங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற வைத்திய வீரராகவர் திருக்கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் 3 நாள்கள் ஆனி அமாவாசையையொட்டி தெப்ப உற்சவம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு, ஆனி தெப்ப உற்சவம் வியாழக்கிழமை (ஜூலை 12) தொடங்கியது. இதையொட்டி காலையில் உற்சவருக்கு முத்தங்கி சேவையும், மாலை 4 மணிக்கு உற்சவருக்கு திருமஞ்சனம் நிகழ்ச்சியும் நடைபெற்றது. 
அதன்பின் கொட்டும் மழைக்கு இடையே மாலை 6 மணிக்கு புண்ணிய தீர்த்தமான தெப்பக்குளத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக வீரராகவர் எழுந்தருளினார். தொடர்ந்து, சிறப்பு பூஜைகள் முடிந்ததும், பூக்களால் அலங்காரம் செய்யப்பட்ட தேரில் மூன்று முறை தெப்பக்குளத்தை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர், அங்கிருந்து திருக்கோயிலுக்கு புறப்பட்டார்.
இந்த விழாவில் கலந்து கொண்டு வழிபட்டால் தீராத நோய்கள் அனைத்தும் தீரும் என்பதோடு, சகலவிதமான செளகரியங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம் ஆகும். இதற்காக பக்தர்கள் நேர்த்திக் கடனை செலுத்தும் வகையில் உப்பு, கரும்பு, வெல்லம், பால் போன்றவைகளை தீர்த்தக் குளத்தில் கரைத்து வழிபாடு செய்தனர். இந்த விழாவைக் காண சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் ஆந்திரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் திரளாக வந்து கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். 
இதேபோல், வெள்ளிக்கிழமையும் (ஜூலை 13) சனிக்கிழமையும் (ஜூலை 14) பெருமாள் மூலவர், உற்சவர் முத்தங்கி சேவையும், கனகவல்லி தாயார் மூலவர், உற்சவர் முத்தங்கி சேவையும் நடைபெற இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com